• Please use an working Email account to verify your memebership in the forum

இலங்கைக்குத் தேவை இடதுசாரி அரசியல்

T

The Reader

Guest
View attachment


இலங்கையில் மலையக தமிழர்கள் பகுதியில் வசிக்கும் மல்லிகை பூ திலகர் என்று அழைக்கப்படும் மயில்வாகனம் திலகராஜா(46)
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர். நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் ஆர்வலர். சிறந்த பேச்சாளர்.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு முன்பு இந்த கட்சியின் தலைவரான திலகர், இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். அதில் இரண்டாவது முறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.தொழிலாளர் தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சி துவங்கி பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) என்றும் அழைக்கப்படுகிறது. கட்சி தொடங்குவதற்கு முன்பு தொழிலாளர் தேசிய சங்கமாக 55 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. இத்தகைய பாரம்பரியமிக்க தொழிற்சங்கத்தின் அடிப்படையிலிருந்து உருவாக்கியதுதான் இந்த கட்சி. பெயரில் தொழிலாளர் என்று இருந்தாலும் மற்ற கட்சிகளைப் போல் இதுவும் ஒரு முதலாளித்துவ கட்சிதான். ஆனாலும் அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்களில் ஒருவர்தான் மயில்வாகனம் திலகராஜா. அவர் அண்மையில்
சென்னைக்கு வருகை தந்தபோது ‘தீக்கதிர்’ நாளேட்டுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:


சந்திப்பு : சி.ஸ்ரீராமுலு

இலங்கைத் தமிழர்கள் என்பவர்கள் இலங்கை யையே பூர்வீகமாகக் கொண்டவர்கள். மலையக தமிழர்கள் என்பவர்கள் இந்திய வம்சாவளியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று அங்கு வாழக் கூடியவர்கள். மக்கள் தொகை அடிப்படையில் இரு வருக்கும் சில லட்சங்களே வித்தியாசமிருக்கிறது. மலை யகத் தமிழர்கள் 15 லட்சமாகவும் இலங்கைத் தமிழர்கள் 18 லட்சமாகவும் இருக்கிறார்கள். இதுவும் முழுமையான புள்ளி விவரம் கிடையாது. இலங்கை உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகான கணக்கெடுப்பை துல்லியமாக எடுத்தால் இலங்கைத் தமிழர்களைவிட மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. காரணம், பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இந்த யுத்தக் காலத்தில் பெரும் எண்ணிக்கையில் புலம் பெயர்ந்து விட்டனர். இந்த இருவருக்குமான கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை இலகுவாக வேறுபடுத்தி புரிந்துகொள்வது நல்லது.

இலங்கைத் தமிழர்கள் என்போர் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற அரசியல் கருத்துக்களை முன் வைத்தவர்கள். இப்போது இதில் மாற்றம் வந்துள்ளது. அதேசமயம், மலையக தமிழர்கள் என்போர் “இலங்கையை எங்களுக்குமான நாடாக மாற்று. இலங்கையில் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்கிற அரசியல் புரிதலை கொண்ட வர்கள். இலங்கையிலிருந்து பிரிந்து போவதற்கும், இலங்கையில் சேர்ந்து கொள்வதற்குமான அரசியல் வேறுபாடுதான் இருவருக்குமான அடிப்படை அரசியல் வேறுபாடுகள்.

இந்திய தமிழர்களே!

இலங்கைத் தமிழர்களின் சதவீதம் என்பது கிட்டத்தட்ட 11 சதவீதம் வருகிறது. இந்திய தமிழர்களின் சதவீதம் 4 சத வீதம்தான் வருகிறது. இந்த சிக்கலிலிருந்து இன்னொரு கிளை பிரிகிறது. நாங்கள் எங்களை மலையக தமிழர்கள் என்று அழைத்துக் கொண்டாலும், இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு ‘இந்தியத் தமிழர்கள்’ என்றுதான் பதிவு செய்கிறது. நான் தமிழ்நாட்டிற்கு வந்த போதெல்லாம் ‘நீங்கள் எல்லாம் தமிழர்கள். ஆனால் நாங்கள்தான் இந்தியத் தமிழர்கள் என்று சுவாரஸ்யமாக சொல்வது வழக்கம். இது நாங்கள் வைத்துக் கொண்ட பெயர் அல்ல. எங்கள் அரசாங்கம் எங்களை அப்படித்தான் பதிவு செய்கிறது. உலகத்திலேயே இந்தியத் தமிழர் வாழும் நாடு இலங்கைதான்.

