• Please use an working Email account to verify your memebership in the forum

நான் என்பது நானல்ல

Spike

Member
Messages
13
Points
13

Reputation:

எல்லாருக்கும் வணக்கம். நான் தான் Spike, ரெண்டு நாளா இங்க தான் குத்த வச்சு உட்கார்ந்திருக்கேன். லாஃடவுன்ல கஷ்டப்படுற ஒரு அபலை. நான் ஒரு introvert person வெளியில, ஆனா சோசியல் மீடியால சோசியலா பழக கூடிய ஆள் தான். பெரும்பாலான மக்களை போலவே எனக்கும் உள்ளே ஒரு முகம் வெளியே பல முகம், என்னாலேயே விளங்கிக்கொள்ள முடியாது. பொதுவா எந்தவித ரிலேஷன்ஷிப்குள்ளவும் அடங்கி போக விருப்பம் இல்லாதவ. இன்று வந்தோம் நாளை போக போகிறோம் இருக்கும்வரை அனுபவிப்போம் அப்படினு எனக்கு நானே கோட்பாடுகளை(இதெல்லாம் ஒரு கோட்பாடானு துப்புறது தெரியுது, ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்ட விடுங்க வச்சிக்கிட்டு போறேன்) வகுத்துக்கிட்டு வாழ்க்கை காட்டுற வழியில வாழ்ந்துட்டு இருக்கேன். சரியோ தப்போ எதாவது ஒரு பக்கம் போகனும்னு நினைக்கிறவ, நடுநிலையா மட்டும் இருந்திடவே கூடாது.

எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும், voracious ரீடர் எல்லாம் இல்ல. நேரம் கிடைக்கும் போது படிப்பேன், படிக்கும்போது மூஞ்சில வச்சிட்டு தூங்கவும் செய்வேன். படம், சீரிஸ் பார்க்க பிடிக்கும். இசை ரொம்ப ரொம்ப பிடிக்கும், பாட சொல்லி கேட்ராதிங்க செத்துருவீங்க. வேற பெருசா என்னை பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்லாத சாதாரண மனுஷி.

எனக்கு blogs, forums ரொம்பவே பிடிக்கும். நாம வாழ்ந்துட்டு இருக்கிற ஒரு materialized உலகத்துல இருந்து விடுவிக்கிற வடிகால் தான் கலை, அது எழுத்தோ, இசையோ, ஓவியமோ எதுவா வேணா இருக்கலாம். நல்ல ஒரு புத்தகம் படிக்கும்போதோ, இசையை கேட்கும்போதோ கவலைகள்ல இருந்து ஒரு விடுபடுதல் கிடைக்கும்னு நான் உணர்ந்திருக்கேன். சில சமயம் மனவெளிப்பாடுகளை முடக்கி வைக்காம எங்கயாவது வெளிப்படுத்திட்டா நல்லாயிருக்குமேனு தோணும். அதுக்கான சரியான மீடியம் தான் forum & blog. அதையெல்லாம் blogல எழுதிக்கலாமேன்னு நீங்க கேக்குறது புரியுது, ஒரு blogக கூட introvertடா வச்சிருக்க ஆள் நானா தான் இருப்பேன். இங்க எழுதின என்னை யாருன்னு உங்களுக்கு தெரியாது துப்புறதோ வாழ்த்துறதோ அப்படியே ஏத்துக்கிட்டும் தொடைச்சிக்கிட்டும் போயிடுவேன்.இந்த chat & forum UI ரொம்ப ஈஸியா நல்லா இருக்கு எனக்கு பார்த்ததும் பிடிச்சிடுச்சு அதான் பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டேன்

தவறுகள் பண்ணாத மனுஷன் இல்ல, அதனால என்னோட பதிவுகள்ல எதாவது தவறு இருந்தா சொல்லுங்க, கண்டிப்பா திருத்திப்பேன்(அதுக்காக வலிக்கிற மாதிரி அடிக்காதீங்க, அழுதுடுவேன்)

தொடர்ந்து இங்க இயங்க உங்க எல்லாரோட ஆதரவையும் அன்பையும் எதிர்பார்த்து காத்திருக்கும்,

அன்புத் தோழி
Spike
 

Spike

Member
Messages
13
Points
13

Reputation:

Welcome To Forum, Please Write Up... Eagerly Waiting For Read Your Writtings.

Regards,
Ravanan.
நன்றிங்க. உங்களுடைய, மற்றவர்களுடைய பதிவுகளெல்லாம் பார்த்தேன். அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு எழுத தெரியாது. Observerரா இருந்து வேடிக்கை வேணா பார்ப்பேன். But, எனக்கு தெரிஞ்ச விஷயத்தை நான் கண்டிப்பா எழுதறேன்
 
Top