• Please use an working Email account to verify your memebership in the forum

ஈழ விடுதலை போரும் துரோகமும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

1. தன் மகனை அடுத்த தலைவர் பதவியில் அமர்த்த முன்னேற்பாடாக காய் நகர்த்தினார் கருணாநிதி.. அதற்கு இடையூராய் இருந்தவர் வை.கோபால்சாமி என்னும் வைகோ.. ஏனெனில் அன்று வைகோவின் புகழ் அதிகம்.. எப்படி வைகோவை வெளியேற்ற என்று எண்ணியவர் 1992இல் வைகோ தன்னை விடுதலைபுலிகளை வைத்து கொலை செய்ய முயற்சித்தாக சொன்னார்.. பின்பு தன் ஆசைப்படியே வைகோவை வெளியேற்றிவிட்டு தன் மகனை இளவரசன் ஆக்கினார்..

2. தனக்கு தமிழ்மக்கள் வாரிவழங்கிய 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஒன்றுமே செய்யாமல் வெற்று கூச்சலிட்டவர்.. அன்று அவர் கூட்டணி முறித்திருந்தால் காங்கிரஸ்ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்பதும் கூறிப்பிடதக்கது..

3. உச்சகட்ட போர் நடைபெற்றபோது மருந்தோ உதவி பொருட்களோ தமிழ்நிலத்தை சென்றடையாதவாறு தடுத்தவர் கருணாநிதி.. இலங்கை இந்தியா கூட்டு கடல் கண்காணிப்பு சட்டத்தில் கையெழுத்திட்டவர்..

4. 2009 மேமாதம் வெளியுறவுதுறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கொழும்பு செல்லும் பயணத்திற்கு முன்பு சென்னையில் இறங்கி கருணாநிதியை சந்தித்தனர்.. உடன் ரகசியகாப்பு பிரமாணத்தையும் மீறி கனிமொழி இருந்தார்.. அதன்பின்பே கொழும்பு சென்றனர்..
பின்பு தான் எழுதிய புத்தகத்தில் சிவசங்கர்மேனன் அந்த முக்கிய நடவடிக்கை தமிழக அரசியல்வாதிகளை கேட்டே எடுக்கப்பட்டது.. கருணாநிதி ஜெயலலிதா இருவருமே புலிகள் இருப்பதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.. இந்து பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் ஒரு பேட்டியில் நான் கருணாநிதியின் குடும்ப நண்பன்.. அவருக்கு புலிகள் இருப்பதில் விருப்பமில்லை என்று சொன்னார்..

5. உச்சகட்ட போரின் போது உண்ணாவிரதம் எனும் நாடகம் நடத்தி அதை முடிப்பதற்காக நான் மத்திய அரசிடம் பேசிவிட்டேன்.. இனி போர் நடக்காது. யாரும் கொல்லமாட்டார்கள் என்று பொய் சொன்னவர் கருணாநிதி.. அதை நம்பி வன்னியில் வீதியில் இருந்த மக்கள் கொல்லப்பட்டதே கொடூரம்..

6. ஈழத்தை பற்றிய செய்திகளை ஒளிபரப்பாமல் பார்த்துக்கொண்டார் கருணாநிதி.. அதையும் மீறி ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சி முடக்கப்பட்டது..

7. ஈழத்திற்கு ஆதரவாக பேசியவர்கள் ஒடுக்கப்பட்டனர்.. மக்களை பேச வைக்க வேறு வழியின்றி 2009 ஜனவரி 29ல் முத்துக்குமார்.... ஜனவரி 31ல் பள்ளபட்டி ரவி.. பிப்ரவரி 7 ல் சீர்காழி ரவிச்சந்திரன்.. பிப்ரவரி 8ல் அமரேசன்.. பிப்ரவரி 18ல் ஜோதி..
பிப்ரவரி 21ல் சிவபிரகாசம்.. பிப்ரவரி 25ல் கோகுலகிருஷ்ணன்.. பிப்ரவரி 26ல் சீனிவாசன்.. மார்ச் 4ல் சதாசிவம் சிரீதர்.. மார்ச் 15ல் நாகலிங்கம் ஆனந்த்.. மார்ச் 15ல் ராசசேகர்.. மார்ச் 22ல் பாலசுந்தரம்.. மார்ச் 22ல் மாரிமுத்து.. ஏப்ரல்17ல் சிவானந்தம்.. ஏப்ரல்23ல் சுப்பிரமணி என 15 பேர் தன்னை தீயிற்கு இரையாக்கினார்கள்.. ஆனால் கருணாநிதியோ மிக எளிமையாக அவர்களின் குடும்ப பிரச்சனைக்காக தீக்குளித்தனர் என்றார்..

8. 2010 ல் சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாய் பார்வதியை இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினார்..

ஈழம் நடேசன் அவர்களிடம் பேட்டியில் ஓர் கேள்வி முன் வைக்கப்பட்டது.. நீங்கள் எப்படி தோல்வி அடைந்தீர்கள் என்று... அதற்கு நடேசனார் அவர்களின் பதில் இதோ... " புலிகள் என்றும் மரணம் கண்டு அஞ்சவில்லை.. எந்த நாட்டிடமும் உதவி கேட்கவில்லை.. ஆனால் எங்கள் உறவுகளிடமிருந்து உதவி வரும் என்று எண்ணினோம்.. எங்கள் உறவுகள் எங்களை கைவிட மாட்டார்கள் என்று நம்பினோம்.. ஏமாற்றபட்டோம்.." ???
 
Top