எங்களுக்கு இந்தியத் தமிழன் என்ற பெயர் இருந்தா லும் மலையக தமிழன் என்ற வீட்டு பெயருமுண்டு. இப்போது இருக்கும் தலைமுறை என்ன யோசிக்கிறது என்றால் நான் இலங்கையில் பிறந்தேன் என்பதற்காக இலங்கைத் தமிழன் என்ற அடையாளத்தில் பதிவு செய்வதால் இலங்கை தமிழருக்கான விகிதாச்சார எண்ணிக்கை உயர்வாகவும், இந்திய தமிழர்களின் விகிதாச்சாரம் குறை வாகவும் இருக்கிறது. அதனால், நான் இந்தியத் தமிழன் என்று ஏன் சொல்ல வேண்டும்? என்கிறார்கள். ஆனால், வாழ்வியல், பண்பாட்டு ரீதியாகவும் எண்ணிக்கையிலும் இரண்டு தமிழர்களும் சமமாகத்தான் இருப்பார்கள்.

‘மைய சரடு’...

இந்தியாவில் சாதி எப்படி அரசியலில் புகுத்தப் பட்டுள்ளதோ, அவ்வாறு இலங்கையில் இனம் அரசியலில் புகுந்துள்ளது. தமிழ் நாட்டில் சாதி பிரச்சனை. இலங்கை யில் இனப்பிரச்சனை. அவ்வளவுதான். தமிழகத்தில் ஒரு மொழி பேசும் போது கூட மக்களுக்கிடையே சாதி பிரச்சனை களும், கொலைகளும் எப்படி நடைபெறுகிறதோ அதுதான் இலங்கையில் இனப்பிரச்சனையாகவும் கொலைகளாக வும் இருக்கிறது. அதுவே அணிசார்கின்றபோது அணி சார்ந்த கொலைகளாகவும், அரசியல்மயப்படுகின்றபோது யுத்தமாகக்கூட பெரிதாகியிருக்கிறது. அந்த யுத்தத்தின் மையச் சரடு என்பது இனரீதியான பாகுபாடுதான். பிரச்ச னையே அதுதான். அந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று வருகிறபோது. எது பிரச்சனையோ அதுதான் தீர்வு என்ற அடிப்படையாகும்.

தனி மாநிலமாக....

இனப்பிரச்சனைக்கான தீர்வைக்கூட இனத்துவ அடிப்படையிலேயே தீர்க்க வேண்டிய தேவை வருகிறது. அதற்கு அதிகாரப்பகிர்வு ஒரு தீர்வாக முன் வைக்கப்படலாம். சமஷ்டி ஒரு தீர்வாக முன்வைக்கப்படலாம், வேறு முறைக ளும் தீர்வாக முன்வைக்கப்படலாம். அப்படி தீர்வாக முன் வைக்கப்பட்டுதான் 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத் தின் தலையீட்டோடு ஜெயவர்த்தனா- ராஜீவ் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, தமிழர்கள் பெரும்பகுதியாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு மாகா ணம் (தமிழ்நாட்டைப் போன்று ஒரு மாநிலம்) ஏனைய ஒன்பது மாகாணங்கள் ஒரு மாகாணமாகவும், ஏழு மாகாணங்கள் மற்றொரு மாகாணமாகவும் ‘மாகாண சபை’ முறை கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவைப் போன்று மத்திய அரசு, மாநில அரசு போன்றதாகும்.

