• Please use an working Email account to verify your memebership in the forum

அணு ஆற்றல் ஆணையம்

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

1948-ல் அணு ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவர் ஹோமி பாபா ஆவார். இதன் நோக்கம் இரண்டு.

அவை

  1. அணு ஆற்றலை உற்பத்திக்குப் பயன்படுத்துதல்
  2. அணு ஆற்றலை வேளாண்மை, உயிரியல், தொழில் மற்றும் மருத்துவ முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாகும். அமைதிக்கும் அணு (Atom for peace) என்ற உறுதியான கொள்கை அடிப்படையில் இந்திய அணு ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஐந்து அணு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.

அவை

  1. மும்பையில் உள்ள பாபா அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம் (BARC)
  2. தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR)
  3. இந்தூரில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (CAT)
  4. கொல்கத்தாவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (VECCC) \
  5. ஐதராபாத்திலுள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (AMD) இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் துணைகொண்டு தமிழ்நாடு கூடங்குளத்தில் 200 MW திறன் கொண்ட அணு ஆற்றல் மின் உற்பத்தி திட்டம் (Atomic Power Project) ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. சென்னை அருகில் கல்பாக்கத்தில் அணு ஆற்றலைக் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
நம் இந்திய நாடு அணு ஆற்றல் வளர்ச்சிக்கு முதன்மை அளிப்பது போல விண்வெளி ஆய்வுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. 1962-ல் இந்திய தேசிய விண்வெளிக் குழு உருவாக்கப்பட்டது. 1963-ல் நிக்கே அப்பாச்சே (Nicke Apache) என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 1972-ல் விண்வெளி ஆணையம் (Space Commission) மற்றும் விண்வெளித்துறை (Department of Space) தொடங்கப்பட்டன. ஒருங்கிணைந்த, நெறிப்பாட்டு ஏவுகணை மேம்பாட்டுச் செயல்திட்ட அடிப்படையில், பிருத்வி, திரிசூல், ஆகாஷ், நாக் ஆகிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
Top