• Please use an working Email account to verify your memebership in the forum

#HBD BALA

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

பாலா சார் ... பாலா சார்...!

குரல் வந்த திசை திரும்பினால், நண்பனின் உதவியுடன் காற்றில் கைகள் அலைய நடந்து வந்தான், பார்வையற்ற மாணவன் ஒருவன்.

"வணக்கம் பாலா சார்... நானும் தமிழ் இலக்கியம் படிக்கிறேன். பொதுவா, நான் சினிமா போக மாட்டேன். நம்ம சீனியர் டைரக்ட் பண்ணின படம்னு சொன்னாங்க. அதனால, நண்பர்களோட 'சேது' படம் தியேட்டர்ல போய்க் கேட்டேன். ரொம்ப பாதிப்பா இருந்துச்சு பாலா சார்..." என்றவன்.
அருகில் வந்தான். "உங்களை ஒரு தரம் தொட்டுப் பார்த்துக்கட்டுமா? என்றான்.
கண்கள் பொங்க அவன் கைகளை பற்றினேன்.

இரு கரங்களால் என் தலை தொட்டான்.
நெற்றி வருடினான். கன்னம் தடவினான். தாடையை பிடித்தான். அப்படியே தோள்கள் தொட்டவன், "நீங்க எப்படி இருப்பிங்கன்னு தெரியாது சார். ஆனா, இங்கே ஒரு வடிவில் இருக்கீங்க, எப்பவும் இருப்பீங்க!"
என்றான். தன் நெஞ்சு தொட்டு!

"நம்பிக்கையா இருக்கு சார். பெருமையா சொல்லுவேன் சார்... 'பாலா சார் எங்க சீனியர்' னு!"

பொலபொலவென அழுதுவிட்டேன். அதுதான்... அந்தச் சகோதரனின் வார்த்தைகள்தான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த முதல் அடையாளம்... அங்கீகாரம்!

மணிக்கூண்டு மண்டபத் தூணில் சாய்ந்தேன்,
இடியொலியாய்... சுடரொளியாய்... என் நாடி நரம்பெல்லாம் திகுதிகுவெனத் தீப்பிடித்தது.

பாரதி சரியாகத்தான் சொன்னான்...

'பல வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?'

இவன் தான் பாலா புத்தகத்திலிருந்து...

#HBD_Bala
#இவன்தான்_பாலா
 

Attachments

  • 0 bytes · Views: 0
Top