• Please use an working Email account to verify your memebership in the forum

நாயக்கர் பேரரசு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நாயக்கர் கால ஆட்சியில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழகம் செழித்ததா அல்லது வீழ்ந்ததா? இதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

விஜயநகர பேரரசு:
இந்திய வரலாற்றில் மௌரிய பேரரசு, சுங்க பேரரசு, விஜயநகர பேரரசு மற்றும் மராட்டிய பேரரசு ஆகிய நான்கும் ஒரு ஒற்றுமை கொண்டவை.. இவை அனைத்தும் மனுதர்மத்தை காக்கவும் பிராமணியத்தை காக்கவும் உருவாகிய அரசுகள் என்பது இதன் வரலாறு படித்தவர்களுக்கு எளிதில் விளங்கும்.. அதில் ஒன்றான விஜயநகர பேரரசு 1329 இல் வித்யாரணிய தீர்த்தகர் என்னும் பிராமணரின் வழிகாட்டுதலின் பேரில் ஹரிகரன் மற்றும் புக்கர் என்பவர்களால் துங்கபத்ரா ஆற்றங்கரையில் தோற்றுவிக்கப்படுகிறது.. இந்த அரசின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்யாரணியரின் பங்கு அளப்பரியது என்கிறது வரலாற்று நூல்கள்.. குறுகிய காலத்திலேயே இவர்கள் ஹம்பி பகுதியை கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்த தொடங்கினர்.. 1362 ஆண்டிற்குள் இன்றைய கர்நாடக ஆந்திர பகுதிகளை வென்ற இவர்கள் 1362 இல் சம்பூர்வர்கள் மேல் போர் தொடுத்து வெற்றி பெறுகிறார்கள்.. சோழர்களின் வீழ்ச்சிக்கு பின் திருப்பதி முதல் திருச்சி வரை ஆண்டவர்கள் இந்த சம்பூர்வர்களே.. திருச்சி முதல் ராமநாதபுரம் வரை மதுரை சுல்தான்களும், ராமநாதபுரம் முதல் குமரிவரை பாண்டியரும் ஆண்டனர்.. சம்பூர்வர்களை தொடர்ந்து 1371 இல் சுல்தான்களையும் வீழ்த்தியது விஜயநகர பேரரசு.. ஆனால் 1520வரை பெறும் போராட்டத்திற்கு பின்பே பாண்டியரின் பகுதியை கைப்பற்றி முழுமையாக தமிழகத்தை கைப்பற்றியது..

தமிழகத்தை கைப்பற்றிய விஜயநகர அரசு தன்னிடம் பணியாற்றிய விசுவநாத நாயக்கரின் கட்டுப்பாட்டில் மதுரையை ஒப்படைத்தது.. அதே போல் சேவப்ப நாயக்கரிடம் தஞ்சையை ஒப்படைத்தது.. இதன் பின்பே மதுரை நாயக்கர்களும் தஞ்சை நாயக்கர்களும் தோன்றினர்..

நாயக்கர் ஆட்சிகாலம்:

நாயக்கர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து அதன் தலைமை பொறுப்பை பாளையக்காரர்களிடம் கொடுத்தனர்.. அவர்களே அரசர் போல் செயல்பட்டனர்.. போர்காலத்தில் மட்டும் நாயக்க பேரரசுக்கு படை உதவி செய்ய வேண்டும்.. அதே போல் வரியில் மூன்றில் ஒரு பங்கு பேரரசுக்கு பாளையக்காரர்கள் செலுத்த வேண்டும்.. இதுவே கட்டுப்பாடு.. View attachment

அந்த 72 பாளையத்தில் 52 பாளையங்களை நாயக்கர் மன்னர்களும், 12 பாளையங்களை தமிழரும், 8 பாளையங்களை கர்நாடக கம்மவர்களும் ஆண்டனர்.. இதில் கொங்கு பகுதியை கவுண்டரும், தென்பகுதியை கள்ளர் மற்றும் மறவரும், ராமநாதபுரத்தை அம்பலகாரரும், திருச்சி பகுதியை மறவராயரும் ஆண்டனர். இவர்களே தமிழர்கள்..

