• Please use an working Email account to verify your memebership in the forum

MS Dhoni

R

Ravanan

Guest
View attachment


லேட்டஸ்ட் தேசத்தியாகி தோனி!

அந்த கட்சி இந்த கட்சி என்றில்லாமல் எல்லோரும் ஒரே குரலில் அவர் நாட்டுக்கு பெரும் சேவை செய்து விட்டதாக முழங்குகின்றார்கள். மணிரத்னம் இந்த தேசத்துக்கு என்ன மாதிரி சேவையும் தியாகமும் செய்தாரோ அதையேதான் தோனியும் செய்தார். தமது போலி நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஏற்கனவே போலி தேசிய வெறியூட்டப்பட்டு கிடக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் மூளையில் வெறியின் டிகிரியை மேலும் உசுப்பேத்தினார். டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் துணை ராணுவப்படையில் கவுரவ லெப்ட்டினன்ட் கர்னல் என்ற பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் லட்சக்கணக்கான தன் விளையாட்டு ரசிகர்களின் விளையாட்டு ரசிகமனநிலை என்ற எல்லையை தாண்டி, மதச்சார்பற்ற இந்த நாட்டின் ராணுவத்தை இந்துத்துவா ராணுவமாக அடையாளப்படுத்த முயற்சிக்கும் இந்துத்துவா அரசியலை நியாயப்படுத்தும் அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் ரசிக மனநிலையை அடையாள அரசியல் மனநிலைக்கு தளம் மாற்ற துணை போனார்.

கிரிக்கெட் ஏற்கனவே விளையாட்டு என்ற நிலையில் இருந்து பணம்காய்க்கும் சூதாட்ட மரம் என்ற நிலைக்கு உருமாறி 25 வருடங்களுக்கும் மேல் ஆகின்றது. இல்லை என்போர் விஜய் மல்லையாவை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். தவிர அரை நிர்வாணத்துடன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் ஆட வந்தது எப்போது என்றும் பின்னோக்கி சென்று சிந்திக்க வேண்டும். 2019 ஜூன் மாதம் நடந்த உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாட வந்த தோனி விக்கெட் கீப்பிங் க்ளவுஸில் துணை ராணுவப்படையின் logoவை அணிந்து ஆட வந்தார், அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக துள்ளிக்குதித்து தோனிக்கு ஆதரவாக வந்தவர்கள் போலி தேச பக்தர்களும் வலதுசாரி இந்துத்துவாவாதிகளும் பிஜேபியில் இல்லாமல் இருந்த இந்துத்துவா மனநிலை கொண்ட அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் ரசிகர்களும்தான் என்பதை மறக்க முடியாது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த அடையாளத்துடன் களத்தில் இறங்க அனுமதிக்க மாட்டோம் என்று கறாராக உத்தரவிட்டதையும் மறக்க முடியாது.

எது எப்படி போனா என்ன, தோனி நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரர் அல்லவா என்று நண்பர்கள் கேட்கக்கூடும். முகமது அலி ஓஹியோ நதியில் தனது பதக்கத்தை ஏன் வீசி எறிந்தார் என்பதை வரலாறு சொல்கின்றது, அதை நண்பர்கள் வாசிக்க வேண்டும்.
 
Top