• Please use an working Email account to verify your memebership in the forum

#HBD Na.Muthukumar☺️

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

லகின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்' நா.முத்துக்குமாரின் வரிகள்தான் இவை. ஒரு கலைஞன் மறைந்தபின், அவன் அளித்த படைப்புகள் எல்லாமே அந்த மறைவை ஒட்டிய நினைவலைகளாகவே பார்க்கப்படும். நம்மை விட்டுப்பிரிந்த நா.முத்துக்குமார் குறுகிய காலத்தில் புலிப்பாய்ச்சலாய் எண்ணற்ற படைப்புகள் அளித்தவர். வெறும் வார்த்தைத் தோரணங்களாக இல்லாமல், அர்த்தமுள்ள வரிகளாய் அவற்றை மாற்றியவர். "சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாளவில்லை... " என்பன போன்று தீவிர இலக்கியவாதிகளும் வியந்து பாராட்டும் உவமைகளை அளித்தவர். கவிஞனின் பயணம் கவிஞனின் வார்த்தைகளிலேயே... இங்கே...




 

Attachments

  • 0 bytes · Views: 0
Last edited:
R

Ravanan

Guest
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால் ...
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...
 
Top