• Please use an working Email account to verify your memebership in the forum

திராவிடம் என்னும் டுபாக்கூரிசம்..

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

1. திராவிடம் என்பது இனமா? மொழியா? சித்தாந்தமா? என்பதே இங்கே குழப்பமே.. ஏனெனில் திராவிடமே ஒரு போலி விம்பமே.. திராவிடம் என்பது ஆரியர் எதிர்ப்பு அல்ல.. ஆரியரால் ஆரியருக்கு வைக்கப்பட்ட பெயரே திராவிடம்..

2. திராவிடத்தின் டுபாக்கூர் பெரியார் ஓர் அந்தர் பல்டி நாயகன்.திராவிடநாடே இலக்கு என்று சொல்லி போலி நாடகம் நடத்தியவர்.. ஜின்னா நேரடியாகவே நீங்கள் உறுதியாக திராவிடநாடு கேட்கவில்லை.. எனக்கு நம்பிக்கையில்லை என்று சொன்னதும் வரலாறு..

3. இந்தி எதிர்ப்பை மாணவர்களும் மக்களும் முன்னெடுத்தனர்.. அதை மறைமுகமாக பயன்படுத்திகொண்டனர் திராவிடர்.. தாளமுத்து, நடராசன், சங்கரலிங்கனார் போன்றோர் தியாகத்தை உபயோகித்து கொண்டனர் தன் சுயலாபத்திற்கு.. பின்பு இந்திய ஒன்றியம் ஒன்றிய பாதுகாப்பு சட்டம் கொண்டுவந்த பின் நாங்கள் தனிநாடு கோரவில்லை என பல்டி அடித்தவர் அண்ணா.. அதற்கும் ஒருபடி மேல் சென்று இந்தி கற்றுகொள்.. அவன்தான் அரசு பணி தருகிறானே என்றவர் பெரியார்.. (1968 பத்திரிக்கையாளர் சாவியின் நேர்காணல்)

4. 1970இல் யுனெஸ்கோ இந்தியாவின் சாக்ரடீஸ், பகுத்தறிவு பகலவன் என்று பட்டம் வழங்கியதாக சொல்கிறார்கள்.. ஆனால் அதை வழங்கியது யுனெஸ்கோவே இல்லை யுனெஸ்கோ மன்றம்.. அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிறது யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையம்.. 1970 ல் அந்த பதக்கம் வழங்கியது க.அறிவழகன்.. அன்பழகனின் தம்பி.. இதைபற்றி விளக்கம் கொடுக்கிறேன் என்று கி.வீரமணி சொல்லியும் ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது..

5. மேலே சொன்ன யுனெஸ்கோ கதைபோலே மற்றொரு கதை மிசா.. ஸ்டாலின் அவர்கள் மிசா போராளி என்று கம்புசுத்தியவர்கள் அவரின் தடுப்புகாவல் நகலை இன்றுவரை வெளியிடவில்லை.. இருந்தால் தானே..

6. ஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததாக சொல்லப்பட்ட பல்கலைகழகம் ஆஸ்திரேலியாவில் பதிவே செய்யவில்லையாம்.. அந்த பல்கலைகழகத்தை காவல்துறையே தேடுகிறதாம்.. ??

7. முரசொலி மூலப்பத்திரம் வெளியிட சொன்ன அய்யா ராமதாசின் சவாலும் இன்றுவரை திராவிடம் ஏற்கவில்லை..

8. எம்.ஜி.யார் தமிழர் இல்லை.. உண்மை தமிழர்கள் வாக்களிக்க வேண்டாம் என்றார் கருணாநிதி.. 1975இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நான் மன்றடியார் சமூகத்தை சார்ந்தவன் என்று எனக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.. நீங்கள் தெலுங்கர்.. நீங்கள் தமிழர் என நிரூபிக்க தயாரா என எம்.ஜி.யார் இன் சவாலை இன்றுவரை திமுக விளக்கவில்லை..

9. அண்ணாதுரை ஒரு டுபாக்கூர்.. ஆங்கிலேயனுக்கு மொழிபெயர்பாளனாக வேலை பார்த்தவன் என்ற நெல்லை தியாகி ஜெபமணியாரின் குற்றசாட்டிற்கும் இன்றுவரை திமுக விளக்கம் தரவில்லை..

10. கோவை ஜில்லாவில் நாயக்கரின் அதிகாரம் பறிக்கபடுகிறது.. கீழவெண்மணியில் போராடியது கம்யூனிச தீவிரவாதிகளின் தூண்டுதலால் என்று அந்தர் பல்டி மேல் அந்தர் பல்டி அடித்தவர் பெரியார்..

11. ம.பொ.சி எல்லை மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்ட பொழுது எனக்கு பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் உள்ளது என்று நழுவியவர் பெரியார்..

