• Please use an working Email account to verify your memebership in the forum

tearjerker movie

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment உணர்வுபூர்வமான திரைப்படம் விரும்பிகளின் முதல் தேர்வு Hachi A dog's tale ஆக தான் இருக்கும்.. கண்ணில் நீர் வரவைக்கும் திரைப்படம் தேவை என்பவர்கள் தவறவிடக் கூடாத திரைப்படம்..

2009 ல் வெளியான இந்த திரைப்படத்தின் கதாநாயகன் Richard gere..

இந்த திரைப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது..

கதை:

Parker(richard gere) ஓர் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர்.. அவர் தினமும் தன் கல்லூரிக்கு வீட்டின் அருகிலுள்ள ரயில்நிலையத்தில் ஏறி சென்று வருவார்.. ஒருநாள் அவ்வாறு அவர் வீடு திரும்பும் பொழுது அங்கே தனியாக இருக்கும் நாய்குட்டியை காண்கிறார்.. காலையில் அதன் முதலாளிடம் ஒப்படைக்கலாம் என்று எண்ணி தன் வீட்டிற்கு கொண்டு செல்கிறார் அந்த நாய்க்குட்டியை.. ஆனால் அந்த நாய்க்கும் அவருக்கும் இடையே ஓர் அன்பு பிறக்கிறது.. எனவே அந்த நாயை அவரே வளக்கிறார்..

தினமும் கல்லூரிக்கு செல்லும் போதும் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போதும் ஒரு நல்ல நண்பனாக அவரை வழியனுப்பவும் அவரை வரவேற்க்கவும் ரயில் நிலையம் வருகிறது அந்த நாய்.. இதுவே இவர்கள் இருவருக்கும் வாடிக்கையாகிறது..

இந்த நிலையில் ஒரு நாள் மாலையில் Parker காக காத்திருக்கிறது அந்த நாய்.. ஆனால் அவர் வரவே இல்லை..

கல்லூரியிலேயே ஏற்பட்ட மாரடைப்பால் Parker இறக்கிறார்.. அவருடைய குடும்பம் வேறு இடத்திற்கு செல்கின்றனர்.. அவர் இறப்பை உலகம் ஏற்றுக் கொண்டது.. மனிதர்கள் ஏற்றுக்கொண்டனர்.. ஆனால் அந்த நாய்?

அது இறுதிவரை ஏற்றுகொள்ளவில்லை.. தினமும் காலையும் மாலையும் Parker காக ரயில் நிலையத்தில் காத்திருப்பதையும் நிறுத்தவில்லை..

சில ஆண்டுகளுக்கு பின் Parker இன் மனைவி ஏதேச்சையாக ரயில் நிலையத்தில் அந்த நாய் காத்திருப்பதை காண்கிறாள்.. Parker இறப்பை அவளால் அந்த நாய்க்கு புரியவைக்க முடியுமா..

இந்த திரைப்படத்தை அடையாளப்படுத்த மதிப்பீடோ விருதோ தேவையில்லை.. உலக அளவில் உணர்வுபூர்வமான திரைப்படத்தில் நிச்சயம் இது முதலிடத்தில் இருக்கும்..
 
Top