• Please use an working Email account to verify your memebership in the forum

NEP

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

முதலில் இன்றைய கல்விமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.. பின்பு எது அவசியம் என்று விவாதிப்போம்..

இன்றைய கல்வி ஒரு தனி மனிதனுக்கு எந்த வகையில் அறிவை தருகிறது என்பதை சொல்லமுடியுமா? இன்றைய கல்வி முறை ஒருவனை வாழ்க்கைக்கு எந்த அடிப்படையில் தயார் செய்கிறது? கல்வி கற்றால் வேலை கிடைக்கிறது என்பது அறிவா? இந்த கல்விமுறை எப்படிபட்ட சமுதாயத்தை உருவாக்குகிறது? உங்களை ஒருநாள் தனித்து விடப்பட்டால் யாரையும் நம்பி இல்லாமல் வாழ வகை செய்கிறதா?

உதாரணமாக நீங்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் ஓர் பெரிய அதிகாரி.. மாதம் ஐந்து இலக்க வருமானம்.. இப்படி செல்லும் உங்கள் வாழ்க்கையில் உங்கள் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் உங்களை நிரந்தர பணிநீக்கம் செய்கிறார்கள்.. அதேவேளையில் உங்களை black list என்னும் கருப்புபட்டியலில் சேர்க்கிறார்கள்.. உங்கள் எதிர்காலம் என்ன? அதை எதிர்கொள்ளும் துணிவை இந்த கல்வி தருகிறதா?

மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய கல்வி முறை ஏன் எதற்கு என்று சிந்திக்காத தொழிலாளர்களையே உருவாக்குகிறது.. இவர்கள் பில்கேட்ஸ், அம்பானி போன்றோரின் பணியாளர்களாக முடியுமே ஒழிய அவர்களை விட முன்னேற முடியாது..

அப்படி என்றால் கல்வியில் மாற்றம் செய்வது சரிதானே.. புதிய கல்வி கொள்கை(NEP) சரிதானா? கல்வியில் மாற்றம் செய்வது சரிதான்.. ஆனால் அது சரியான மாற்றமாக இருக்க வேண்டும்.. 34 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்திய ஒன்றிய கல்வியில் மாற்றம் என்பது சரியானதாக உள்ளதா?

1. மும்மொழிக்கொள்கை.. சமஸ்கிருதம் மற்றும் இந்தி முக்கிய விருப்பபாடமாம்.. சமஸ்கிருதம் உண்மையில் ஓர் மொழியா.. இல்லை கலப்பு மொழிகளின் செயல்வடிவமா என்ற விவாதமே இன்னும் முடியவில்லை.. ஏனெனில் அதில் பேச்சு வழக்கு இல்லை.. எந்த வகையான அறிவியல் கருத்தும் இல்லை.. வேதம் தவிர எதுவும் இல்லை.. ஒரு நூற்றாண்டு கூட ஆகாத இந்தி கற்றால் அந்த இந்தி எனக்கு என்ன அறிவை தரபோகிறது.. உரையாடலை தவிர இந்த மொழிகளில் என்ன பயன்?

2. 5ம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழி கல்வி.. வரவேற்கிறோம்.. இதை வரவேற்பதால் ஈ.வே.ரா போல் தாய்பால் பைத்தியம் என்று எங்களை நகைக்கலாம்.. ஒரு மனிதன் அறிவு வளர வேண்டும் எனில் அவன் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்கிறார்கள் உலக அறிஞர்கள்.. இதனை பேரறிவுப்பு செய்தே சீனா சீனத்திலேயே முழு கல்வி போதிக்கிறது.. எனவே தாய்மொழி வழிக்கல்வி இன்றியமையாதது.. என்னை கேட்டால் அனைத்து அறிவியல் நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து தமிழிலேயே முழு கல்வி போதிக்க வேண்டும்.. மொழியறிவுக்கு மட்டுமே பிற மொழிகள் இருக்க வேண்டும்..

3. 3,5,8 நுழைவுத்தேர்வுகள்.. இதுதான் மிகப்பெரும் சிக்கல்.. இவர்கள் மீண்டும் குலக்கல்விக்கு வித்திடுகிறார்கள் என்பதன் பேரறிவிப்பு.. ஒரு 8 வயது குழந்தை திறன் தேர்வுக்கு தயார் ஆகுமா அல்லது உளவியலாக கல்வி மேல் அச்சப்படுமா? நாம் பத்தாம் வகுப்பு தேர்வுக்கே 14 வயதில் எவ்வளவு அச்சப்பட்டோம்.. இன்று அந்த உளவியல் தாக்கத்தை 8 வயது குழந்தையிடம் கொடுக்க வேண்டுமா?

4. அனைத்து துறை கல்லூரிக்கும் நுழைவுத்தேர்வு.. பின்பு பள்ளி இறுதி தேர்வு எதற்கு என்ற கேள்வி எழுப்ப வேண்டும்..

3 ம் வகுப்பில் வடிகட்டி, 5 ம் வகுப்பில் வடிகட்டி, 8 ம் வகுப்பில் வடிகட்டி, மேல்நிலை தேர்வுகளில் வடிகட்டி அதற்கும் மேல் நுழைவுத்தேர்வுகளில் வடிகட்டுகிறார்கள்.. கேட்டால் மாணவரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யவுமே இந்த நடைமுறை என்ற வாசகம் அங்கங்கே.. எப்படி உயரும் மாணவர் எண்ணிக்கை? மிகப்பெரிய நகைச்சுவையே..

4. சரி.. இன்றைய நடைமுறையில் உள்ள கல்வியை மாற்றுகிறார்களா என்றால் இல்லை.. இவர்கள் வெறுமனே கற்பிக்கும் முறையை மட்டுமே மாற்றி அதில் அனேக காவி வண்ணம் பூசி வருகிறார்கள்..

நிதி பற்றிய தெளிவு இல்லை.. நம்பகமான அமைப்புகளின் ஆதரவுமில்லை.. உதவும் அமைப்புகளும் பொறுப்பு அமைப்புகளும் Rss ன் சாயல்.. இப்படிபட்ட நிலையில் உள்ள புதிய கல்வி கொள்கையை தான் கேபினட் குழு அங்கிகரித்துள்ளது.. இனி என்ன ஆகுமோ குழந்தைகளின் நிலை?
 
Top