நாயக்கர் ஆட்சியில் தமிழ்:

இவர்களின் ஆட்சியிலே தமிழ் முற்றிலுமாக வீழ்ச்சி அடைந்தது.. சிற்றிலக்கியங்கள் தவிர ஏனைய பெரும் இலக்கியங்கள் எதுவும் தோன்றவில்லை.. அதற்கு காரணம் நாயக்கர்கள் தமிழை விரும்பவில்லை.. திருமலை நாயக்கன் காலத்தில் சுப்ரதீபகவிராயர் என்னும் புலவர் "திருமலைநாயக்கன் காதல்" என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றி அதை அரசவையில் படித்து காட்டுகிறார்.. அப்பொழுது திருமலைநாயக்கன் "அரவம் அத்துவானம்" அதாவது தமிழ் கேட்க சகிக்கவில்லை என்றானாம்.. இதனால் கோபமுற்ற கவிராயர் அதை கூளப்பநாயக்கனின் காதல் என்று மாற்றி எழுதி திருமலை நாயக்கனை தொந்தி வடுகன் என எள்ளி நகையாடியுள்ளார்.. அதில் ஓர் பாடல்..

" சந்தியிலே மாமியிட்ட
சண்டையிலே வந்ததொரு
தொந்தி வடுகன் சுகிப்பானோ"

என்கிறார் அவர்..

மற்றொரு பாடல்..

" அந்தகனே நாயக்கனால்
செந்திருவை போலங்கைச்
சிங்காரித்தென்ன பயன்"

அதாவது புரியாத நாயக்கனுக்கு எவ்வளவு இனிமையாக பாடல் இயற்றியும் என்ன பயன் என்கிறார்..

"செஞ்சிதஞ்சை மதுரை மைசூர்
மாறுபாஷை
செந்தமிழன் திறமறிந்து செய்யமாட்டார்"

என்கிறது மான்விடு தூது நூலில் ஒருபாடல்..அதாவது வேற்று மொழியார்க்கு தமிழக புலவர் திறமை புரியாது என்கிறார்.. இதன் மூலமே தமிழின் நிலையையும் தமிழக புலவர் நிலையையும் அறியலாம்.. மேலும் நாயக்கர் காலத்தில் இயற்றிய பலநூல்கள் அழிந்த பாண்டிய மன்னர்களையே போற்றி பாடுகிறது.. முக்கூடற்பள்ளு, திருவிளையாடற்பள்ளு போன்றவை நேரடியாக பாண்டிய மன்னர்களையே புகழ்கிறது..

திருமலை நாயக்கன் காலத்தில் அவரின் அமைச்சர் ராமைபையர் என்பவரே பழநி கோயிலில் தமிழ் அடிகளாரை வெளியேற்றிவிட்டு பிராமணர்களை மந்திரம் ஓத சொன்னதாக பழநி செப்பேடுகள் குறிப்பிடுகிறது.. ( தமிழ்நாடு செப்பேடுகள்/ தொகுதி -2/ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி) மேலும் இனி தமிழில் மந்திரம் ஓதக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததையும் அந்த செப்பேடுகள் சுட்டி காட்டுகிறது.. இப்படி தமிழை இலக்கியம், கோயில் போன்ற இடங்களில் அழிக்கும் வேலையே நாயக்கர் காலத்தில் சிறப்பாக நடந்தது..

