• Please use an working Email account to verify your memebership in the forum

‘இயேசு என்றொரு மானுடம்’

R

Ravanan

Guest
View attachment

மதம் வேறு; இயேசு வேறு. சம்மந்தமில்லாத இருவேறு துருவங்கள்:

புத்தகத்தின் தலைப்பே ‘இயேசு என்றொரு மானுடம்’. ஆசிரியர், முனைவர். திருமதி. சேதுமணி மணியன். மதுரை, செண்பகம் வெளியீடாக 2016 ல் வெளிவந்த புத்தகம், இப்போதுதான் வாசிப்பதற்கான வாய்ப்பு. ஆசிரியர் கிறிஸ்தவர் அல்லர்; கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவரும் அல்லர். அதனாலேயே இயேசுவை, பொய்யான [மதத்திற்கு] உள்ளிருந்து அல்லாமல், மெய்யான வெளியிலிருந்து அவதானித்திருக்கிறார். இயேசுவின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆராய்ச்சிக் கண்கொண்டு அணு அணுவாய் ஆராய்ந்திருக்கிறார். சாக்கடைபோல் கலங்கிக் கிடந்த மத நம்பிக்கைகளைத் தூர்வாற கிளர்ந்தெழுந்த இயேசு என்ற மகத்தான ஆளுமையை, வரலாற்று நாயகனை தரிசனமாய்க் கண்டுணர்ந்து, அந்த தரிசனத்தை நமக்கும் கடத்த முயன்றிருக்கிறார். கல்லூரிப் பருவம் முதலே, இயேசுவை ஒரு போராளியாய் மிக நெருக்கமாக நானும் உணர்ந்தவன் என்பதால் இயேசுவை பற்றிய ஆசிரியரின் கூற்றோடு அப்படியே ஒன்றிப் போகிறேன்.

மதம் வேறு; இயேசு வேறு. சம்பந்தமில்லாத இருவேறு துருவங்கள். மதவாதிகளின் எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் சம்மட்டியால் அடித்தது போன்ற பதிவு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்களே, அதுபோல புத்தகம் மொத்தமே நாற்பத்தியெட்டு பக்கங்கள்தான் ஆனால் கந்தகத்தை கருக் கொண்டிருக்கிறது!
இயேசு மனிதம்; மாமனிதம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். சிறுமை கண்டு பொங்கி, எளிமை கண்டு இறங்கியவர். யூத மதச் சட்டங்களை உருவாக்கிய சதுசேயர்களுக்கும், அதைக் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடித்த பரிசேயர்களுக்கும் கடவுள் பற்றிய அறிவு எள்ளளவும் இல்லை என இயேசு உறுதிபடக் கூறியதை நமக்கு அறியத் தருகிறார் ஆசிரியர். தகனப் பலிகள் கொடுத்துத் தாங்கள் வழிபட்ட கடவுளே அனைத்துக் கடவுளுக்கும் மேம்பட்டவர், அவர் தங்களை மட்டுமே காப்பார் என்று இன்றும் பதட்டத்திலேயே வாழும், கருதும் யூதப் பின்புலத்திலிருந்து வந்த இயேசுதான் கடவுள் என்ற கருத்தாக்கத்தையே மாற்றிக் காட்டுகிறார் என்ற உன்மையை நமக்கு உரக்கச் சொல்கிறார்.

தாம் வாழ்ந்த காலத்தில் கடவுள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை விட தன் பிரபஞ்சத் தந்தையை, பிதாவே என்று அழைப்பதைத்தான் இயேசு பெரிதும் விரும்பியிருக்கிறார். தனிமையில் அவரோடு அவாவுகிறார். நாம் அன்றாடம் செய்யும் இயேசு கற்பித்த செபத்தில்; உமது அரசு வருக, உமது சித்தம் விண்ணுலகில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக என்பது, நியதிகளால் இயங்கும், இயக்கும் பிரபஞ்சப் பேராற்றலே என்பதை தத்ரூபமாக நிரூபிக்கிறார் நூலின் ஆசிரியர். ஆக இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் நிலையே, இயேசு சொன்ன இறையரசு என்பது. நாள்தோறும் புழுங்கிச் செத்தாலும் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் நாம் தவிக்கும் இன்றைய நுகர்வுப் பொருளாதார அரசு அல்ல இறையரசு. அது உங்களுக்குள் இருக்கிறது என்று இயேசு சொல்வது; நீதி வழுவாமல் இயங்கும், இயக்கும் நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் என்ற இந்தப் பிரபஞ்சம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதைத்தான். இதைத்தான் நமது முன்னோர்கள் அண்டத்தில் இருப்பது பிண்டத்திலிருக்கிறது என்றார்களோ!