அதாவது ஒட்டுமொத்த இலங்கைக்கும் மத்திய அரசாங்கம் இருக்கும். இலங்கைக்குள் மாகாண அரசாங் கங்கள் இருக்கும். ஆனால் அது ஒரு அரசாங்கமாக இயங்காது. அதன் பெயரிலேயே இருக்கும். உள்ளூர் அரசுகூட அரசு என்ற முறையில்தான் வரும். அது மாகாண அரசுக்கு கீழ் உள்ள நிலையாகும். அதாவது அரசாங்கம் என்பதைவிட கவுன்சில் என்று கூறலாம். அது அதிகாரங்கள் குறைந்த, மத்திய அரசாங்கத்தின் பிடிக்குள் இருக்கிற ஒரு அமைப்பாகும். இந்தியாவில் எப்படி மத்திய அரசால் மாநில அரசு களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்களோ அதே போன்று மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக அங்கு இருக்கக்கூடிய முதலமைச்சருக்கு மேலாக இருந்தார். குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைக் கொண்டு அந்த மாகாண அரசுகளை கலைக்கும் வாய்ப்புகள் இருந்தது.

உள்ளதும் பறி போனது...

1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் அந்த மாகாண சபை முறையில்கூட பின்னாளில் நீதிமன்ற துணையுடன் மீண்டும் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்ட காலத்தைவிட இப்போது அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலைமை என்னவென்றால்? இருப்பதை தக்க வைத்துக் கொண்டா லே போதும் என்பதுதான். அதிகாரப் பகிர்வு தேவை என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்கான வடிவ மாற்றங்களை செய்து முன் செல்ல வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனை.

தொடரும் மனப்போராட்டம்!

இலங்கையின் யுத்த முடிவுக்குப்பிறகு பௌதிக ரீதியான மாற்றங்கள் வந்திருக்கின்றன. சேதமடைந்த சாலை கள் சீரமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கும், வட பகுதிக்கும் எளிதாகச் சென்று வரமுடிகிறது. அடிப்படை தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம், மீன்பிடித் தொழில் வழக்கத்திற்கு திரும்பியிருக்கிறது. சில இடங்களில் மக்கள் உழைப்பதற்கு தயாராக இருந்தாலும் அந்த நிலங்கள் இன்னும் பண்படவில்லை. விதை விதைத்த இடங்களிலெல்லாம் மறைத்து வைக்கப் பட்டிருந்த கண்ணிவெடிகள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம். வேலைக்கு செல்லும் போது பெரும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடம் இருப்பதால் மனதில் உள்ள காயங்கள் பெரிதாக மாற வில்லை. யுத்தம் முடிவுக்கு வந்தது என்று கூறுகிறோம். அது ஆயுத ரீதியான போராட்டம் மட்டுமே. மன ரீதியாக மனப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இலங்கை தேர்தலில் தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம் களும் இணைந்துதான் தமிழ் மொழி பேசும் தேசம் என்ற சொல்லாடலை வைத்திருக்கிறோம். இஸ்லாமியர்களும் சேர்ந்து கூட ஓரணியாக ஒரு கட்சியாக, ஒரு கூட்டணியாக சேராமல் தமது வாக்குகளின் ஊடாக தங்களின் கருத்தை பிரதிபலித்திருக்கின்றனர். இப்போது ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கக் கூடியவர்கள் மீது கடந்த காலங்களில் இருந்த அதிருப்தி, பயத்தின் வெளிப்பாடு தவிர வேறு ஒன்றுமில்லை. ஆட்சி யாளர்கள் கடந்த காலத்தைப் போன்று அப்படியேதான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும், மக்கள் கடந்த கால அனுபவங்களை பார்ப்பார்கள். அந்த அடிப்ப டையில்தான், தமிழ் சமூகத்திற்கு அரசாங்கத்தின்மீது இருக்கக்கூடிய அதிருப்தியும், கடந்த கால சம்பவங்களின் ஊடாக இஸ்லாமிய சமூக மக்களின் உள்ளார்ந்த பயமும் இந்தத் தேர்தலில் வெளிப்பட்டது.

