• Please use an working Email account to verify your memebership in the forum

Bharathi

R

Ravanan

Guest

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி , சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?
 
R

Ravanan

Guest

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!



 
R

Ravanan

Guest

பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...

வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....

வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...

தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
 
R

Ravanan

Guest

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
 
R

Ravanan

Guest

ஆசை முகம் மறந்து போச்சே -இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில் நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில் கண்ண னழகு முழிதில்லை; நண்ணு முகவடிவு கானில் – அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.

ஒய்வு மொழிதலுமில் லாமல் – அவன் உறவை நினைத்திருக்கு முள்ளம்; வாயு முரைப்பதுண்டு கண்டாய் -அந்த மாயன் புகழினை யெப்போதும் .

கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க ளினத்திலிது போலே- ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த வைய முழுதுமில்லை தோழி

கண்ணன் முகமறந்து போனால் -இந்தக் கண்க ளிருந்துபய னுண்டோ ? வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி வாழும் வழியென்னடி தோழி .....
 
Top