• Please use an working Email account to verify your memebership in the forum

Little Terrorist | Indias only Oscar® nominated short film

Spike

Member
Messages
13
Points
13

Reputation:


லிட்டில் டெரரிஸ்ட் 2004ல் வெளியான இந்திய குறும்படம். இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே குறும்படம் லிட்டில் டெரரிஸ்ட் தான்.

இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் சிறுவர்களில் ஒருவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்து விழுந்த பந்தை எடுப்பதற்காக தடுப்பு வெளிய கடந்து வருகிறான். எல்லையை தாண்டி வந்த சிறுவனை கண்ட எல்லையோர பாதுகாப்பு படையினர் துரத்துகின்றனர். அந்தப்பக்கம் தற்செயலாக வரும் ஒரு ஹிந்து பிராமின் ஸ்கூல் மாஸ்டர் அந்த பையனை காப்பாற்றி எப்படி அந்த பக்கம் சேர்கிறார் அப்படிங்கிறது தான் கதை.

மேலோட்டமாக பார்க்கும்பொழுது பிரிவினைவாதத்தை பற்றி பேசும் ஒரு படம் போல தான் தெரியும். ஆனால் சில நுண்ணிய விஷயங்கள்களையும் அழகாக படத்தில் காட்சிப்படுத்தியிருக்கார் இயக்குனர். முன்னாடி ஒரு பதிவுல சொல்லியிருக்கிற மாதிரி குறைவான நேரத்துல ஒரு கதையை தெளிவா அழுத்தமா சொல்றது தான் குறும்படத்தோட வெற்றி. அதை இந்த படத்துல இயக்குனர் அழகா கையாண்டிருக்காரு. பிரிவினைவாதத்தை சொல்ற பல படங்களை போலவே இதுவும் க்ளிஷேவா இருந்தாலும் அதுல ஒரு அழகான கதையை சொல்லியிருக்காரு இயக்குனர். கூடவே சின்ன சின்ன தருணங்கள் அழகா படமாக்கப்பட்டிருக்கு. முக்கியமா அந்த landscape, ராஜஸ்தான் - லடாக் எல்லையை ஒட்டி அந்த கிராமமும், அவர்களின் வாழ்க்கை முறையும், பிற்போக்கான மனநிலையும் தெளிவாக காட்டியிருக்கும் சில காட்சிகள் ரசிக்கத்தக்கவை.

படத்தின் தலைப்பிற்கு நியாயப்படுத்தும்விதமாக இருக்கும் காட்சியும் அற்புதமானது. எல்லையை தாண்டி ஓடி வரும் சிறுவன் ஜமாலை துரத்தி வரும் பாதுகாப்புபடையினர் அந்த வழியே வரும் ஸ்கூல் மாஸ்டரிடம் விசாரிக்கும்பொழுது, அந்த சிறுவனை தீவிரவாதி என்று குறிப்பிடுகின்றனர். அப்பொழுது ஒளிந்திருக்கும் சிறுவனை பார்த்துவிட்ட வாத்தியார் இந்த சின்னஞ் சிறுவனையா தீவிரவாதி என்று அழைக்கின்றனர் என்பது போல ஒரு பார்வை பார்த்து 'அவர்களும் நம்மளை போல மனுஷங்க தான்' என்று குறிப்பிடுவார்.

அந்த பையனை ஏற்றுக்கொள்ள முடியாத பொழுதிலும் அவனை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் இன்னமும் நம்முள் மிச்சமிருக்கும் மனிதத்தை எடுத்துக்காட்டுகிறார் இயக்குனர். மதரீதியாகவும் ஜாதியரீதியாகவும் பிளவுப்பட்டிருக்கும் சமூக அவலத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் திரைப்படத்தில். முஸ்லீம் என்று சொன்னவுடன் வீட்திற்குள் ஏற்க தயங்கும் பெண், பாதுகாப்புப்படையினர் வந்து தேடும்பொழுது அவளே அந்த சிறுவனை காப்பாற்றவும் செய்கிறாள். இப்படியாக நம்மிடையே இன்னமும் நிலைத்திருக்கும் குழப்பான மனநிலை படத்தில் பிரதிபலித்திருக்கிறது.

ஒரு கிளிஷேவான படம் எனினும், பாசாங்கையோ அல்லது பச்சாதாபத்தையோ படம் காட்டவில்லை, பதிலாக நம்முள் பல கேள்விகளை விட்டு செல்கிறது இந்த படம்


 
Top