Reputation:
சரி என்றோ தவறு என்றோ முழுமையாக சொல்ல முடியாது.. கொள்கை , அந்த கொள்கையை அடைய ஒரு இலக்கு. கொள்கையே ஆணிவேர். இவற்றை அடையவோ அல்லது வளர்க்கவோ ஒரு கட்சியோ அல்லது இயக்கமோ தேவைப்படுகிறது. அந்த கட்சியும் அந்த பணிகளை செய்கிறது. சில காலம் அந்த கட்சி சரியான பாதையில் பயணிக்கலாம்.. தவறும்பட்சத்தில் கொள்கை சார்ந்து விவாதிக்கும் அரசியல் ஆரோக்கியமான அரசியல். அல்லது அவர்களின் சித்தாந்தம் மக்களுக்கு பயனாளிக்குமா என்பதை ஆராய்ந்து விவாதிக்கலாம். ஆனால் ஒருநடைமுறை சிக்கல் என்னவெனில் ஒரே சித்தாந்தத்தில் பல கட்சிகள் என இங்கு உண்டு. உதாரணமாக திராவிடகட்சிகள் மதிமுக, திமுக, அதிமுக, தேமுதிக என பல உண்டு. கம்யூனிஸ்ட்களில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்ஸிஸ்ட்& லெனின் கம்யூனிஸ்ட் என இங்கு உண்டு. இவர்கள் ஒருவருக்கொருவர் சித்தாந்தத்தை விமர்ச்சக்க முடியாது. அப்படி விமர்ச்சனம் செய்தால் அவர்களின் ஆணிவேர் ஆட்டம் காணும். எனவே இங்கே கட்சியின் நடைமுறையை மட்டுமே விமர்சனம் செய்ய இயலும். ஒரு சித்தாந்தமும் இன்னொரு சித்தாந்தமுமே இங்கு ஆரோக்கியமாக மோத முடியும்..ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறை கூறி வாக்கு சேகரிப்பது சரியா?தவறா?