• Please use an working Email account to verify your memebership in the forum

தற்சார்பு சாத்தியமா?

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

சமீபத்தில் அண்ணாமலை என்னும் முன்னாள் இந்திய காவல்துறை பணியாளர்(Ips) அதிகாரியின் தற்சார்பு பொருளாதாரம் பற்றிய பேச்சே அதிகம் பேசப்படுகிறது.. சிலர் அவரை வாழ்த்தியும் சிலர் அவரை தூற்றியும் பேசிவருகிறார்கள்.. வாழ்த்துவோர்கள் அவர் விவசாயம், மற்றும் ஆடு,மாடு வளர்ப்பை முன் வைக்கிறார்.. தற்சார்பாய் வாழ்கிறார் என்று மார்தட்டுகிறார்கள்.. தூற்றுவோர், அவர் ஹிந்தியத்தின் முகமாய் மோடியின் முகமாய் ரசினியின் முகமாய் வருகிறார் எனவே எதிர்கிறோம் என்கிறார்கள்.. இதை பற்றியும் தற்சார்பு பொருளாதாரம் பற்றியும் என்னுடைய புரிதலை பகிர்கிறேன்.. தவறு இருப்பின் சுட்டி காட்டலாம்.. ??

முதலில் தற்சார்பு என்றால் என்ன? இந்தியாவில் தற்சார்பு சாத்தியமா? என்பதை பார்ப்போம்.. தனிமனித தற்சார்பு, மாநில அளவிலான தற்சார்பு, ஒட்டுமொத்த நாட்டின் தற்சார்பு என பிரித்துகொள்ளலாம்..

இப்பொழுது நீங்கள் ஒருநாளில் உங்கள் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களை பட்டியலிடுங்கள்.. அந்த பொருட்களில் எத்தனை பொருட்கள் யாருடைய உதவியும் இன்றி உங்களுக்கு கிடைக்கிறது.. எத்தனை பொருட்களுக்கு நீங்கள் பிறரையோ அல்லது நிறுவனத்தையோ நாடுகிறீர்கள்? என்பதை பிரித்து பாருங்கள்.. நீங்கள் 50% மேல் பிறரிடம் வாங்கினால் நீங்கள் இன்னும் தனிமனித தற்சார்பில் இல்லை.. நீங்கள் வெறும் 30% தான் வெளியில் வாங்குகிறேன் என்று சொன்னால் நீங்கள் தனிமனித தற்சார்புக்குள் வந்துவிட்டீர்கள்.. எளிமையாக சொன்னால் நம் தாத்தா பாட்டியின் வாழ்க்கை முறை.. இந்த வகை தற்சார்பு முன் வைக்கும் முறை..

அடுத்து மாநில அளவிலான தற்சார்பு என்பது நம் மாநிலத்தின் மூலப்பொருள் மற்றும் விற்பனைப் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட்டு சரி செய்வது.. இந்த மண்ணில் கிடைக்கும் அல்லது உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்கள் கொண்டு உற்பத்தியை பெருக்கி அதன் மூலம் ஏற்றுமதி விகிதத்தை அதிகரித்து இறக்குமதி விகிதத்தை குறைப்பது.. எடுத்துகாட்டாக தமிழகத்தில் தக்காளி அதிகம் கிடைக்கிறது என்றால் தக்காளி ஏற்றுமதி மட்டும் இன்றி தக்காளி சாஸ் தமிழகத்திலே தயாரிப்பது.. தக்காளி சாஸ் இறக்குமதியை நிறுத்துவது.. இப்படி எல்லா பொருட்களிலும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பது மாநில தற்சார்பு..

நாடு அளவிலான தற்சார்பு என்பதும் மாநில அளவிலான முறையை தேசிய அளவில் செய்வதே..

இன்று சொல்வதை போல் சீனப்பொருட்களை தடை செய்.. அமெரிக்க பொருட்களை தடை செய் என்று ஆங்காங்கே மக்கள் முழங்குவதை போல் அரசு தடை செய்ய முடியுமா? தடை செய்தால் என்ன நடக்கும்? இந்திய ஒன்றித்தால் தற்சார்பை முன்னெடுக்க முடியுமா?

1991 ல் சந்திரசேகர் ஆட்சியில் இந்திய ஒன்றியம் உலகமயமாக்கல் கொள்கையை கையில் எடுத்தது.. அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் இதன் காரணமாகவே பிரபலமானார்.. ஆனால் அன்று தான் இந்தியாவின் தற்சார்பு என்னும் கட்டிடம் மெல்ல மெல்ல இடிக்கப்பட்டது என்பதை நாம் உணரவே பல வருடம் ஆனது.. நாம் அந்த உலகமயமாக்கலில் இரு தவறுகள் செய்தோம்.. ஒன்று GATT ஒப்பந்தத்தை ஏற்றது.. மற்றொன்று WTO(World Trades Organisation)ல் உறுப்பினர் ஆனது.. இது புலி வாலை பிடித்த கதை தான்..

