• Please use an working Email account to verify your memebership in the forum

Corporate kaalam

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

*சு.வெங்கடேசன் மதுரை மக்களவை உறுப்பினரின் பார்வையில்....*


#கரோனாகாலம்_கார்ப்பரேட்டுகளுக்கு_பொற்காலம்

#நிதியமைச்சரின்_4ஆம்நாள் முழுவதும் #கார்ப்பரேட்டுகளுக்கு_அர்ப்பணம்.

500 நிலக்கரி படுகைகள்,
யூனியன் பிரதேச மின்சார விநியோகம்,
6 விமான நிலையங்கள்,
செயற்கை கோள்,
அணுசக்தி துறை

எல்லாவற்றிலும் தனியார் மயம்.

பலி கடாவுக்கு மாலை போட்டு பொட்டு வைப்பது போல தனியார்க்கு தாரை வார்க்கப்படவுள்ள நிலக்கரி துறை கட்டுமான விரிவாக்கத்திற்கு 50000 கோடி...

இந்தியத் தனியாருக்கு மட்டுமா, எங்களுக்கு இல்லையா என்று அந்நிய நிறுவனங்களையும் ஏங்க விடவில்லை.
ஆயுத உற்பத்தியில்
அந்நிய முதலீட்டிற்கு 49 % லிருந்து 74 % க்கு
கூடுதல் அனுமதி.

இது நிவாரணத்திற்கான நேரம் அரசே...
கார்ப்பரேட் கொண்டாட்டத்திற்கானநேரம் அல்ல...

இழவு வீட்டிலும் ஏதாவது சுருட்ட முடியாதா என்று நோட்டம் விடுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் நிதியமைச்சரே....

தொழிலாளர்
சட்டங்களை எல்லாம்
செல்லாது என்கிறார்
உங்கள் உ.பி முதல்வர் யோகி...

புலம் பெயர் தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், குறு சிறு நடுத்தர தொழிலதிபர்கள்
எல்லோரும் 3 நாட்களாக எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். அவர்கள் எல்லாம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்.

இன்றைய அறிவிப்புகளுக்கும் கரோனா பாதிப்புகளுக்கும் என்ன சம்பந்தம்? மிக மிக முக்கியமான, தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளை எல்லாம் விழுங்குவதற்கு காத்திருந்த கார்ப்பரேட்டுகளின் நீண்ட கால பொருளாதார ஆசைகள் இவை. சாதாரண காலம் எனில் இந்த முடிவுகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வரும். போராட்டங்கள் வரும்.

மக்கள் வாயை மூடிக் கொண்டிருக்கும், ஊரடங்கு தொடர்வதுமான நேரமே "சரியானது" என நினைத்திருக்கிறீர்கள்...
இதைத்தான் இனி வித்தியாசமான ஊரடங்கு என பிரதமர் அறிவித்தார் என இப்போதுதான் புரிகிறது.

கரோனா காலம் கார்ப்பரேட்டுகளின் பொற்காலம்.

ஆனால் உழைப்பாளிகள் மனதில் கோபம் பொங்கிக் கொண்டிருக்கும்
கனல் காலமும் கூட நிதியமைச்சர் அவர்களே...
#நிதியமைச்சர் #நிர்மலாசீத்தாராமன்_அறிவிப்பு
#தனியார்மயம்
#maduraiMPwrites #madurai
 
Top