• Please use an working Email account to verify your memebership in the forum

9th Paasuram of Thirupavai!!!♥️

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

(தூமணி) நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில்(மாடம்), சுற்றி விளக்கெரிய, நறுமணதிரவியம்(தூபம்) மணம் வீச, அழகிய மெத்தையில்(துயில் = தூக்கம், அணை=தலையணை) உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே!(மாமீர்) அவளை நீ எழுப்பு(எழுப்பீரோ). உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா?(அனந்தலோ) அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா(ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ)? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன்(மாமாயன்), மாதவத்துக்கு சொந்தக்காரன்(மாதவன்), வைகுண்டத்துக்கு அதிபதி(வைகுந்தன்) என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்( நவின்று).

விளக்கம்: உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.
 
Top