• Please use an working Email account to verify your memebership in the forum

Corona

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

கரோனா வராமல் இருக்க சிறந்த உணவு எது?

Dr. V. Hariharan, MBBS, MD.,

Diet consultant

சும்மா ரேடியோ ஜாக்கி போகிற போக்கில் 'இது நல்லது, அது நல்லது' என சொல்வதைக் கேட்பதை விட கொஞ்சம் பயோகெமிஸ்டிரி துணையுடன் இந்தப் பிரச்சினையை அணுகுவோம்.

பழங்கள், காய்கறிகள், கீரை ஆகியவற்றில் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து உள்ளன. மேலும் antioxidantகள் உள்ளன. இதனால் இவை வைரஸ் பாதிப்பை தடுக்கும் என நம்பப்படுகிறது.

ஒரு பயோகெமிஸ்ட்ரி MD யாக, முதலாம் ஆண்டு MBBS மாணவர்களுக்கு, நான் எடுக்கும் கிளாஸ்கள்- விட்டமின் மற்றும் மினரல்கள். எந்தந்த வைட்டமின்/மினரல் குறைபாடு, எந்த பிரச்சினையை தருகிறது எனப்பார்ப்போம்.

விட்டமின் A- பார்வைக்குறைபாடு, தோல் பிரச்சினை, குழந்தையின்மை.

விட்டமின் D- எலும்பு மற்றும் பல் பிரச்சினை

E- குழந்தையின்மை, தோல், ஆண்டிஆக்சிடன்ட்

K- ரத்தம் உறைதல்

மேலே உள்ள நான்கும் உடலில் பல காலத்திற்கு சேமித்து வைக்கலாம். D தவிர மற்ற விட்டமின் குறைபாடு அரிது.

கீழே உள்ள விட்டமின்களை உடலில் சேமிக்க முடியாது. தினமும் எடுக்க வேண்டும். அவை குறைந்தால் வரும் வியாதிகள்:

B1- பெரிபெரி (இதயம், நரம்பு பிரச்சினை)

B2- வாய், நாக்கு பிரச்சினை

B3- பெல்லகரா-தோல் பிரச்சினை, மறதி மற்றும் வயிற்றுப்போக்கு

B6- நரம்பு பிரச்சினை மற்றும் ரத்த சோகை

B7- ரத்த சோகை, பசியின்மை, தோல் பிரச்சினை

B9- ரத்த சோகை

B12- நரம்பு பிரச்சினை மற்றும் ரத்த சோகை

C- ஸ்கர்வி - உடலில் பல பாகங்களில் உதிரப்போக்கு

மேலே உள்ள பிரச்சினைகள் உங்களுக்கு இல்லையென்றாலே, உங்களுக்கு விட்டமின் குறைபாடு இல்லை என அர்த்தம்.

மேலே உள்ள ஏதாவது வைட்டமின் குறைபாட்டால், வைரஸ் வரும் என இருக்கிறதா? இல்லையே. அப்படியென்றால் வைட்டமின் அதிகம் எடுத்தால் வைரஸ் வராது என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. ரத்த சோகை இருந்தால், வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும் என்பதற்கும் ஆதாரம் இல்லை. சிலர் 'விட்டமின் சி' அதிகம் எடுத்தால் சளி வராது என்கின்றனர். அதில் பெரிய உண்மையில்லை. மேலே உள்ள விட்டமின்கள் கிடைக்க பாலிஷ் செய்யப்படாத தானியம், கீரை, காய்கறி பழங்கள் என இருந்தாலும், சிம்பிளாக எல்லாமும் கிடைக்க மூன்றே உணவுகள் போதும்.

1 முட்டை மஞ்சள்- C, B12 தவிர அனைத்து விட்டமின்கள் உள்ளன.

1 நெல்லி-C இருக்கிறது

ஒரு கப் தயிர்/பால்-B12. தினமும் இதுவே போதும்.

விட்டமின்களின் ஆண்டி ஆக்சிடன்ட் வினை- A, E, C ஆகியவை ஆண்டிஆக்சிடன்டுகள். இவற்றை வைரஸ் பாதித்த பின் எடுத்தால் சீக்கிரம் குணமடையும் பயன் இருக்கலாம். அதிகம் எடுத்தால் வைரஸ் வராது என்பதற்கு ஆதாரம் இல்லை.

மினரல்கள். தாதுக்கள் குறைந்தால் என்னவாகும்?

கால்சியம்-எலும்பு பிரச்சினை. விட்டமின் டி இல்லையென்றால் மட்டுமே இந்தப் பிரச்சினை உருவாகும்.

