• Please use an working Email account to verify your memebership in the forum

இடஒதுக்கீடு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இடஒதுக்கீடு எங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் ,நாங்களே இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர்கள் என்றும் ,நாங்களே இடஒதுக்கீடு காவலர்கள் என்றும் ஆள் ஆளுக்கு அடித்துக்கொள்வது இன்றைய அரசியலில் வாடிக்கையாகிவிட்டது.. உண்மையில் இடஒதுக்கீட்டை யார் யார் கொண்டு வந்தார்கள்? 69% இடஒதுக்கீடு யார் யாரால் கொண்டு வரப்பட்டது? அதை பற்றி இங்கு பார்ப்போம்..

1921 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதோர்க்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று சட்டம் முன்மொழியப்பட்டது.. 1928 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண முதல்வர் பி.சுப்பராயன் அரசு இந்த சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தியது.. இந்த வகுப்புரிமை சட்டம் பங்கீடு நான்கில் இரண்டு என்ற விகிதத்தில் வழங்க வேண்டும் என்று சொல்லியது..

1951ல் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் குமாரசாமி ராசா என்பவரால் 41% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு(Bc) 26% மும், பட்டியலினத்தவருக்கு(Sc) 16%மும் அடங்கும்..

1971ல் திமுக ஆட்சியில் மு.கருணாநிதி இந்த இடஒதுக்கீட்டை இன்னும் 8% உயர்த்தி 49% ஆக மாற்றினார்..இதில் Bc க்கு 31%மும், Sc க்கு 18% மும் அடங்கும்..

1980 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர் இந்த 49% இடஒதுக்கீட்டை இன்னும் 19% உயர்த்தி 68% ஆக மாற்றினார்.. இதில் Bcக்கு 50%மும் , Sc க்கு 18%மும் அடங்கும்..

1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மு.கருணாநிதி பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கிட்டை வழங்கினார்.. மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பெரும் போராட்டத்திற்கு பின் 50% பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்னும் பிரிவிற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார்..

இன்று நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு..

பிற்படுத்தப்பட்டோர் - 30%
மிகவும் பி.பட்டோர் - 20%
பட்டியலினத்தோர் - 18%
பழங்குடியினர் - 1%
மொத்தம் =69%

இதில் காங்கிரஸ் 41%, அதிமுக 19%, திமுக 9% கொண்டு வந்ததுள்ளது..

?????????
 
Top