• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் கலைகள்- 3: சதிராட்டம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

பரதநாட்டியம் ஆரியரின் கலை என்றும் அதனை உருவாக்கியவர் பரதமுனிவர் என்றும் நாம் நம்புகிறோம் அல்லவா?.. இதற்காக சொல்லப்படும் கதையில் மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கும் வேளையில் இந்திரன் பிரம்மனிடம் மக்கள் துன்பத்தை போக்க கோரிக்கை வைக்கிறான்.. உடனே பிரம்மா ரிக் வேதத்தின் பாடல்களையும், சாம வேதத்தின், ராகத்தையும் ,யசூர் வேதத்தின் நடிப்பு திறனையும், அதர்வண வேதத்தின் ரசனையையும் ஒன்றாக இணைத்து பரத முனிவரிடம் கொடுத்ததாகவும் அதை வைத்து அவர் "நாட்டிய சாஸ்திரா" இயற்றியதாகவும் சொல்கிறார்கள்.. இந்த "நாட்டிய சாஸ்திரா" உருவாகியதாக சொல்லப்படும் ஆண்டு கி.பி 4ம் நூற்றாண்டு..அதுவே பல ஆராய்ச்சியாளர்களால் பொய் என்று சொல்லப்படுகிறது.. சரி.. இப்பொழுது நமக்கு எழும் கேள்விகள் ஒருவன் வாயால் மந்திரம் ஓதும் தொழில் செய்பவனே பிராமணன் என்கிறது வேதம்.. அவன் பிற தொழில் செய்தால் அவன் வைசியனோ சத்திரியனோ சூத்திரனோ ஆகிடுவான்.. அப்படி என்றால் இந்த நடனத்தை எப்படி பிராமணர் ஆடியிருப்பார்கள்? பிராமண பெண்கள் இதை காலங்காலமாக கற்றார்கள் என்பது ஏற்புடையதா? உண்மையில் பரதம் ஆரியர் கலையா? இதற்கு விடை தெரிய நமக்கு நிறைய தெளிவுகள் தேவை.

முதல் தெளிவு தேவரடியாரும் தேவதாசியும் ஒன்று அல்ல என்ற தெளிவு தேவை.. தேவரடியார் என்பது பெண்களின் துறவறம் .. பெண்கள் தங்கள் சமூக வாழ்க்கைக்கு விடைகொடுத்து தங்கள் சொத்துகளை விடுத்து இறைவனுக்கு தொண்டு செய்யும் நோக்கிலும், மெய்யியல் கற்கும் பொருட்டும் வருவது.. தேவதாசி என்பதே விலைமாதர்.. இந்த வித்யாசத்தை "லெஸ்லி.சி.ஆர் என்பவர் தன்னுடைய கல்வெட்டுகளில் பெண்கள்" புத்தகத்தில் வேறுபடுத்தி காட்டியுள்ளார்.. கி.பி 13ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம் அளணஹள்ளி என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டே முதன் முதலில் தேவதாசி பற்றி பேசுகிறது.. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் தேவரடியார்கள் தங்கள் நிலத்தை கோயிலுக்கு எழுதி வைத்துவிட்டு தேவரடியாராக மாறியதையும் அந்த புத்தகம் சுட்டிகாட்டுகிறது..இப்பொழுது தேவரடியார், தேவதாசி வேறுபாடு ஓரளவிற்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்..

பண்டைய தமிழகத்தில் பாணர்களும், புலவர்களும், கூத்தர்களும் நிறைந்து வழிந்த இடம் தமிழகம்.. இவர்கள் அரசர்களை மட்டுமின்றி மக்களையும் மகிழ்வித்தனர்.. இவர்களோடு மக்களை மகிழ்வித்த மற்றொரு கலையே "சதிராட்டம்".. இந்த சதிராட்டம் பெண்கள் அனைவராலும் எளிதில் கற்க கூடிய நிலையில் இருந்தாலும் பிற்காலத்தில் இதை அழியாமல் போற்றி பாதுகாத்தவர்கள் தேவரடியார்களே.. சிலப்பதிகாரத்தின் இளங்கோவடிகள் புகார்காண்டத்தில் அரகேற்றகாதையில் இந்த சதிராட்டத்தை பற்றியும் அதன் நயங்கள், அதை ஆடும் பெண்களின் உடல் அசைவுகள், சதிராட்டத்திற்கு தேவையான இசை கருவிகள், அரங்க அமைப்புகள் என அனைத்தையும் விளக்குகிறார்.. அதை இன்றைய பரதநாட்டியதோடு பொருத்தி பார்த்தால் தெளிவு கிடைக்கும் அனைவருக்கும்..

"யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது"
(அரங்கேற்ற காதை-90)

கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
(அரங்கேற்றகாதை- 115)
இப்படி நாட்டிய மங்கையின் உடல் அசைவுகள் மற்றும் இன்றி நேரிலேயே அந்த நாட்டியத்தை காணும் நிகழ்வை கண்முன்னே கொண்டு வருகிறார் இளங்கோவடிகள்.. மேலும் இவை அனைத்தையும் தான் நாட்டிய நன்னூல் என்னும் நூலில் இருந்து எடுத்ததாக சொல்கிறார் இளங்கோ..

" இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே"..
(அரங்கேற்றகாதை - 40)

நாட்டிய நன்னூலில் குறிப்பிட்டது போல் சிறப்பாக ஆடுவதாக இளங்கோ குறிப்பிடுகிறார்.. இளங்கோவடிகளின் காலம் கி.பி 2ம் நூற்றாண்டு.. அவர் தான் வேறுநூலில் எடுத்ததாக சொல்கிறார்.. அந்த நூல் எந்த காலம் என்றே தெரியவில்லை.. பரதமுனிவர் நாட்டிய சாஸ்திரா எழுதியது கி.பி 4ம் நூற்றாண்டு.. இப்பொழுது புரியும் என்று எண்ணுகிறேன்.. பரதம் எங்கு தோன்றியது என்று..

மேலும் தமிழில் கிடைத்துள்ள தொன்மையான காப்பியமான தொல்காப்பியமும் மெய்யடிகளாரின் உடல்மொழிகள் அசைவுகளை விவரிக்கிறது.. இதுவும் பரத அசைவுகளோடு பொருந்துகிறது..

View attachment

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.. சதிராட்டமே பரதநாட்டியமாக மாற்றப்பட்டது என்றும்.. அதை வளர்த்த தேவரடியார்கள் அழிவிற்கு பிறகே அது தமிழர் மரபில் அழிந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்..
???????
 
Top