• Please use an working Email account to verify your memebership in the forum

வெட்டுகிளி படையெடுப்பு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

உலக உயிரினங்களின் வாழ்வும் செயலும் உணவு சங்கிலியோடு பின்னி பிணைந்தது.. தாவரங்களை பூச்சிகளும், தாவர உண்ணி விலங்களும் உண்ண வேண்டும்.. இந்த பூச்சிகளையும் புழுக்களையும் பறவைகளும் ஊர்வனவும் உண்ண வேண்டும். இந்த பறவைகள் ,ஊர்வன, தாவர உண்ணிகளை ஊன் உண்ணிகள் உண்ண வேண்டும் என்பது இயற்கையின் நியதி.. இதில் எந்த இடத்தில் சங்கிலி தொடர் மாற்றம் பெற்றாலோ அல்லது உயிரினங்களின் எண்ணிக்கை பெருகினாலோ பாதிப்பு அனைத்து உயிர்களுக்குமே...

இந்த வெட்டுகிளி படையெடுப்பு ஆப்ரிக்காவில் ஆரம்பித்து இந்தியாவை அடைந்துள்ளது.. ஒரு நாளில் 150 கி.மீ பயணம் செய்து 35000 உண்ணும் உணவை அழித்துள்ளது..

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.. ஒன்று அவற்றிற்கு போதுமான உணவு அதாவது தாவரங்கள் கிடைக்காமல் புதிய இடம் நோக்கிய படையெடுப்பை நிகழ்த்தியிருக்கலாம்..

இரண்டு இயற்கையாகவே அவற்றை கட்டுப்படுத்தும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்..

இந்த இரண்டு காரணங்களுக்கும் மனிதனே காரணி ஆவான்.. இன்று அதன் விளைவை எதிர்கொள்பவனும் மனிதனே.. இயற்கையின் விளையாட்டை பார்த்தீர்களா.. எவ்வளவு நுணுக்கமான படைப்பு...
 
Top