பாஸ்பரஸ்-நீண்ட நாள் பட்டினியில் மட்டுமே வரும்

காப்பர்-ரத்த சோகை

மக்நீஷியம்-தூக்கமின்மை, அதிக பிரஷர்

Zinc- குறைந்த எதிர்ப்பு சக்தி

செலினியம்- மிக அரிது

ஐயோடின்-தைராய்டு பிரச்சினை

ஃபுளுரைடு- பல் பிரச்சினை

இரும்புச்சத்து- ரத்த சோகை

சோடியம், பொட்டாஷியம்- இது உணவில் கம்மியானாலும், நார்மல் உடல் உள்ளே அதை தக்க வைத்துக் கொள்ளும்.

ஆக Zinc மற்றும் இரும்பு தான் பிரதானம். முட்டையில் Zinc அதிகம் உண்டு. இரும்புச்சத்து உங்களுக்கு குறைவாக இருக்கிறது என்றால் இரும்பு மாத்திரை, கீரைகள், ஆட்டு ஈரல், மாமிசம் சிறந்தது. ரத்தத்தில் இரும்பு நார்மலாக இருந்து, அதிக இரும்பு உள்ள உணவை எடுத்தால் எதிர்ப்பு சக்தி நார்மலை விடக்கூடும் என்பது உண்மையல்ல.

இப்போது முக்கியமான மேட்டருக்கு வருவோம். Kwashiorkor எனும் பிரச்சினை புரத (protein) குறைபாட்டால் வருவது. உலகில் பல லட்சம் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை உண்டு. இதன் முக்கிய அறிகுறியே, எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைவது தான். இதனால் பல நோய்த் தொற்றுகள் வரும். ஆண்டிபாடி என்பதே புரதம் தான்.

ஆக புரதம் என்பதே எதிர்ப்பு சக்தியின் தூண். துணைக்கு இரும்பு, Zinc, விட்டமின் சி வேண்டும். அவ்வளவே.

புரதம் எதில் அதிகம் உள்ளது?

சிறந்த புரதம்- இறைச்சி, ஈரல், முட்டை வெள்ளை, பனீர், தயிர், பாதாம் மற்றும் கொட்டைகள்

சுமார் புரதம்-பருப்பு, தானியம்.

அதனால் லாஜிக்கலாக பார்த்தால் புரதம் எடுப்பது தான் இந்த நேரத்தில் பயன் தரும். பத்து கிலோ எடையிருந்தால் 8கிராம் புரதம் வேண்டும்.

முட்டை வெள்ளை- 6 கிராம் புரதம்

நூறு கிராம் இறைச்சி- சுமார் 21கிராம்

நூறு கிராம் கொட்டைகள்- சுமார் 21கிராம்

காய்கறி, கீரை, பழம்-மிகக் குறைவாக உள்ளது.

பருப்பு/சுண்டல் வகையறா- நூறு கிராம் சமைத்ததில் 5கிராம் புரதம்

தானியம்- 100கிராம் சமைத்ததில்-2.5கிராம் புரதம்

மேலே புரதம் அதிகமுள்ள உணவை எடுப்பது தான் பேலியோ/கீட்டோ டயட். பலருக்கு அடிக்கடி வரும் சளி மற்றும் இன்பெக்ஷன் குறைவதை கண்டுள்ளேன். பலருக்கு சர்க்கரை, ஜூஸ், இனிப்புகள் ஆகியவற்றை நிறுத்தினாலே சளி/ இன்பெக்ஷன் வருவது குறையக் கண்டேன்.

விரதம்-கீட்டோசிஸ் எனும் நிலை வந்தால், எதிர்ப்பு சக்தி கூடும். மூன்று நாள் பட்டினி கிடந்தால் எதிர்ப்பு சக்தி கூடும். மற்றபடி வைரஸ் வராமல் காக்குமா தெரியவில்லை.

மூலிகைகள்-சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், பசுமஞ்சள், ஆடாதொடா-ஆராய்ச்சி செய்யப்படவில்லை. ஆனால் என் பேஷன்டுகளுக்கு இந்த ஐந்தையும் பவுடராக்கி தந்த போது, சளி, சைனஸ், இருமல் வருவது குறைந்தது. அலர்ஜியை தடுத்திருக்கலாம். வைரஸ் வராமல் தடுக்குமா தெரியாது.

விட்டமின், மினரல்கள் எடுக்கும் ஆர்வத்தை, தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டை எடுப்பதில் காட்டலாம். ஓரளவு பயன் உண்டு.
 
Top