• Please use an working Email account to verify your memebership in the forum

ஆரண்ய காண்டம் (2011)

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா? மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
"ஆரண்ய காண்டம்"
வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது. இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.
"படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி.
சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ஆரம்பிக்கப்பட்டு 2009 லேயே முழுவதும் தயாராகிவிட்ட நிலையில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு தெற்காசிய திரைப்பட விழாவில் (SAIFF) சிறந்த திரைப்படத்திற்கான விருதை வாங்கிய, நியோ நாயர்(Neo-Noir) வகைமையில் வெளிவந்த முதல் தமிழ்த்திரைப்படமாக அடையாளப்படுத்தப்படும் ஆரண்ய காண்டம் சென்ஸார் போர்டின் '52' கட் களுக்குப் பிறகு UA சான்றிதழுடன் வெளியாகி இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முன்பே புதுப்பேட்டை போன்ற படங்களில் நியோ நாயர் ஓரளவு முயற்சி செய்திருந்த போதும், அதை முழுமை செய்தது குமார ராஜா தான்.
நியோ நாயரில் பல்வேறு வடிவங்களில் கதைசொல்லல் அமைந்த திரைக்கதை முழுக்க மாஃபியா , கேங்ஸ்டர் போன்ற குற்றப் பின்னணியில் அமைந்திருக்கும்.
நியோ நாயர் களத்தையும், கதை சொல்லலைச் சார்ந்தது.
மேலும் தொடரும் முன் இந்த "வேற" லெவல் டிரெயிலரை பார்த்து விட்டு தொடர்வது நலம்.
கதை நிகழும் காலம் ஒரே நாள் - எட்டு கதாப்பாத்திரங்கள்
*சிங்கப் பெருமாள் - பசுபதி
பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் தான் சிங்கப்பெருமாளுக்கு உயிர் கொடுத்தவர்.கருணை என்பதே பழக்கப்படாத இந்த தாதா ,தேவையில்லால் கத்திக் கொண்டிருக்கும் வழக்கம் அறவே இல்லாமல் "ஈ" என்று க்ளோசப்பில் பல்லை காட்டும் போது பகீர் அடிப்பது தான் கேரக்டர் ஸ்கெட்சின் பலம்.
பசுபதியின் ஐடியாவை கேட்டபின், ரிஸ்க் வேண்டாமென சிங்கப்பெருமாள் கூற ,"நல்ல டீலு" என்று பசுபதி மீண்டும் இழுப்பான். பல் விளக்கிக்கொண்டே கண்களை சுருக்கிக் கொண்டு வாயே திறக்காமல் மறுக்கும் அந்த பாவனையை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அது ஒரு தரிசனம் போல எளிதில் காணக்கிடைக்காத நடிப்பு.
ஓடிக் கொண்டே ,படத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் புத்திசாலி தளபதி கதாப்பாத்திரம் தான் பசுபதி.மையக் கதாப்பாத்திரம் பசுபதியாக நடித்திருக்கும் சம்பத் , தான் தமிழின் மிக முக்கியமான நடிகன் என்பதை நிரூபித்திருப்பார்.
*கொடுக்கா புலி - காளையன்
வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் அப்பனும் மகனுமாய் பட்டணத்தை வந்தடைபவர்கள்.நேர்மாறான குணம் கொண்டவர்கள். காளையனாக குருசோமசுந்தரம். (இதில் தான் இவர் அறிமுகம்) எரிந்து விழும் மகனிடம் ,முகம் சுருங்கி ,"அப்பனை ஏச்சுப் புட்டானுவய்யா" எனும் போதும் , தாதா ஆகிய சிங்கப்பெருமாளை சேவல் சண்டையில் வென்றதும் "ஏய் தோத்தாங்கொலி" என்று வம்பிழுத்து சேவலை பலி கொடுக்கும் போதும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் பாவனைகள் ப்ளாக் ஹியூமரின் நுண்ணிய தருணங்கள்.
அப்பனை மானாவாரியாக திட்டி விட்டு,கடைசியில் ''அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்கும் பசுபதியிடம்,