தோல்வியடைந்த வேட்பாளரின் கணிசமான வாக்குகளில் சிங்கள மக்களின் வாக்குகளும் உள்ளன. அவருக்கு கிடைத்த 55 லட்சம் வாக்குகளில் சுமார் 20 லட்சம்தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகள். மீதம் இருக்கக்கூடிய 35 லட்சம் சிங்கள மக்களின் வாக்குகள் என்பதை மறுக்கமுடியாது. ஒட்டுமொத்தமாக தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டும் ஓரணியில் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அமைப்பாக இயங்குவது என்பது வேறு. ஒரு கருத்தை வெளிப்படுத்துவது என்பது வேறு. அதிபர் தேர்தலில் ஒரு கருத்து வெளிப்படும். அதுவே பொதுத்தேர்தலில் வேறொரு நிலைபாட்டிற்கு செல்லும். பொதுத் தேர்தலில் தமிழர்கள் எல்லோரும் ஓரணிக்கு வாக்களித்தாலும் எங்கள் அமைப்பு அமைச்சரவையில் பங்கேற்கும். இதன் மூலம் நாங்கள் இலங்கைக்கு உரியவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுப்போம். ஒரு அணியாக இருந்தாலும் சிலர் எதிர்க்கட்சியாக மாறிவிடுவார்கள். இந்த மையக் கருத்தில் எப்போதும் ஒரு கருத்து வேறுபாடு இருந்து கொண்டே வருகிறது.
 
T

The Reader

Guest
திசை மறந்த பறவையாய்...

காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கி லேயர்கள், அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலா ளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்து வந்தனர். அந்த காலத்தில் கண்டி ராஜ்ஜியத்தை பிரிட்டன் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்க ளின் ஆதிக்கம் கோலோச்சியது. தேயிலை, ரப்பர் கொண்டு செல்ல மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப் பட்டனர். மேலும் ஏராளமானோர் வலி சுமந்த பயணம் மேற்கொண்டவர்கள். அனைவரும் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் -‘மலையகத் தமிழர்’ என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, ரத்தினபுரி, பேசாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன், தெலுங்கர், மலையா ளிகளும் தொழில் நிமித்தம் காரணமாக இங்கு வந்தனர். காடுமேடாகவும், கல்லு முள்ளாகவும் காட்சியளித்த மலைநாட்டை - தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதா ரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே குடியுரிமை, வாக்குரிமை இல்லாமல் பல சதாப்தங்க ளை கடந்தனர். குடியுரிமை, வாக்குரிமை இல்லாத சூழ் நிலையிலும் லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனாலும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக பல ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமையும் வாக்குரிமையும் பெற்றனர் மலையக மக்கள்.

எங்கள் கட்சி அமைச்சரவையிலிருந்த போது மலையக மக்கள் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவழி அடையா ளம் காட்டியது. அதுவரை மறுக்கப்பட்டு வந்த மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். ஒரு புதிய திசையை காட்டினோம். இந்த மக்களுக்கு செய்யப்பட வேண்டியவை என்ன? எது தேவை? என்பது குறித்தும் அந்த 4 ஆண்டு கால ஆட்சியில் புதிய திசையை காட்டினோம். இந்தியாவில் எப்படி அரசியல் மாற்றம் கவனிக்கப் படுகிறதோ அதை போன்று இலங்கை அரசியலும் கவ னிக்கப்படுகிறது என்பது உண்மைதான். நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்றம் என்பது ஒரு வலதுசாரி திருப்பம் நிறைந்த மன்றமாக இருந்தாலும் எங்களால் சில கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் இலங்கையில் பெரிய அளவில் இடதுசாரி அமைப்புகளை உள்ளடக்கிய நிர்வாக அமைப்பு முறை வரவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அல்லது அப்படி ஒரு அரசியல் செயல்பாடு இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். தற்போது கூட குறைந்தபட்ச முற்போக்கு எண்ணம் கொண்டவர்களை ஒன்று சேர்த்து செயல்படும் அரசியல் பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஒரு மிதவாத கட்சியாகத்தான் எங்களால் செயல்பட முடிந்தது.

