• Please use an working Email account to verify your memebership in the forum

insomnia

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

Insomania:
ஹாலிவுட்டின் Screenplay king எனப்படும் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் 2002 ல் வெளியான திரைப்படமே Insomania.. முன்னனி நடிகர் அல் பாசினோ ஹீரோவாகவும் காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்..

கதை:
அலெஸ்காவில் நடைபெறும் ஒரு பெண்ணின் கொலையை கண்டறிய செல்கிறார்கள் டிடெக்டிவ் டார்மர் ( அல் பாச்சினோ) மற்றும் எச்கார்ட்(மார்டின் டோனோவின்). டார்மர் குற்றவாளிகளை சிக்க வைக்க சில போலியான ஆதாரங்களை உருவாக்கியவர்.. அதை கண்டறிகிறார் எச்கார்ட்.. அந்த ஆதாரங்களை வெளியிடபோவதாகவும் சொல்கிறார்.. டார்மர் சரி முதலில் இந்த பெண்ணின் கொலையை கண்டறியலாம்.. பின்பு அதை பற்றி பேசலாம் என்று பணியில் இறங்குகிறார்கள்.. மெல்ல மெல்ல குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் டார்மர்.. அந்த குற்றவாளி வால்டரை பிடிக்க செல்லும் பொழுது அவன் தப்பிக்க முயற்சிகிறான்.. பனிமூட்டதின் நடுவே டார்மர் வால்டரை சுடுகிறார்.. ஆனால் அருகில் சென்று பார்க்கும் பொழுது அது வால்டர் அல்ல.. டிடெக்டிவ் எச்கார்ட்.. இதை வால்டர் பார்த்துவிடுகிறான்.. என் கொலையை நீ சொல்லாதே.. உன் கொலையை நான் சொல்ல மாட்டேன் என்று ஒப்பந்தம் போடுகிறான் வால்டர்.. அதன் என்ன நடந்தது என்பதே கதைகளம்..

நோலனின் இந்த படத்திற்கு தனி சிறப்பு உண்டு.. ஏனெனில் நோலனின் இந்த படம் Linear கதை.. மற்றும் நேர்த்தியாக புரியும் படி இருக்கும்.. வழக்கமாக நோலனின் திரைப்படங்களை புரிந்துகொள்ள 5 முறையேனும் பார்க்க வேண்டும். இந்த படத்திற்கு அந்த சிக்கல் இல்லை.. மேலும் நோலனின் படங்களில் அவர் அதிகம் சிரமம் இல்லாமலும் சிக்கலான கதைகளம் இல்லாமலும் எடுத்தபடம் இதுவே.. மொத்தத்தில் இதை பார்த்தால் நோலன் படம் தானா என சந்தேகமே வரலாம்..

ஆனாலும் நோலனின் வழக்கமான சில உத்திகள் மாறவில்லை.. நோலனின் படங்களில் ஹுரோவை விட வில்லனுக்கு முக்கியதுவம் இருக்கும் அல்லது வில்லனே இல்லாமல் இருக்கும் அல்லது யார் வில்லன் என்று அறிவதே சிக்கலாக இருக்கும்.. இந்த திரைப்படத்தில் அல்பாச்சினோ நல்லவரா கெட்டவரா.. ஹுரோவா வில்லனா என்பது ஒரு கேள்விகுறியாக வைத்திருப்பார்.. ஆனாலும் மற்ற படங்கள் அளவிற்கு கடினமான கேள்வியாக இருக்காது..
 
Top