"அப்டில்லாம் இல்ல.. ஆனா அவரு எங்க அப்பா" எனும் போது கொடுக்கா புலியாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் சொல்லும் போது அந்த நேசம் ஒருவழியாய் நமக்கு பிடிபடும்.
*சுப்பு - சப்பை
சிங்கப் பெருமாளால் நடிகையாவோம் என்று ஏமாற்றப்பட்டு அவருக்கு மனைவியாக்கப்பட்ட பாவப்பட்ட பெண் , கதையின் ஆதாரப்புள்ளியாய் மாறும் தருணம் யாரோ நம் தண்டுவடத்தில் தட்டியது போலிருக்கும்.
சப்பை சற்றே நளினமாக அந்த கொள்ளைக்கும்பலின் நடுவே "எல்லாமே பண்ணுவேன்" என்று சிணுங்கிக் கொண்டு, எப்போதும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருப்பான்.ரவிகிருஷ்ணா நடித்திருக்கும் இந்த வேடம் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ கேமின் தீம் ஒரு ராணியை ,ஒரு சிறுவன் காப்பாற்றுவதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அது சுப்பு ,சப்பையை குறிக்கும் குறியீடு.
*கஜபதி - கஜேந்திரன்
குரூரத்தின் ஒட்டுமொத்த உருவமான அண்ணன் - தம்பி தாதாக்கள்.
சில வார்த்தைகளில் கதாப்பாத்திரங்களின் பின்னணியை விளக்கிவிடும் வசனங்களுக்கு இடையில் கஜேந்திரனுக்கு வைக்கப்பட்ட "விரல் கதை" கதை சொல்லலின் வேறுபட்ட வடிவம்.
இப்படி அனைவரையும் இணைக்கும் திரைக்கதை எப்படி எல்லாம் சொல்லப்படுகிறது என்பது மிக முக்கியம். கதை மாந்தர்களின் வசனங்கள் , சுய விளக்கங்கள் , கதை சொல்லல்கள் ,பழக்கப்பட்டிருக்காத காட்சிகளுக்கு ,வித்தியாசமான பின்னணி இசை, ரிவர்ஸ் சீன்கள் . நாம் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் தப்பித் தவறியும் நடந்துவிடாத ஆச்சர்யம் தான் இதன் ப்ளஸ்.
பாடல்களே இல்லாத இத்திரைப்படத்திற்கு யுவனின் ஆல்டைம் பிஜிஎம் லிஸ்டில் கண்டிப்பாக இடம் உண்டு.
படத்தொகுப்புக்காக 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதினைப் பெற்ற ஆரண்ய காண்டத்தின் எடிட்டிங் சாம்பிளை அதன் டிரெய்லர் மூலம் கண்டு கொள்ளலாம்.
இதற்கு முன் யாரிடமும் உதவி இயக்குனராய் பணியாற்றாத தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமான இதில் எதிர்பார்க்காத கோணங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமராவும் கதைசொல்லி. சைக்கிளுக்கு அடியில், வேலிகளுக்கு நடுவின் ,சுவர் துளையின் மத்தியில் என அந்த களத்தின் தன்மையை நமக்கு கடத்தும்.
படத்தின் தொடக்கத்தில் பகவத் கீதையின் வாசகம் வரும்.
"எது தர்மம்?"
"எது தேவையோ அதுவே தர்மம்"
முன்னெப்போதும் நாம் அறிந்திருக்காத மனிதர்களின் தேவைகளுக்கு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை செயற்கை பூச்சு இல்லாமல் , கலாப்பூர்வமான ஒரு கதை வடிவத்தை வைத்ததற்காக தியாகராஜன் குமாரராஜா தவிர்க்க முடியாத கலைஞன் ஆகிறார்.
ஒன்றை உறுதியாய்க் கூறலாம். இதற்கு முன் நீங்கள் ஆரண்ய காண்டம் பார்க்காதிருந்தால், முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
அது உங்களை ஏமாற்றவும் செய்யலாம், ஆச்சர்யமும் படுத்தலாம் !
ஏனெனில் நல்ல சினிமா என்பது ஒரு அனுபவம் !
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

மிகச் சிறப்பான ஒரு தமிழ் விமர்சனம். படத்தின் முக்கிய நிகழ்வுகள் எதையும் சொல்லவில்லை. ஆனால் படம் பற்றிய ஆர்வத்தை தூண்டுவது போல தங்களின் எழுத்து அமைந்துள்ளது. ???
 
Top