13. தமிழை காட்டுமிராண்டிமொழி.. ஆங்கிலம் படி இல்லையென்றால் அழிவாய் என்று ஆங்கில மோகத்தை வளர்தவர் பெரியார்..

இன்னும் கருணாநிதியின் டாக்டர் பட்டம் பெற உதயகுமார் பலியானகதை.. குறிஞ்சாங்குளம் கதை.. பெருமாநல்லூர் விவசாயிகள் சுட்டுக்கொலை.. அய்யா ராமதாசின் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிசூடு.. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை, சாராய ஆலை திறப்பு, சத்தியவாணி குற்றச்சாட்டு என்று திராவிடம் திரித்த கதைகள் ஒன்று இரண்டு இல்லை.. இன்னும் நீண்டு கொண்டே போகும்.. போலியான பிம்பம் வளர்த்தே வளர்ந்த இயக்கமே திராவிடம்.. ???
 
Last edited:
T

The Reader

Guest
View attachment


சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

கலைஞர்:

“சொல்லாற்றல் படைத்தவனாகவும்,
சோர்வு அறியாதவனாகவும்,
அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.”


#Honourable_Speaker_Spectrum_Raja


சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என தனக்கெதிராகப் புனையப்பட்ட பொய்யை கூட்டணிக் கட்சிகள் கூட விலகி கொண்ட சமயத்திலும், தன்கட்சி தொண்டர்களுக்கும் குழப்பநிலை நீடித்த போதும் கிஞ்சித்தும் மனம் தளராமல்,

ஒட்டுமொத்த தேசமும் தனக்கு எதிர் திசையில் நின்று கல்லெறிந்து கொண்டிருந்த சமயத்தில்,
தனி ஒருவனாய் தன் மீதி விழுந்த வசவுகளையும், களங்கங்களையும் எதிர் கொண்டதோடு மட்டுமின்றி, நிறைந்த சபையில் "Yes I'm The Spectrum Raja... " என சிம்மக்குரலில் கர்ஜிக்க தான் எத்துனை மனோதிடம் வேண்டும்... அவர் எதிர் நின்று வென்றது தனக்கெதிரான வழக்கினை மட்டுமல்ல, தான் சார்ந்த ஒரு மக்கள் பேரியக்கத்தின் மீதான கலங்கத்தை அவ்வியக்கத்தின் எதிர்காலத்தை...

பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞரை பற்றி இவ்வாறு கூறியிருப்பார்,
"இந்த இயக்கத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கலாம், போகலாம் ஆனால் தம்பி கருணாநிதி போன்ற ஒரு கடும் உழைப்பாளி கிடைப்பது அரிது... " அதற்கு சற்றும் குறையாத பாராட்டு தான் தலைவர் கலைஞர் அண்ணன் #ராசா விற்கு வழங்கிய #தகத்தகாய_சூரியன்... வெறும் நட்சத்திர கவர்ச்சி தலைமையோ, ஒற்றைத் தலைமை கவர்ச்சியோ கொண்டு வளர்ந்த இயக்கம் அல்ல திராவிட முன்னேற்றக் கழகம், அவ்வாறான கவர்ச்சியில் வளர்த்தெடுத்த கழகங்கள் கலகலத்து நிற்பது கண்கூடு... இவ்வியக்கத்தின் ஒவ்வொரு தொண்டனிடமும் தலைவன் இருப்பான் ஒவ்வொரு தலைவனும் தொண்டனாய் இருப்பர்...

இன்றும் ஒவ்வொரு ஸ்டாலினுக்குள்ளும், ஆ.ராசா க்குள்ளும், திருச்சி சிவாக்குள்ளும் ஏன் கடைகோடி தொண்டனுக்குள்ளும் பெரியாரும், அண்ணாவும், தலைவர் கலைஞரும் பிரதிபலிப்பது தவிர்க்க இயலாதது... எந்த நாடாளுமன்றத்தின் வாயிலில் நுழையக்கூடாதென சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கப்பட்டாரோ, அதே நிறைந்த நாடாளுமன்றத்தை இன்று சபாநாயகராக முன்நின்று வழிநடத்த போகும் கழகத்தின் #தகத்தகாய_சூரியன் #ஆண்டிமுத்து_ராசா இல்லை இல்லை #ஸ்பெக்ட்ரம் #ராசாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... தலைவர் கலைஞர் இன்று இருந்திருந்தால் அவரை விடவும் வேறெவரும் இன்புற்றிருக்க மாட்டார்கள்... #ஸ்பெக்ட்ரம்_ராசா தன்னம்பிக்கையின் மறுமொழி...
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்த வழக்கில் தயாளு அம்மாள் எப்படி விடுதலை ஆனார் என்பதையும் சேர்த்து குறிபிடலாமே.. தயாளு அம்மாள் ஓர் பைத்தியம் என்று குறிப்பிட்டதையும் சொல்லலாமே.. ??
 

Attachments

  • 0 bytes · Views: 3
Top