• Please use an working Email account to verify your memebership in the forum

Murungai milk

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

➶➶ *இன்று ஒரு தகவல்* ➷➷ *முருங்கையில் மதிப்புக்கூட்டப்பட்ட பால்:*

நம் நாட்டில் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் முருங்கை மரம் ஓர் குடும்ப உறுப்பினர் போல் உள்ளது. முருங்கையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருப்பதால் சத்து பற்றாக்குறையை நிர்வர்த்தி செய்ய உதவுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 375 மில்லியன் குழந்தைகள் சத்துப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சத்துப்பற்றாக்குறை நோய் வராமல் தடுக்கவும் வந்தபின் குணப்படுத்தவும் உணவில் உள்ள சத்துக்களே சிறந்தது. முருங்கையானது 300 வகையான நோய்கள் வராமல் தடுப்பதுடன் 67 வகை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. முருங்கையில் 90 வகையான சத்துக்களும் 46 வகையான மருத்துவ தன்மையும் உள்ளது
100 கிராம் உலர்ந்த முருங்கை இலையில் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்தைவிட 100 மடங்கும், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தைவிட 15 மடங்கும், பாலில் உள்ள கால்சியம் சத்தை விட 17 மடங்கும், தயிரில் உள்ள புரதச்சத்தைவிட 9 மடங்கு அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ கண், தோல் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் நோயின்றி இருக்க மிக அவசியம். இரும்புச்சத்தானது பிராணவாயுவை (ஆக்ஜிஸன்) இரத்த செல்களுடன் இணைக்க அவசியம். கால்சியமானது எலும்பு, பல் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (எலும்பு உடை நோய்) வராமல் தடுக்கும் மனிதனின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியம்.

பொதுவாக குழந்தைகள் முருங்கைக்காயினை உணவில் எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர், எனவே அத்தகைய சூழ்நிலையில், முருங்கைக்காயினை மதிப்புக்கூட்டப்பட்ட பாலாக தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் மட்டுமல்லாமல் எல்லா வயதினரும் அதனை விரும்பி அருந்துவார்கள்.

*முருங்கைக்காய் பால் தயாரிப்பு முறை:*

*தேவையான பொருட்கள்:*

பால் 1 லிட்டர்
முருங்கைக்காய் 20 எண்ணிக்கை
சர்க்கரை 200 கிராம்

*செய்முறை:*

• பாலை காய வைத்து ஆற வைக்கவும்
• முருங்கைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும்
• பின் முருங்கைக்காயில் உள்ள சதைப்பகுதியை மட்டும் ஒரு ஸ்பூன் உதவியுடன் எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் கூழ் பதம் வரும் வரை அரைக்கவும்
• அரைத்த விழுதை காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்கு கலக்கி அருந்தலாம் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்பானமாக அருந்தலாம். நன்றி : பாலசுப்பிரமணியம், சக்தி அக்ரி கிளினிக், கோவை.
 
Top