• Please use an working Email account to verify your memebership in the forum

Leo Tolstoy - Gandhi

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

1664735855523.png1664735872980.png1664735890733.png1664735951114.png1664735935783.png1664735921003.png1664735905786.png

டால்ஸ்டாய் பண்ணை (Tolstoy Farm) என்பது தென்னாப்பிரிக்க இயக்கத்தின் போது மோகன்தாஸ் காந்தியால் தொடங்கப்பட்ட முதல் ஆசிரமமாகும். 1910ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம், டிரான்சுவாலில் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிரான சத்தியாகிரக பிரச்சாரத்தின் தலைமையகமாகச் செயல்பட்டது. இந்த ஆசிரமம் ரஷ்ய எழுத்தாளரும் தத்துவஞானியுமான லியோ டால்ஸ்டாயின் நினைவாகப் பெயரிடப்பட்டது. டால்ஸ்டாய் 1894ஆம் ஆண்டில் வெளியிட்ட‘கடவுளின் இராச்சியம் உங்களுக்குள் உள்ளது’ எனும் புத்தகத்தில் காந்தியின் அகிம்சை கருத்துக்களின் தாக்கங்களைக் காணலாம்.

காந்தி ஆதரவாளரான ஹெர்மன் கல்லன்பாக், காந்தி மற்றும் எழுபது முதல் எண்பது பேர் வரை உள்ளூர் இயக்கம் நடைமுறையில் இருக்கும் வரை அங்கு வாழ அனுமதித்தார். கல்லன்பாக் சமூகத்திற்கான பெயரைப் பரிந்துரைத்தார். இதன் மூலம் மூன்று புதிய கட்டிடங்கள் விரைவில் கட்டவும், அங்குப் பட்டறைகள், பள்ளி, மற்றும் தங்கும் இடத்துடன் உருவாக்கியது.

