• Please use an working Email account to verify your memebership in the forum

போராடுவோம் வாங்க

R

Ravanan

Guest
இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்...

ஆமா ஆமாம்... வாங்க போய் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்...

அது இல்லைங்க...

அப்ப... பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க.. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா நிவாரண நிதிக்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்

அது இல்லைங்க...

அப்ப வாங்க... மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடும்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க ...தமிழகத்திற்கு சேர வேண்டிய GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... மருத்துவப் படிப்பில் OBC இட ஒதுக்கீடு கொடுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... கொரோனா காலத்திலும் நீட் தேர்வு வைக்க அடம்பிடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்...

அது இல்லைங்க...

அப்ப வாங்க... சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை நீக்கிய மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்...

அது இல்லைங்க...

சரி அதை விடுங்க... மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வாங்கும் தமிழக அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்..

அது இல்லைங்க...

சரி வாங்க.. கொரோனா மருத்துவ உபகரணங்களில் கூட ஊழல் செய்யும் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்..

அது இல்லைங்க...

சரி வாங்க.. கொரோனா காலத்தில்கூட , மத்திய அரசே டெண்டர்களை ரத்து செய்யும் அளவுக்கு ஊழல் செய்யும் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்...

அது இல்லைங்க...

சரி வாங்க... அமைச்சர்கள் முதல் IAS அதிகாரிகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அளவுக்கு சென்ற பிறகும், 3 நாள்...10 நாள் என்று வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க...

அப்ப வேற எதுக்கு தாங்க போராடணும்...?

இந்து கடவுளை தவறாக பேசியவர்களுக்கு எதிராக போராடணுங்க...

முதல்ல இந்துனா யாரு?
 
Top