• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் கலைகள் 2: சிற்பக்கலை

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தமிழரின் சிற்பக்கலையை பற்றி எழுத இந்த ஓர் கட்டுரை போதாது.. வியப்பிற்கே வியப்பூட்டும் சிற்பங்கள் இன்றும் நம் கண்முன்னே தமிழர் கோயில்களில் உள்ளன..

யாளி சிற்பம்:
மெய்யோ பொய்யோ என்னும் நீண்ட விவாதத்தை கொண்ட யாளி விலங்கு சிற்பம் தமிழன் சிற்பக்கலையின் ஈடில்லா புதையல்.. சிம்மயாளி, மகரயாளி, யானையாளி என்று வகையாக பிரித்து உயிரூட்டி வடித்து வைத்துள்ளான் தமிழன்.. அதில் குறியீட்டையும் வைத்து சென்றுள்ளான் என்கின்றனர் அறிஞர்கள்.. யாளியின் வாயில் உருண்டை இருக்கும்.. உருட்ட முடியும் எடுக்க முடியாது.. இவ்வகை சிற்பங்கள் சைவ கோயில்கள் என்கின்றனர்.. சில கோயில்களில் சிங்கம் யானையை வீழ்த்தும் சிற்பங்கள் இருக்கும்.. இவை ஆசீவகம் சைவமாக மாறிய குறியீடு என்கின்றனர்.. சில கோயில்களில் வெள்ளையானை கொண்ட கஜராஜ மண்டபம் இருக்கும்.. இவையே ஆசீவக கோயில் என்கின்றனர்.. இப்படி யாளியின் சிற்பம் கொண்டே வரலாறு கடத்துகின்றனர் தமிழர்.. View attachment View attachment View attachment

கைவிரல் அளவு சிற்பம்:
தாராசுரம் கோயில், திருவண்ணாமலை கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களில் இவற்றை காணலாம்.. விரல் அளவே கொண்ட இடத்தில் துல்லியமான சிற்பத்தை செதிக்கியுள்ளனர் தமிழர்கள்.. View attachment View attachment

கல் வளையங்கள்:
ஆவுடையார்கோவில், பிள்ளையார்பட்டி, தாராசுரம் , மாமல்லபுரம் போன்றவற்றில் இவற்றை காணலாம்.. ஒற்றை கல்லில் வளைங்கள் செதுக்கி அதை தொங்கும் அமைப்பாக அமைத்திருப்பார்கள்.. இவையெல்லாம் பிரமிப்பின் உட்சம் எனலாம்.. View attachment

மேலும் சிலைகளின் உடலில் நரம்புகள் தெரியும் அளவிற்கும், சிலைகளுக்கு சிலம்பு உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து செதுக்கியதும், பஞ்சபூதமாக ஓர் தலை ஐந்து உடல் என்று தன் கற்பனை எல்லையை கைகளில் நீட்டிச்சதும், இசைகற்கள் உருவாக்கியதும், மாடங்களின் மேற்கூறையில் எண்ணிலடங்கா சிற்பத்தையும் அதன் வழியே வரலாற்றை கடத்தியதும் துல்லியமாக செதுக்கியதும் போற்றுதற்கு உரியது.. View attachment View attachment View attachment
 
Top