சாதி கொடுமைகள்:

நாயக்கரின் காலத்தில் சாதிய தீண்டாமைகள் கொடிகட்டி பறந்தன.. நாயக்கர்களுக்கு "வருணாசிரம தர்மங்கனு பாலித்த" என்ற பட்டமும் பிராமணர்களால் வழங்கப்பட்டு உள்ளது (ஆதாரம்: ந.க.மங்கள முருகேசனின் இந்திய சமுதாய வரலாறு/ பக்கம்-311).. மேலும் சேதுபதி விறலிவிடுதூது மற்றும் திருவிளையாடற் புராணம் போன்றவற்றிலும் இவர்கள் எப்படி மனு தர்மத்தை போற்றினர் என்று குறிப்புகள் உள்ளன..

உழவுக்குடியான பள்ளர்களையும், அறிவுக்குடியான பறையர்களையும் கீழ்சாதி என்று இவர்கள் அறிவித்ததை திருமுருகன் பள்ளுவின் 103 ஆம் பாடல் விளக்குகிறது..

மேலும் பள்ளர்களை இவர்கள் அடிமைகளாக விற்றதையும் கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது 364 ஆம் பாடல் சுட்டி காட்டுகிறது..
ஐவர் ராசக்கள் கதையும் இவர்களின் தீண்டாமை பாதையை சுட்டிகாட்டுகிறது..
மேலும் நிலத்தில் வேலை செய்யும் மக்களுக்கு கூலி தராமலும் கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.. இதனை

"ஆந்தை மூஞ்சி ஆண்டையே
மட்டிவாய் ஆண்டையே
சட்டித்தலை ஆண்டையே
நீர் இறைக்கும் சால் போன்ற
வயிறு கொண்ட ஆண்டையே"
என்று பெண்கள் தூற்றும் விறலிவிடு தூது பாடலும் விளக்குகிறது..

நாயக்கரின் காலத்தில் கோயில்கள் ஓரளவிற்கு சிறப்பாகவே பராமரிக்கப்பட்டது.. ஆனால் மக்களுக்கும் தமிழுக்கும் ஓர் இருண்ட காலமே..
??????????
 
Messages
245
Points
63

Reputation:

நாயக்கர் கால ஆட்சியில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழகம் செழித்ததா அல்லது வீழ்ந்ததா? இதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

விஜயநகர பேரரசு:
இந்திய வரலாற்றில் மௌரிய பேரரசு, சுங்க பேரரசு, விஜயநகர பேரரசு மற்றும் மராட்டிய பேரரசு ஆகிய நான்கும் ஒரு ஒற்றுமை கொண்டவை.. இவை அனைத்தும் மனுதர்மத்தை காக்கவும் பிராமணியத்தை காக்கவும் உருவாகிய அரசுகள் என்பது இதன் வரலாறு படித்தவர்களுக்கு எளிதில் விளங்கும்.. அதில் ஒன்றான விஜயநகர பேரரசு 1329 இல் வித்யாரணிய தீர்த்தகர் என்னும் பிராமணரின் வழிகாட்டுதலின் பேரில் ஹரிகரன் மற்றும் புக்கர் என்பவர்களால் துங்கபத்ரா ஆற்றங்கரையில் தோற்றுவிக்கப்படுகிறது.. இந்த அரசின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்யாரணியரின் பங்கு அளப்பரியது என்கிறது வரலாற்று நூல்கள்.. குறுகிய காலத்திலேயே இவர்கள் ஹம்பி பகுதியை கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்த தொடங்கினர்.. 1362 ஆண்டிற்குள் இன்றைய கர்நாடக ஆந்திர பகுதிகளை வென்ற இவர்கள் 1362 இல் சம்பூர்வர்கள் மேல் போர் தொடுத்து வெற்றி பெறுகிறார்கள்.. சோழர்களின் வீழ்ச்சிக்கு பின் திருப்பதி முதல் திருச்சி வரை ஆண்டவர்கள் இந்த சம்பூர்வர்களே.. திருச்சி முதல் ராமநாதபுரம் வரை மதுரை சுல்தான்களும், ராமநாதபுரம் முதல் குமரிவரை பாண்டியரும் ஆண்டனர்.. சம்பூர்வர்களை தொடர்ந்து 1371 இல் சுல்தான்களையும் வீழ்த்தியது விஜயநகர பேரரசு.. ஆனால் 1520வரை பெறும் போராட்டத்திற்கு பின்பே பாண்டியரின் பகுதியை கைப்பற்றி முழுமையாக தமிழகத்தை கைப்பற்றியது..

