• Please use an working Email account to verify your memebership in the forum

”வேரும் விழுதும் ”

T

The Reader

Guest
View attachment View attachment View attachment View attachment

தற்காலத் தமிழ் மக்களின் பண்பாடு – டிஸ்கவரி புக்ஸ் ---1998 ஜூலை 25, 26, 27 - “வேரும் விழுதும்” தற்காலத் தமிழக மக்கள் உருவாக்கும் பண்பாடு “-- 3 நாள் கருத்தரங்கம் --Museum of Mankind, IGRMSக்காக நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தினேன். இது IGRMS இயக்குனர் கல்யாண்குமார் சக்கரவர்த்தி, ஓவியர் இராம. பழனியப்பன் ஆகியோர் முன்னின்ற மண்ணின் மரபு நிகழ்வின் ஒரு பகுதி. பாளையம்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், பாண்டிச்சேரியிலுள்ள மக்கள் வழக்காற்றியல் துறை (FOLKLORE) சார்ந்த மிக முக்கியமான, மூத்த பேராசிரியர்கள், எஸ்.டி .லூர்து, ஜெயபதி, நா.ராமச்சந்திரன், ஸ்டீஃஃபன், ஆ.சிவசுப்பிரமணியம், முத்தையா, ஆறு.ராமநாதன் , மு.ராமசாமி, கே.ஏ.குணசேகரன், ச.சண்முகசுந்தரம், ஏ.கே.பெருமாள், செல்லபெருமாள், விஜயவேணுகோபால், பாலுசாமி ஆகியோருடன் அபூர்வ படைப்பாளிகள் கி. ராஜநராயணன், நா. முத்துசாமி , இந்திரன் , இ.ரா. வெங்கடாசலபதி ஆகியோர் பங்கு கொண்டனர். தமிழர் உலோகவியல் பற்றியும் ஒர் அமர்வு . இக்கருத்தரங்கக் கட்டுரைகளை ”வேரும் விழுதும் ” எனும் நூலாகத் தொகுத்து இருக்கிறேன். டிஸ்கவரி வெளியீடு. இந்நூலில் கொலையில் உதித்த தெய்வங்கள், கணியான் கூத்து, இருளர் கதைப்பாடல்கள், நாயக்கர் கால ஓவியங்களில் நாட்டுப்புறக் கூறுபாடு ஆகியவை போன்ற பல கட்டுரைகள் உள.

---Author Indhran.
 
Top