நாங்கள் ஆட்சியில் பங்கேற்ற அந்த காலக்கட்டத்தில் ஏனைய முதலாளித்துவ கட்சிகளோடு ஒப்பிடும்போது நாங்கள் கூட்டணி சேர்ந்த முதலாளித்துவ கட்சி முன் வைக்கும் திட்டங்கள் அடிப்படையில் சிறு மாற்றத்தை கொடுத்தது. அந்தக் கட்சிதான் குறைந்தபட்சம் சிறுபான்மை மக்களை அனுசரித்துப் போகிற அந்த மக்களின் ஆதரவு சக்தியாக ஒரு தலைமைத்துவத்தை காட்டியது. அதிபர் தேர்தலின்போது சில நேரங்களில் சிறுபான்மை கட்சிகள் ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முடியாது என்கிற நிலையில்தான் ஒப்பிட்டுப் பார்த்து, ஓரளவுக்கு பரவாயில்லை என்கின்ற அமைப்பாக தேர்வு செய்து அந்த கூட்டணியில் இடம் பெறுகிறோம்.
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

உலகில் நடக்கும் இனவாத அடக்குமுறைகளில் என்றுமே இடதுசாரிகள் கலந்துகொள்வதில்லை.. கலந்துகொண்டாலும் அது பெயரலவிலேயே இருக்கும்.. 1933இல் சோவியத் ஒன்றியம் உக்ரைன் மேல் தொடந்த இனவாத அடக்குமுறை.. மியான்மரில் ரோஹிங்கா மக்களின் மேல் தொடரும் தாக்குதல்.. அமேசான் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களின் மேல் தொடரும் தாக்குதல் என்று இனவாத அடக்குமுறை பட்டியல் நீண்டாலும் இடதுசாரிகள் பதில் ஏதும் வைப்பதில்லை..

காரணம் எங்களின் கொள்ளை வர்க்கபேதத்தை மையமாய் வைத்து நடப்பது.. எங்களிடம் இனம் மதம் சாதி பேதம் இல்லை என்று எளிமையாய் பதில் சொல்லி கடந்துவிடுவார்கள்.. காஷ்மீர் பிரச்சனையிலும் ஆதரவாய் வாக்களித்துவிட்டு இடதுசாரிகள் சொன்னபதில் இதுவே..

நிலைமை இப்படி இருக்க இனவாத சண்டை நடக்கும் இலங்கையில் இடதுசாரித்துவ தேவை எப்படி ஏற்படும் என்று புரியவில்லை.. அங்கே நடப்பது வர்க்கபேதம் அல்ல இனவாத பேதம்.. அதற்கு அதிகார பகிர்வே தீர்வு தரும் என்று எண்ணுகிறேன்..

மேலும் அங்கே முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கு நல்ல உடன்பாடு இல்லை.. உடும்பன்குளம், கிழக்கு பல்கலைக்கழகம், சத்துருகொண்டான், வீரமுனை போன்ற படுகொலைகள் முஸ்லீம் ஊர்காவல் படைகள் நிகழ்த்தியதும் அதற்கு பதிலடியாக காத்தான்குடி படுகொலையை புலிகள் நடத்தியதும் அனைவரும் அறிந்ததே.. அப்படி இருக்கையில் அனைவரும் வர்க்க பேத பாதையை ஆதரித்து வருவார்களா என்பதும் சந்தேகமே..

கடவுளிடம் என்னால் என் பிரச்சனைகளை தாங்கமுடியவில்லை என்று வேண்டும் போது பொறு உனக்கு புதிதாய் ஒரு பிரச்சனை தருகிறேன் பழைய பிரச்சனை மறந்துவிடுவாய் என்பதை போன்றே உள்ளது..
 
Top