1664735996916.png

மகாத்மா காந்தி இனிமேல் மேலாடை அணிவதில்லை என்றும் அரையாடை மட்டுமே அணியப்போவதாகவும் முடிவுசெய்து, அதன்படி அரையாடையுடன் தோன்றிய நகரம் மதுரை. அவர் அந்த ஆடைக்கு மாறிய வீடு, முதன் முதலில் அரையாடையுடன் தோன்றிய இடம் போன்றவை இன்னமும் அந்நகர மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
மகாத்மா காந்தி 1896லிருந்து 1946வரை 20 முறை தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில் எட்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்தது 1921 செப்டம்பரில். அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது. "என்னுடைய தமிழக சுற்றுப்பயணத்தின்போது மூன்றாவது சந்தர்ப்பம் வந்தது. கதர் உடுத்திக்கொள்ளலாம் என்றால் போதுமான கதர் கிடைப்பதில்லை. அப்படியே கதர் கிடைத்தாலும் அதை வாங்கிக்கொள்ள போதுமான பணம் இல்லை" என்று மக்கள் என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். "தொழிலாளர்கள் தங்களிடமுள்ள வெளிநாட்டுத் துணிகளை அகற்றிவிட்டால் தங்களுக்கு வேண்டிய கதரை எங்கு வாங்குவது?" என்று கேட்டார்கள்.
இந்தக் கேள்வி என் மனதில் நன்கு பதிந்தது. இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். மௌலானா ஆசாத் சுபானி, ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன் ஆகியோரிடம் மனத்துயரை வெளியிட்டு இனிமேல் இடுப்புத் துணியுடன் இருக்கப்போவதாகக் கூறினேன். மௌலானா என்னுடைய யோசனையை அப்படியே ஏற்றார். மற்ற சக ஊழியர்கள் அமைதியிழந்தார்கள். இவ்வாறு நான் செய்வது மக்களை மனக் குழப்பமடையச் செய்துவிடும் என்றும் சிலர் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்களென்றும் சிலர் என்னை ஒரு பைத்தியக்காரன் என்று கருதி விடுவார்கள் என்றும் சொன்னார்கள்.
நான்கு நாட்கள் இதைப் பற்றி நான் சிந்தனை செய்தேன். இந்த வாக்குவாதங்களை அசைபோட்டுப் பார்த்தேன். "உங்களுக்குக் கதர் கிடைக்காவிட்டால் இடுப்புத் துணியுடன் மனநிறைவடையுங்கள். ஆனால், வெளிநாட்டுத் துணிகளைத் தூக்கி எறியுங்கள்" என்று நான் சொன்னபோதெல்லாம் மனத் தயக்கத்துடனேயே சொன்னேன் என்பதை நான் அறிவேன்.
நான் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தவரை அந்தச் சொற்களுக்குப் போதுமான சக்தி இல்லை. மராஸ் மாகாணத்தில் சுதேசித் துணிகள் பற்றாக்குறையாக இருந்ததும் என்னைக் கவலையடையச் செய்தது. மறுபடியும் என் உத்தேசத்தைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்தேன். அவர்கள் புதிதாக எந்த வாதமும் கூறவில்லை. செப்டம்பர் மாதம் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. அது முடிவதற்குள் வெளிநாட்டுத் துணி விலக்கு நிறைவடைய நான் என்ன செய்ய வேண்டும். என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி இதுதான்.
இந்த நிலையில் நாங்கள் 22ஆம் தேதி இரவு (ஞாபக மறதியாக 22ஆம் தேதி இரவு என காந்தி எழுதியிருக்கிறார். அது 21ஆம் தேதி இரவு) மதுரைக்குப் போய்ச் சேர்ந்தோம். அக்டோபர் 31ஆம் தேதி வரையாவது இடுப்பு வேட்டியுடன் மன நிறைவடைவது என்று நான் முடிவுசெய்தேன். அடுத்த நாள் காலை மதுரை நெசவாளர்கள் கூட்டத்தில் இடுப்பு வேட்டியுடன் பேசினேன்" என்று இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் காந்தி.
செப்டம்பர் 22ஆம் தேதி காந்தி இது குறித்து ஒரு அறிக்கை விடுத்தார். அதில், "வெளிநாட்டுத் துணி விலக்கிற்காக அனைத்து இந்தியக் காங்கிரஸ் குழு கூறிய ஓராண்டு கால வாய்தாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனாலும் வெளிநாட்டுத் துணியைவிட முடியாது என்று பலர் கருதுவார்களேயானால், அவர்கள் இடுப்பு வேட்டியுடன் - அவசியமான இடங்களில் மேல் துண்டுடன் மனநிறைவடைய வேண்டும். அதற்கு ஒரு முன்னுதாரணமாக நானே சட்டையையும் தொப்பியையும் அகற்றிவிட்டு இடுப்பு வேட்டியை மட்டும் குறைந்தது அக்டோபர் 31ஆம் தேதிவரையாவது அணிந்துவர வேண்டுமென்று எண்ணியுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகும் காந்தி அரையாடையுடனேயே தன் வாழ்வைத் தொடர்ந்தார். மரணமடையும்வரை அப்படியே வாழ்ந்தார்.
காந்தி தன் ஆடையை மாற்றிய ராம்ஜியின் இல்லம் இருந்த அந்தக் கட்டடம் அப்படியே இருக்கிறது. அதன் முகவரி, "261 - ஏ, மேலமாசி வீதி, மதுரை - 1". அங்கே தற்போது ஒரு காதி கிராஃப்ட் கடை இயங்கிவருகிறது. அந்தக் கட்டடத்தில் வாயிலில் காந்தி அங்கே தங்கியிருந்தது குறித்த கல்வெட்டும் இருக்கிறது.
காந்தி முதன்முதலில் அரையாடையுடன் தோன்றி பொதுமக்களிடம் பேசிய இடம் காந்தி பொட்டல் என்று அழைக்கப்படுகிறது. அங்கே ஒரு சிறிய காந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.


ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் !
சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ ப்யாரே து சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !
ரகுபதி ராகவ ராஜா ராம் ! பதீத பாவன சீதாராம் !
ஓ ராமா , ரகு வம்சமே, வீழ்ந்தவரை உயர்த்தும் உன்னதரே,
உன்னையும் உன்னுடைய அன்புக்குரிய பத்தினியான சீதாவையும் வழிபட வேண்டும்.
ஈஸ்வரா, அல்லா மற்றும் அனைத்து கடவுள்களின் பெயர்களும் ஒரே உயர்ந்த சக்தியை தான் குறிக்கின்றன.
ஆண்டவரே, தயவுசெய்து அனைவருக்கும் சமாதானத்தையும் சகோதரதுவத்தையும் கொடுங்கள்.
நாங்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளே.
மனிதகுலத்தின் இந்த நித்திய ஞானம் தொடர கேட்டுக்கொள்கிறோம்.
 
Top