• Please use an working Email account to verify your memebership in the forum

Did you know

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து கடலினுள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினம் தோறும் கடல் பகல் 1 மணிமுதல் இரவு 1000 மணி கடல் உள் வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழி பட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைதந்துள்ளன. இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடையாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடிமரத்தின் உச்சியைத் தொடும். பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து, இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு அந்தி முதல் மீண்டும் கரை நோக்கித் திரும்புகின்றனர்.
 
Top