தமிழகத்தை கைப்பற்றிய விஜயநகர அரசு தன்னிடம் பணியாற்றிய விசுவநாத நாயக்கரின் கட்டுப்பாட்டில் மதுரையை ஒப்படைத்தது.. அதே போல் சேவப்ப நாயக்கரிடம் தஞ்சையை ஒப்படைத்தது.. இதன் பின்பே மதுரை நாயக்கர்களும் தஞ்சை நாயக்கர்களும் தோன்றினர்..

நாயக்கர் ஆட்சிகாலம்:

நாயக்கர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து அதன் தலைமை பொறுப்பை பாளையக்காரர்களிடம் கொடுத்தனர்.. அவர்களே அரசர் போல் செயல்பட்டனர்.. போர்காலத்தில் மட்டும் நாயக்க பேரரசுக்கு படை உதவி செய்ய வேண்டும்.. அதே போல் வரியில் மூன்றில் ஒரு பங்கு பேரரசுக்கு பாளையக்காரர்கள் செலுத்த வேண்டும்.. இதுவே கட்டுப்பாடு.. View attachment 519

அந்த 72 பாளையத்தில் 52 பாளையங்களை நாயக்கர் மன்னர்களும், 12 பாளையங்களை தமிழரும், 8 பாளையங்களை கர்நாடக கம்மவர்களும் ஆண்டனர்.. இதில் கொங்கு பகுதியை கவுண்டரும், தென்பகுதியை கள்ளர் மற்றும் மறவரும், ராமநாதபுரத்தை அம்பலகாரரும், திருச்சி பகுதியை மறவராயரும் ஆண்டனர். இவர்களே தமிழர்கள்..

நாயக்கர் ஆட்சியில் தமிழ்:

இவர்களின் ஆட்சியிலே தமிழ் முற்றிலுமாக வீழ்ச்சி அடைந்தது.. சிற்றிலக்கியங்கள் தவிர ஏனைய பெரும் இலக்கியங்கள் எதுவும் தோன்றவில்லை.. அதற்கு காரணம் நாயக்கர்கள் தமிழை விரும்பவில்லை.. திருமலை நாயக்கன் காலத்தில் சுப்ரதீபகவிராயர் என்னும் புலவர் "திருமலைநாயக்கன் காதல்" என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றி அதை அரசவையில் படித்து காட்டுகிறார்.. அப்பொழுது திருமலைநாயக்கன் "அரவம் அத்துவானம்" அதாவது தமிழ் கேட்க சகிக்கவில்லை என்றானாம்.. இதனால் கோபமுற்ற கவிராயர் அதை கூளப்பநாயக்கனின் காதல் என்று மாற்றி எழுதி திருமலை நாயக்கனை தொந்தி வடுகன் என எள்ளி நகையாடியுள்ளார்.. அதில் ஓர் பாடல்..

" சந்தியிலே மாமியிட்ட
சண்டையிலே வந்ததொரு
தொந்தி வடுகன் சுகிப்பானோ"

என்கிறார் அவர்..

மற்றொரு பாடல்..

" அந்தகனே நாயக்கனால்
செந்திருவை போலங்கைச்
சிங்காரித்தென்ன பயன்"

அதாவது புரியாத நாயக்கனுக்கு எவ்வளவு இனிமையாக பாடல் இயற்றியும் என்ன பயன் என்கிறார்..

