• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் கலைகள் 1: கட்டிடக்கலை

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

மிக தொன்மையான வரலாறு கொண்ட, நீண்ட காலமாக ஒரே இடத்தில் நிலையாக வசிக்கும் தமிழர்கள் தங்கள் திறமைகளையும், நாகரீகத்தையும் கலைகளின் வழியாக பறைசாற்றினர்.. அந்த கலைகளில் முன்னிலையில் இருப்பது கட்டிடக்கலை..

தமிழர்கள் முன்னர் சிதையும் தன்மைகொண்ட செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டிடக்கலை உருவாக்கினர்.. எனவே அவை அனைத்தும் எஞ்சாமல் அழிந்தன.. "பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.. அவரவருக்கு ஏற்ற வகையில் மனையமைத்து வாழ்ந்தனர் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.. ஆனால் இன்று கீழடி மட்டுமே தமிழரின் இத்தகைய செங்கல் மற்றும் பானை முதலிய கட்டிட பொருட்களின் ஆதாரமாய் உள்ளது..

கல்லணை:
தமிழர்களின் பழமையான பொறியியல் அறிவிற்கு சான்றாய் முதல் இடத்தில் நிற்பது முதலாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய கல்லணையே.. 2000 ஆண்டுகள் பழமையும், நுட்பமான நீர்மேலாண்மையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சான்றாய் இன்றும் நிலைத்து நிற்கிறது கல்லணை.. 1080 அடி நீளமும் 86 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்டு இன்றும் உலகின் பழமையான நீர்த்தேக்கமாய் விளங்குகிறது.. View attachment

பல்லவர்கள் கட்டிடக்கலை:

தமிழகத்தில் கட்டிடக்கலையில் பல்லவர்கள் காலம் ஓர் திருப்புமுனை என்றால் மிகையாகாது.. செங்கல் கட்டிடங்களிலிருந்து மாற்றி குடவரை கோயில்கள் மற்றும் ஒற்றைக்கல் கோயில்கள் அமைக்கப்பட்டது பல்லவர்கள் காலத்திலே..

பல்லவர்கள் அமைத்த குடைவரைகள் தமிழ் நாட்டில், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், குரங்கணில் முட்டம், வல்லம், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், விளாப்பாக்கம், அரகண்டநல்லூர், திருக்கழுக்குன்றம், சிங்கப்பெருமாள் கோயில், சிங்கவரம், மேலச்சேரி, சாளுவன் குப்பம், கீழ்மாவிலங்கை, மாமல்லபுரம், ஆவூர், திரைக்கோயில், புதூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன..

முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட மண்டகப்பட்டு என்னும் ஊரில் உள்ள இலக்சிதன் கோயிலே முதலாம் குடைவரை கோயில் ஆகும்.. அந்த வகையில் குடைவரை கோயிலை துவக்கியவர் என்ற பெயர் மகேந்திரவர்மனுக்கு உண்டு.. இவருக்கு பின் முதலாம் நரசிம்ம வர்மன் என்னும் மாமல்லன் மாமல்லபுரத்தில் பஞ்சபாண்டவ ரதங்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்களை கட்டியவர்.. View attachment View attachment 485

சென்னை அருகே உள்ள சாளுவன்குப்பத்தில் அமைந்துள்ள புலிக்குடைவரை கோயில் 7ம் நூற்றாண்டு பழமையானது..இக்குடைவரையில் அதிட்டானம், தூண்கள், கபோதம், கூடு, சாலை, நாசிகம் போன்ற அமைப்புக்கள் உள்ளன. எனினும் இவற்றுட் சில அம்சங்கள் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 16 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.. அதே சாளுவன் குப்பத்தில் அதிரணசண்ட பல்லேஸ்வரம் கோயிலும் குடைவரை கோயிலின் பெருமையை எடுத்துரைக்கும் மற்றொரு சான்றாகும்.. இவை ராசசிம்ம பல்லவனால் கட்டப்பட்டவை.. மேலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும், மாமல்லபுரம் கடற்கறை கோயிலும் இவரால் கட்டப்பட்டவையே..View attachment View attachment

பாண்டியர் கட்டிடக்கலை:

குடைவரை கோயில்களுக்கு பல்லவர்களே முன்னோடி என்று ஒரு கருதுகோள் நிகழ்ந்தாலும், மற்றும் ஓர் கருதுகோள் பாண்டியர்களே என்கிறது.. கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கழுகுமலை குடைவரை கோயில், பிள்ளையார்பட்டி குடைவரை கோயில் போன்றவை பாண்டியரின் கட்டிடக்கலை தொன்மையை பறைசாற்றுகின்றன.. மேலும் பாரியின் பிரான்மலையில் உள்ள குடைவரை கோயில், அழகர்மலை குடைவரை கோயில், மகிபாலன்பட்டி குடைவரை கோயில், குன்றகுடி குடைவரை கோயில், மாங்குளம் குடைவரை கோயில் போன்றவை பாண்டியரின் கட்டிடக்கலைக்கு சான்றாக நிற்கின்றன..View attachment

கி.பி 12 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் பாண்டியரின் கட்டிடக்கலைக்கு முக்கிய சான்று.. உயர்ந்த ஒத்த வடிவமான நான்கு கோபுரமும் எண்ணிலடங்கா சிற்பமும் காண்பதற்கு அறியவை..
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கி.பி 773 ல் பராந்தக நெடுஞ்சடைய பாண்டியனால் கட்டப்பட்டது..View attachment I

சோழர்களின் கட்டிடக்கலை:

தமிழர் கட்டடக்கலையின் புரட்சி சோழர்களின் காலம் என்றால் மிகையாகாது.. தஞ்சை பெருவுடையார் கோயிலும், கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோயிலும், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் சோழரின் கட்டிடக்கலையின் மூன்று பெரும் சான்றுகள்.. இவை அனைத்தும் யுனெஸ்கோ பாரம்பரிய களத்தின் சான்றுகளை பெற்றவை..View attachment View attachment

கம்போடியாவில் அங்கோர்வாட் என்னும் இடத்தில் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட கோயில் இன்றும் உலகின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக தமிழனின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.. 163 ஹெக்டேர் பரப்பளவில் பிரமாண்ட கோயிலாக இது உள்ளது..View attachment

இவையில்லாமல் ஆவுடையார் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் என எண்ணற்ற கட்டடக்கலை சான்றுகள் தமிழகம் எங்கும் பொதிந்துள்ளன..
 
Last edited:

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Marvellous daaa .... excellent
இத பத்தி எழுதலாமா வேணாமானு இருந்தவன எழுத சொன்னதே நீதானடா ?? இனி தொடரும் மாதிரி வரும்.. பண்டைய வீரம், விவசாயமனு வரிசையா வரும்..
 
Top