• Please use an working Email account to verify your memebership in the forum

motivational movie

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

The pursuit of happiness:

2006 ல் வெளியான ஓர் ஹாலிவுட் பயோகிராபிகல் ட்ராமா ஆகும்.. இந்த படத்தின் கதாநாயகன் வில் சுமித்.. இயக்குனர் கேப்ரியேல் முஸினோ..

இந்த திரைப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிபடையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.. கிரிஸ் கார்ட்னர் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது..

பார்ப்பவர்களுக்கு உத்வேகமும் கண்ணீரும் ஒருசேர தரும் திரைப்படம்..

கதை களம்:
போன் ஸ்கேனர் மெசினை விற்பனை செய்யும் சேல்ஸ்மேன் கிரீஸ் கார்ட்னர்( Will smith). தன்னிடமுள்ள முதலீட்டை மொத்தமாக அந்த மெசினில் போடுகிறார்.. ஆனால் மெசின் விற்பனையாகவில்லை.. இதனால் வருமானமில்லாமல் மிகுந்த சிரமப்படும் நேரம் மனைவியும் பிரிந்து செல்கிறார்..

வாடகை கொடுக்காததால் அவரும் அவருடைய 5 வயது மகனும் நடு தெருவிற்கு வருகிறார்கள்.. கையில் இருப்பதோ வெறும் 25 டாலர்.. இந்த நிலையிலிருக்கும் கிரீஸ் எப்படி வாழ்க்கையில் முன்னேறினார் என்பதே கதை...

இது Motivational movie ஆக இருந்தாலும் படம் பெரிதும் பேசப்பட்டது இந்த படத்தில் வரும் அப்பா மகன் அன்பிற்காகவே.. நடுத்தெருவில் நிற்கும் வில் சுமித் தன் நிலை கண்டும் தன் மகனை எண்ணியும் அழும் காட்சிகள் கண்ணீர் வர வைப்பவை.. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்..

ஒரு தந்தை என்பவர் எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் குழந்தையை வளர்கிறார் என்பது பலருடைய வாழ்க்கையை உரசி செல்லும்..

இந்த திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று..
IMDB. இந்த திரைப்படத்திற்கு 8.1 மதிப்பீடு கொடுத்துள்ளனர்..
 
Top