• Please use an working Email account to verify your memebership in the forum

fight club

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

Fight club:

1999 இல் வெளியான ஓர் ஹாலிவுட் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும்..

எட்வர்ட் நாட்டன் மற்றும் பிராட்பிட் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்க ஹாலிவுட்டின் திரில்லர் திரைபடத்தை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் டேவிட் பிஞ்சர் இயக்கிய திரைப்படம்..

கதை:
கதை எட்வர்ட் நாட்டன் சொல்வதாக அமைகிறது... தூக்கமின்மையால் அவதிப்படும் நாட்டன் புற்றுநோயாளிகளுடன் பழகினால் தனக்கு அமைதிகிடைக்கும் என்று எண்ணி அவர்கள் கவுன்சிலிங் நடைபெறும் இடங்களை தேடி தேடி சென்று கலந்துகொள்கிறார்.. அதன் மூலம் சற்று அமைதியை உணர்கிறார்..

அந்த இடத்திற்கு வரும் மார்லா என்னும் பெண்ணை சந்திக்கிறார்.. அதன் பின் மீண்டும் தூக்கமின்மை ஆரம்பமாகிறது..

இந்த நிலையில் விமானபயணத்தின் போது டெயிலர் (பிராட் பிட்) என்பவனை சந்திக்கிறார்.. பயணம் முடிந்து வீடு திரும்பும் போது வீடு பற்றி எரிகிறது.. என்ன செய்ய என்று அறியாமல் டெயிலரை தொடர்புகொள்கிறான்.. அவனும் நாட்டனை தன்னுடன் வந்து தங்குமாறு அழைக்கிறான்.. நாட்டனும் டெயிலருடன் தங்குகின்றான்..

அதன்பின் நாட்டனின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது என்பதே கதை...

டேவிட் பிஞ்சரின் சிறப்பு அவர் திரைப்படங்கள் அனைத்தும் முதல்பாதி முழுவதும் கதையே இல்லததுபோல் வெறுமனே உரையாடல்களாய் செல்லும்.. ஆனால் பிற்பாதியிலேயே ஒவ்வொரு முடிச்சுகளாய் அவிழ்க்கும் போதே முதல்பாதியின் முக்கியதுவமும் விளங்கும்.. இந்த திரைப்படமும் அதே போல் ஒன்றே..
 
Top