WTO வில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது உறுப்பினராக உள்ளன.. இவர்களுக்குள்ளான வணிக ஒப்பந்தந்கள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை கவனிப்பதும் ,உறுப்பினர் நாடுகளின் குறைகளை களைவதும், ஒப்பந்த மீறல்களை தடுப்பதும் இதன் பணி.. ஏதேனும் ஒரு நாடு ஒப்பந்தத்தை மீறி இன்னொரு நாட்டின் பொருளாதாரத்தை தடுத்தாலோ, பொருட்கள் தேக்கத்தை ஏற்படுத்தினாலோ தண்டிக்கப்படும்.. எனவே போகிற போக்கில் ஒரு நாட்டின் மேல் பொருளாதார தடை கொண்டுவர இயலாது.. அந்த நாடு போர் தொடுத்தாலோ, பகைநாடு என்று அறிவிக்கப்பட்டாலோ, உள்நாட்டில் குழப்பம் விளைவித்தாலோ மட்டுமே பொருளாதார தடை கொண்டு வரவேண்டும்.. அதே நேரம் பகை நாடாக இருந்தாலும் தூதரக உறவை துண்டித்தாலும் வணிக உறவை மேற்கொள்ளலாம்.. அது இரு நாட்டின் விருப்பம்.. ஆனால் பகை இல்லா நாட்டில் பொருளாதார உறவை துண்டித்துக்கொள்ள கூடாது..

இப்பொழுது நாம் அமெரிக்க பொருட்கள் நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றால் அமெரிக்கா பகை நாடு என அறிவித்து வெளியுறவை துண்டிக்க வேண்டும்.. பின்பே பொருளாதார தடை விதிக்க வேண்டும்.. WTO ஒப்பந்தம் இப்படியான வழிமுறையை கொண்டுள்ளது.. இதற்கு சம்மதித்தே நாம் கையெழுத்திட்டு உள்ளோம்.. பாதுகாப்பிற்காக தகவல் தொடர்பை எப்பொழுது வேண்டுமானாலும் துண்டித்து கொள்ளலாம்.. உதாரணமாக சமீபத்தில் மோடி சீனாவின் செயலிகளை தடை செய்தது.. மேலும்WTOல் Website களை தடைசெய்வதற்கும் ஆட்சேபனை இல்லை..இதுவே இன்று இந்தியாவின் நிலை..

இப்படிபட்ட நிலையில் தற்சார்புக்கு என்ன வழி இருக்கிறது இங்கே... முதல் வழி WTO யை கிழித்து எறிந்துவிட்டு கியூபாபோல் தன்னிச்சை பொருளாதார கொள்கை வகுக்க வேண்டும்.. ஆனால் அதிலும் ஆபத்து அதிகம்.. இந்திய சந்தை பொருட்களை ஒப்பந்த நாடுகள் நிராகரிக்கலாம்.. இந்தியாவிலும் உற்பத்தி தேக்கம் மற்றும் மூலப்பொருட்கள் பற்றாக்குறை என்று குறைந்தது 5 வருடம் நாம் திண்டாடுவோம்.. பின்பு மெல்ல மெல்ல சரி ஆகும்..

மற்றொரு வழி WTO வழிமுறையை பின்பற்றியே மெல்ல மெல்ல தற்சார்பை முன்னெடுப்பது.. தரநிர்ணயம் செய்வதற்கோ, தரமற்ற பொருட்களை தடை செய்வதற்கோ, இறக்குமதி மூலப்பொருட்களில் வரிவித்திப்பிலோ WTO எந்த குறிக்கீடும் செய்யாது.. எனவே இறக்குமதி பொருட்களில் கெடுபுடி காட்டுவதன் மூலம் குறைக்கலாம்.. மேலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து இதனை சந்தைபடுத்துவதன் மூலமும் அந்நிய பொருட்களின் மதிப்பை கீழிறக்கலாம்.. ஒவ்வொரு காலாண்டு கணக்கீட்டில் பொருள் மதிப்பு குறைவதை WTO எதிர்க்காது.. இதன் மூலம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடையலாம்..

இதற்கும் மேல் அரசு உள்நாட்டு மூலப்பொருள் பயன்பாடு மற்றும் இயற்கை வளப் பயன்பாடு போன்றவற்றில் புதிய கொள்கையை ஏற்படுத்தி வரைவு தயாரிப்பதன் மூலம் ஓரளவு அந்நிய ஆக்கிரமிப்பை குறைக்கலாம்..

இப்படி தற்சார்பு என்பது ஒரு நீண்ட திட்டம்.. அதை ஏதோ வெறும் விவசாயம் மட்டுமே என்று சுருக்கும் அண்ணாமலையின் அறிவை விமர்சிப்பதே ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கும்..
???????????
 
Last edited:

Semmozhi

Well-known member
Messages
330

Super op
 
Top