• Please use an working Email account to verify your memebership in the forum

PTR Madurai financial minister

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

*பி.டி.ஆரை கண்டு ஏன் பதறுகிறார்கள்?*

*தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார்.*
*‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது.*
*அரசியலை பொருளாதாரவாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும் புது ஒழுக்காறை அவரது விமர்சனம் கொண்டிருக்கிறது.*
*அது அரசியல் விமர்சன மரபில் ஒரு புதுச் சிந்தனைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது.*

*வானதிக்கு பயன்படுத்திய congenital liar என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.*
*அது ஒரு வழமையான அரசியல் விமர்சனச் சொல் அல்ல.*
*Congenital என்பது ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் ஒரு உரிச்சொல்.*
*Congenital என்பது Congenital நோய், Congenital குறைபாடு, Congenital ஊனம் போன்ற பயன்பாட்டில் தான் அதிகம் வருகிறது.*

*அதை நேரடியாக பயன்படுத்தினால் உடல் குறைபாட்டை குத்திக் காட்டும் அநாகரிக சொல்லாக மாறிவிடும். உரிச்சொல்லான congenital-ஐ பெயர்ச் சொல்லான liar உடன் இணைத்து ஒரு புது அரசியல் விமர்சன சொல்லை உருவாக்குகிறார்.*

*அதே போன்றுதான் charlatan என்ற சொல் ஜக்கியின் மோசடியையும், பாசாங்கையும் கூர்மையாக ஊடுருவி சென்று தாக்கியது. ஜக்கியை நிலைதடுமாறச் செய்து ஈனக்குரலில் முனக செய்தது.*

*பி.டி.ஆரின் இந்த விமர்சன முறை ஆதரிக்கத்தக்கதா?*

*பி.டி.ஆருக்கு சில திடீர் நலவிரும்பிகள் உருவாகியிருக்கிறார்கள்.*
*உங்கள் திறனை செயலில் காட்டுங்கள், கண்ணியமாக விமர்சியுங்கள்’ என்ற சொற்களால் அவரை மட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்.*
*மொன்னையான அரசியல் விமர்சனங்களை கேட்டுப் பழகிய காதுகள் அவர்களுடையது.*

*தனது விமர்சனக் கணைகளை பி.டி.ஆர் யார் மீது வீசுகிறார் என்பது முக்கியமானது. பொருளாதாரம் பற்றி தெரியாத மக்களையோ, அரசியல்வாதிகளையோ அவர் சிறுமைப்படுத்தியதில்லை. சங்கிக் கூழைகளை தான் முதன்மையாக தாக்குகிறார்.*
*கூடுதலாக சுமந்த் சி. ராமன், மாஃபா பாண்டியராஜன் போன்ற சொற்புரட்டர்களை தெரிவு செய்து தனது விமர்சனத்தில் விசைத் துகள்களை நிரப்பிக் கொள்கிறார்.*

*ஒரு தேசியக் கட்சியின் ஆற்றல் பி.டி.ஆரால் ஒரு மாநிலக் கட்சியான திமுகவுக்கு திடீரென வாய்த்தது பற்றி வட இந்திய ஊடகங்கள் வாய் பிளக்கிறார்கள்.*

*ஏற்கனவே மனநோயாளிகளான தமிழக பாஜக தலைவர்களுக்கு தங்கள் நோயை முற்ற செய்துள்ளது. அது குறித்து நாம் அச்சப்பட வேண்டியதில்லை.*
*ஒரு வேளை அவர்களின் உருக்குலைவை நேர் செய்யவும் கூடும்.*

*நவீன அரசியலின் தர்க்கசாஸ்திரி பி.டி.ஆர்.*FB_IMG_1622558240383.jpg
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Intha ptr thana gst koottathai purakanikiromnu muthalilum, gst koottathuku engalai alaikkavillainu irandavathum, gstla petrolai serpomnum, appuram petrolai serkkum vaaippu illainu aduthum, gstla maanila pangeedu thaan kettomnu lastlayum sonnathu ? singamle.. Ipidi than oru kaalathula aandimuthu rajavukum fire vittanunga ellam ??
 
Arasiyal vaathingana apdi Thana but ipo irukakirathula idhu ok nu agree panravanga irukangala...???
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Oru naal pusoozhal maarum.. Anru makkal ennamum seyalum maarum.. Athuvarai peikalo antha peikku maatraai pisasukalo aanduvittu sellattum.. ??
 
Minnale

Well-known member
Messages
772
Points
93

Reputation:

Oru naal pusoozhal maarum.. Anru makkal ennamum seyalum maarum.. Athuvarai peikalo antha peikku maatraai pisasukalo aanduvittu sellattum.. ??
Makkal matram eppodhum nadakadhu op, waste dhan sollitae erupom erukom ??
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஏறக்குறைய விடுதலை போரை சில இயக்கங்கள் தொடங்கி 800 ஆண்டுகள் கழித்தே ஐரிஸ் மக்கள் உணர்ந்து இணைத்து போராட துவங்கினர்.. முதல் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் துவங்கி ஏறக்குறைய 130 ஆண்டுகள் பின்பே கம்யூனிச புரட்சி ரஷ்யாவில் வெடித்தது.. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு பின்பே கியூபெக் மக்கள் தாம் அடிமைப்பட்டு கிடப்பதை உணர்ந்தனர். வினைகள் ஒரு நாளில் நடக்கும்.. புரட்சி ஒரு நாளில் நடந்து முடியாது..
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

naam adimai endra purithalai uruvaaikki vittaal, appothu puratchi vedikka sila naazhigaigal pothum!
 
Top