"செஞ்சிதஞ்சை மதுரை மைசூர்
மாறுபாஷை
செந்தமிழன் திறமறிந்து செய்யமாட்டார்"

என்கிறது மான்விடு தூது நூலில் ஒருபாடல்..அதாவது வேற்று மொழியார்க்கு தமிழக புலவர் திறமை புரியாது என்கிறார்.. இதன் மூலமே தமிழின் நிலையையும் தமிழக புலவர் நிலையையும் அறியலாம்.. மேலும் நாயக்கர் காலத்தில் இயற்றிய பலநூல்கள் அழிந்த பாண்டிய மன்னர்களையே போற்றி பாடுகிறது.. முக்கூடற்பள்ளு, திருவிளையாடற்பள்ளு போன்றவை நேரடியாக பாண்டிய மன்னர்களையே புகழ்கிறது..

திருமலை நாயக்கன் காலத்தில் அவரின் அமைச்சர் ராமைபையர் என்பவரே பழநி கோயிலில் தமிழ் அடிகளாரை வெளியேற்றிவிட்டு பிராமணர்களை மந்திரம் ஓத சொன்னதாக பழநி செப்பேடுகள் குறிப்பிடுகிறது.. ( தமிழ்நாடு செப்பேடுகள்/ தொகுதி -2/ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி) மேலும் இனி தமிழில் மந்திரம் ஓதக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததையும் அந்த செப்பேடுகள் சுட்டி காட்டுகிறது.. இப்படி தமிழை இலக்கியம், கோயில் போன்ற இடங்களில் அழிக்கும் வேலையே நாயக்கர் காலத்தில் சிறப்பாக நடந்தது..

சாதி கொடுமைகள்:

நாயக்கரின் காலத்தில் சாதிய தீண்டாமைகள் கொடிகட்டி பறந்தன.. நாயக்கர்களுக்கு "வருணாசிரம தர்மங்கனு பாலித்த" என்ற பட்டமும் பிராமணர்களால் வழங்கப்பட்டு உள்ளது (ஆதாரம்: ந.க.மங்கள முருகேசனின் இந்திய சமுதாய வரலாறு/ பக்கம்-311).. மேலும் சேதுபதி விறலிவிடுதூது மற்றும் திருவிளையாடற் புராணம் போன்றவற்றிலும் இவர்கள் எப்படி மனு தர்மத்தை போற்றினர் என்று குறிப்புகள் உள்ளன..

உழவுக்குடியான பள்ளர்களையும், அறிவுக்குடியான பறையர்களையும் கீழ்சாதி என்று இவர்கள் அறிவித்ததை திருமுருகன் பள்ளுவின் 103 ஆம் பாடல் விளக்குகிறது..

மேலும் பள்ளர்களை இவர்கள் அடிமைகளாக விற்றதையும் கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது 364 ஆம் பாடல் சுட்டி காட்டுகிறது..
ஐவர் ராசக்கள் கதையும் இவர்களின் தீண்டாமை பாதையை சுட்டிகாட்டுகிறது..
மேலும் நிலத்தில் வேலை செய்யும் மக்களுக்கு கூலி தராமலும் கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.. இதனை

"ஆந்தை மூஞ்சி ஆண்டையே
மட்டிவாய் ஆண்டையே
சட்டித்தலை ஆண்டையே
நீர் இறைக்கும் சால் போன்ற
வயிறு கொண்ட ஆண்டையே"
என்று பெண்கள் தூற்றும் விறலிவிடு தூது பாடலும் விளக்குகிறது..

நாயக்கரின் காலத்தில் கோயில்கள் ஓரளவிற்கு சிறப்பாகவே பராமரிக்கப்பட்டது.. ஆனால் மக்களுக்கும் தமிழுக்கும் ஓர் இருண்ட காலமே..
??????????
யார் யாராலோ ஆளப்பட்டோம்? அழிக்கப்பட்டோம்..., ?
வெட்டினாலும் துளிர்விடும் தளிராய்! மீண்டெழுவோம்,
, வளர்வோம்..! ?
தமிழன் அழியலாம்
தமிழுக்கு அழிவேது...! ?
 
Top