• Please use an working Email account to verify your memebership in the forum

ஜுலை 23

R

Ravanan

Guest
View attachment View attachment View attachment

ஜுலை - 23, கேப்டன் லட்சுமி நினைவு தினம்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பெண் விடுதலைப் போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமானவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்குரைஞர் டாக்டர் S.சுவாமிநாதன் அவர்களுக்கும், அம்மு சுவாமிநாதன் அவர்களுக்கும் மகளாக 1914 அக்டோபர் 24-ம் தேதி சென்னையில் பிறந்தவர் கேப்டன் லக்க்ஷ்மி அவர்கள்.
● சுதந்திரப் போராட்ட வீரர்.
● அரசியல் அமைப்பு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
● 1938-ல், மருத்துவப்படிப்பை முடித்தார். மகளிருக்கான மருத்துவ இயலில் டிப்ளமாவும் முடித்தார்.
● 1940-ல் சிங்கப்பூரில் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.
●1943-ல் ஐ.என்.ஏ.வின் ஒருபகுதியான ஜான்சிராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
நேதாஜி ஆசாத் ஹிந்த் அரசில், மகளிர் & சுகாதாரத்துறை அமைச்சராகப பொறுப்பேற்றார் (ஒரே ஒரு பெண் அமைச்சர்).
●1943-45 வரை INA பட்டாளத்துடன் மலாயாவிலும், பர்மாவிலும் பணி செய்தார்.
● 1945-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.
● 1945-46 வரை பர்மாவில் அரசியல் பணிகளிலும், மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
● 1947 -ல் லாகூரில் கர்னல் பிரேம்குமார் சைகலை திருமணம் செய்து கொண்டார்.
● 1947-71 வரை கான்பூரில் மருத்துவப்பணி செய்தார்.
● 1971-ல் நடைபெற்ற இந்தியா-பங்களாதேச எல்லைப்போரில் மருத்துவ சேவை செய்தார்.
● 1981-ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரானார்.
● 1998-ல் இந்திய அரசிடமிருந்து "பத்மபூஷன்" விருது பெற்றார்.
● 2002-ல் இந்திய குடியரசுத் தேர்தலில் போட்டியிட்டார்.
○ கான்பூரில் மருத்துவமனை வைத்து மருத்துவப் பணி செய்தார்.
○ இரண்டு மகள்கள் உள்ளனர்
○ மூத்தவர் - சுபாசினி அலி, CPI(M)-ன் மத்தியக்குழு உறுப்பிர்.
2-வது மகள் அனீசு - தில்லியில் சார்ட்டர்டு அக்கவுண்டர்.
● 2012 - ஜுலை 23 அன்று கான்பூரில் மறைந்தார்.
 
R

Ravanan

Guest
தமிழ்சமூகத்தின் கொடைத்தன்மைக்கு இலக்கணமாகத் திகழும் பாரி மன்னனின் பரம்புமலை.
பரம்புமலை என்ற பிரான்மலை...,

இந்துக்களுக்கு மங்கைபாகநாதசாமி தேனம்மை வாழ்வதாக நம்பப்படும் புண்ணியதலமாகவும்...

இஸ்லாமியர்களுக்கு இறைநேசர் ஷைகு அப்துல்லா அவர்களின் தர்ஹா உள்ள புனித இடம்...

நமக்கோ ....
இயற்கை எழில்கொஞ்சும்....
லட்சக்கணக்கான மரங்கள் நிறைந்த
அடர்ந்த வனம்...
பல லட்சக்கணக்கான உயிர்கள் வாழும் பல்லுயிர்பெருக்கத்தின் கர்ப்பப்பையை சுமந்திருக்கும் தாய்....

திருப்பத்தூர், சிங்கம்புணரி பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சுத்தமான காற்றை வழங்கும் நுரையீரல்...

பிரான்மலையின் மக்களுக்கோ
அவர்களின் அடையாளம் ...









பிரான்மலை கோட்டையை தகர்க்க நினைத்த ஆங்கிலேயர்களை விரட்டியடித்த நாள் 23.07.1801....
18.07.1801 அன்று கர்னல் இன்ஸ் தலைமையிலான ஆங்கிலேயப் படைகளுக்கும் , நமது படைகளுக்கும் பிரான்மலையில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயப்படை தோற்கடிக்கப்பட்டு நாம் வெற்றிபெற்றோம்...
பிரான்மலை தந்த தோல்வியை தாங்க முடியாத
கர்னல் இன்ஸ் மீண்டும் பிரான்மலை கோட்டையை
தகர்க்க திட்டமிட்டபொழுது,
துவக்கத்திலேயே நமது படைகள் ஆங்கிலேயப்படைகளை விரட்டியடித்த நாள் 23.07.1801..,.
ஆதாரம்: மருதுபாண்டிய மன்னர்கள்... பக்கம்628
ஆசிரியர். திரு.மீ.மனோகரன்

View attachment
 
Top