• Please use an working Email account to verify your memebership in the forum

Main Switch Thaan Must (Supreme Court of India)

R

Ravanan

Guest

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு


இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 2005க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன.

தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989ல் திமுக ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில் பூர்வீக சொத்துடமையில் பெண் வாரிசுகளுக்கான சம பங்கை பின் தேதியிட்டு உறுதிப்படுத்தி இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.


1929 : பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும் என்று தந்தை பெரியார் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்.

1989 : பெண்களுக்கு சொத்தில் சம பங்குண்டு என சட்டமாக்கியவர் கலைஞர்.! (தமிழ்நாடு - 1989)

2020 : பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு (இந்தியா - 2020)

இந்திய ஒன்றியம் பெரியாரின் சிந்தனைக்கு 90 ஆண்டுகளும், தமிழ்நாட்டின் சட்டத்திற்கு 30 ஆண்டுகளும் பின்தங்கி இருக்கிறது.

லேட்டா இருக்கலாம் அதுக்குனு இவ்ளோ லேட்டாவா இருக்கறது.


Main Switch Thaan Must

 
Last edited by a moderator:
Top