• Please use an working Email account to verify your memebership in the forum

Lockdown 3.0

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

*நாடு முழுக்க, மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு*


*மே 17ஆம் தேதி வரை மக்கள் இப்போதுள்ள நெறிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.*


*இருப்பினும், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்றவாறு கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டன.*


*இதில், சிவப்பு மண்டலம் மிகவும் அதிகமான கெடுபிடிகளுடன் இருக்கும். இருப்பினும் இப்போது உள்ள நிலைமையை விட சற்று தளர்வு செய்யப்பட்டுள்ளது*


*அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும்,*


*முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், அனைத்து மண்டலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளன*


*ஒருவேளை இந்த கட்டுப்பாடுகளை மீறினால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.*


*இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது.*


*அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசின் இந்த உத்தரவை 2005ம் ஆண்டு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.*


*அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம். சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும்*


*5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை ஒரே இடத்தில் கூடசெய்ய எந்த ஒரு அமைப்புக்கும் உரிமை கிடையாது*


*லாக்டவுன் 3.0: ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகள் ஓட அனுமதி.. புதிய கட்டுப்பாடு திருமணங்கள் உள்ளிட்ட உறவினர்கள் கூட கூடிய நிகழ்வுகள் என்றால் சமூக இடைவெளி பின்பற்றப்படவேண்டும்.*


*அதிகபட்சம் 50 விருந்தினர்கள் மட்டுமே அதில் பங்கேற்க வேண்டும். இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அங்கும் சமூக இடைவெளி என்பது பராமரிக்கப்பட வேண்டும்.*


*பொது இடங்களில் துப்புவது, அபராதத்துடன் கூடிய குற்றச் செயலாகும். மதுபானம், புகையிலை, பான், குட்காவை பொது இடங்களில் பயன்படுத்துவது அனுமதிக்கப்படமாட்டாது.*


*மதுபானம், குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடிய கடைகள் அதிகபட்சம் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிற்க வைத்து விற்பனை செய்ய வேண்டும்.*


*ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் கடையில் கூடை கூட அனுமதிக்க கூடாது.அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இந்த உத்தரவை உரிய வகையில் செயல்படுத்த பொறுப்பாளிகள் ஆவர்.*


*இந்த விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது 2005ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவு 51 முதல் 60 வரையிலான விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.*


*இது தவிர இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 கீழும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.*
 
Top