• Please use an working Email account to verify your memebership in the forum

நானும் கொரோனவும் ,நாசமா போன ஊரடங்கும்

Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

  • Thread starter
  • Moderator
  • #1
எங்கயோ சீனால கொரோனானு கேள்வி பட்டப்ப இங்க நம்ப எல்லாரும் மீம் போட்டுட்டு கேலி பண்ணிட்டு கலாய்ச்சிட்டு இருந்தோம் அதோட வீரியம் தெரியாம பிற்காலத்துல வர போற விபரீதம் ஏதும் தெரியாம இருந்தோம்னு தான் சொல்லணும் , ஏன் அத பத்தி கவெர்மென்ட்கு கூட தெரியல ஏதும்

இந்த கொரோனா ஊரடங்கு ஒன்னு வரும்னு அதனாலா இவ்ளோ பெரிய பிரச்னைலாம் வரும்னு தெரியல , இந்தியால மார்ச் மாதம் ஊரடங்கு கொண்டு வராங்க , அப்போ மொத்த இந்தியாலேயே மிக மிக குறைவான அளவில கொரோனா பரவி இருந்துச்சு , அதும் கவர்மெண்ட் ஓட மெத்தன போக்குல தான் பரவுச்சுனு சொல்லணும் , சரியான முறைல சோதனை செய்யாமா வெளிநாட்டுல இருந்து வந்தவங்கள உள்ள விட்டுட்டு இப்ப ஐயோ அம்மா கொடையுதுனு கத்திட்டு இருக்க நெலம தான்..

மார்ச்ச மாதம் தொற்று குறைவா இருந்த நேரத்துல ஸ்பெயின் , பிரான்ஸ் , அமெரிக்கா போன்ற நாட்டுல கடுமையான பாதிப்பு இருந்துச்சு , அப்போல்லாம் இங்க இருந்த சங்கிகள் மோடி சூப்பர்மேன் மாதிரி கோரோனோ எப்படி வெரட்டிட்டாரு பாத்திங்களா ? எடப்பாடி எப்படி கொரோனா ஆஹ் ஊதி தள்ளிட்டாரு பாத்திங்களானு கூவிட்டு இருந்தாங்க .. நோயோட தாக்கம் ரொம்ப ரொம்ப குறைவா இருந்த அப்போ,? இப்ப எங்க போனானுங்கனு தெரில மொத்த சங்கி கூட்டமும் கவர்மெண்டு கொரோனா கட்டுப்படுத்த தவறிடுச்சினு சொன்னா நீ மாஸ்க் போட்டாயா ? கைய தண்ணில ஊற வச்சாயானு கேட்டு ஓடி ஒழிய தான் செய்யறாங்க ..மீடியால வேற ஏதாது பேசி பேசி திசைதிருப்பிட்டு இருக்காங்க

இந்த நேரத்துல ஏன் இதை சொல்றேன்னா கொரோனா வந்த அப்புறம் இந்த ஊரடங்கு வந்த பின்ன இந்த 4 மாத காலமா கடுமையான பொருளாதார சிக்கல்ல நான் நேரடியா பாதிக்கப்பட்ருக்கேன் மிக கடுமையா பாதிக்க பாத்திருக்கேன் , EMI கு லாம் 3 மாதம் விலக்கு அளிக்கறேன்னு சொல்லி மக்கள் எல்லாரயும் விளக்கு பிடிக்க சொன்னது தான் நடந்துச்சு , மாத சம்பளம் வாங்குற என் நெலம இப்படின்னா ,தின கூலி சிறு சிறு வியாபாரம் செய்த ஏழை எளிய மக்கள் ,சிறு விவாசயி மிக மிக கடுமையான துயர்ல தள்ளப்பட்டு ஒரு வேலை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்கு நெறையா பேர் வந்திட்டாங்க ...பசில சாகறதுக்கு கொரோனா வந்து செத்து போலாம்னு மக்கள் மன நிலை வந்துருச்சு ....

என்ன காரணம் , கவர்மெண்ட் தான் காரணமானு கேட்டா கண்டிப்பா கவர்மெண்ட் மட்டும் தான் காரணம்னு சுலபமா சொல்லிடலாம் , சரியான திட்டமிடல் இல்ல , கட்டுப்படுத்த தவறிட்டாங்க , ஆரம்ப காலத்துல கொரோனா அறிகுறி என்னன்னே தெரியாம எல்லாரையும் உள்ள அனுமதிச்சாங்க , வெறும் ஒருசில பாதிப்பு இருக்கும்போது மிக கடுமையான ஊரடங்கும் , லச்சக்கணக்குல பாதிப்பு இறுக்கப்ப தளர்வும் அறிவித்து மேலும் மேலும் சிறப்பா செயல்பட்டாங்கனு சொன்னா மிகை ஆகாது ..எல்லாத்துக்கும் மேல 10 லட்சம் பாதிப்பு தாண்டின பிறகும் இன்னும் சமூக தொற்றா மாறவே இல்லனு மக்களை முட்டாள் ஆக்குவது தான் இன்னும் வேடிக்கை...


கோரோனோ சரி ஆகுமா ஆகாதாணு தெரியல ஆனா மக்கள் ஓட பசி பஞ்சம் சரி ஆக சில வருடம் பிடிக்கும் என்பதே நிதர்சனம்

suri
 
Last edited:
Top