பேராசை, மனிதன் நாகரிகம் கண்ட நாள் முதலாய்த் தொடரும் அநாகரிகம் என்று ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். நிறைவிலிருந்து குறைவிற்குப் பாய்வதுதான் இயற்கையின் நியதி – சமனம். சமூக, பொருளாதாரத்தில் சமனம் இருக்க வேண்டும், அதுவே இயற்கையின், இறையரசின் நியதி. மானுடம் பிரபஞ்சப் பேரியக்கத்தோடு கைகோர்த்துப் பயணிப்பதுவே இயேசு சொன்ன இறையரசு. அங்கு அன்பே சிவம் என்ற அதிர்வைத் தவிர வேறொன்றுமில்லை. இயேசு என்னும் மானுட குமாரன் தன் பிரபஞ்சத் தந்தையோடு எப்போதும் கைகோர்த்தபடியே இருந்தார். அதனாலேயே குருடர் பார்த்தனர், செவிடர் கேட்டனர், முடவர் எழுந்து நடந்தனர். ஐந்து மீன்களையும், சில துண்டு அப்பங்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு அவரால் உணவளிக்கவும் முடிந்தது.

இறையரசின் ஆற்றலை இயேசு புரிந்திருந்தார், அதனால்தான் தன்னைப் பிந்தொடர்ந்த கூட்ட நெரிசலிலும், அவரது ஆடையின் விளிம்பையாகிலும் தொட்டால் குணமாவேன் என்று விசுவாசத்தோடு தொட்ட பெரும்பாடுடைய பெண்ணை அவரால் அடையாளம் காண முடிந்தது. ‘’யார் என்னைத் தொட்டது, என்னிடமிருந்து ஆற்றல் வெளிப்பட்டதை உணர்ந்தேன்’’ என்கிறார். இதனாலேயே ‘’என் பிதா என்னோடும், நான் அவருள்ளும் இருக்கிறேன்’’ என்று அணித்தரமாக அவரால் சொல்ல முடிகிறது. ‘’குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள் இறையரசு அவர்களது’’ என்பது சமூக, பொருளாதாரக் கறை படாமல் இருக்கும் இளையவர்களின் தூய்மையான மனது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

அடிப்படைவாத யூத மதம் என்ற பெரும் விருட்சத்தின் அடியில், கூர்தீட்டி இறையரசு என்ற பிரபஞ்சத்தால் காலம் கருதி வைக்கப்பட்ட கோடாரி இயேசு. சாதுவானவர் அல்ல இயேசு என்னும் மாமனிதம். அன்றைய அறம் பிறழ் வாழ்வில் கோபம் கொண்டு கொப்பளித்த மாமனிதம். ‘’உங்களில் எவனொருவன் பாவம் செய்யாதவனோ, அவன் இந்தப் பெண் மீது தன் முதற் கல்லை வீசட்டும்’’ ‘’மருத்துவன் நோயற்றவருக்கன்றி, நோயுற்றவருக்கே தேவை’’ ‘’என் பிதாவின் கட்டளைகளை நிறைவேற்றவே வந்தேன்’’ ‘’நான் உனக்குச் சொல்கிறேன் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’’ ஆணித்தரமான வார்த்தை பிரயோகங்கள் அவருடையவை. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண் உரிமை பற்றிப் பேசி அதைச் செயலிலும் செய்து மகிழ்ந்தவர் இயேசு என்னும் முழுமனிதன்.

மதத்தின் ஆட்சியை அடித்து நொருக்கி, மக்களை விடுவிப்பதற்காக தன் இன்னுயிர் தந்த இயேசு ஆராதனைக்குரியவர் அல்லர், மாறாக பின்பற்றுதலுக்குரியவர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். எதெற்கெடுத்தாலும் தேவரகசியம், இது விசுவாசத்தின் மறைபொருள் எனப் பொங்கி வழியும் போலியான நம்பிக்கைகளுக்கு சம்மட்டி அடிகொடுத்து இயேசுவை மனுமகனாக, பிரபஞ்சப் பிதாவின் நேசகுமாரனாக நமக்கு அறியச் செய்கிறார். எனவே உளுத்துப் போன சடங்கு, சம்பிரதாயங்களுக்குள் அவரை நுழைத்துப் போலியாய் ஆராதிப்பதைக் காட்டிலும், அறத்தோடு பின்பற்றுவதே இயேசு என்ற மாமனிதத்துக்குச் நாம் செய்யும் மரியாதை. கத்தோலிக்கத்தின் ஞான மேய்ப்பர்கள் கண்டிப்பாய் படித்துத் தெளிய வேண்டிய எளிய, சிறிய நூல் இது.

View attachment

Book Reviewer
Joe D'Cruz

R. N. Joe D'Cruz is a Tamil writer, novelist and documentary film director from Tamil Nadu, India. He won the Sahitya Akademi award in 2013 in the Tamil language category for his novel Korkai. He is the Tamil Nadu state president of Samskrita Bharati.

Joe D'Cruz has also been a managerial-executive in the shipping industry for a long time and is currently a member of the National Shipping Board of the Ministry of Shipping, Government of India.

Joe D'Cruz was born in a Roman Catholic Paravar family in Uvari, a coastal village in Tirunelveli District of Tamil Nadu. He did his schooling in Uvari and Idaiyangudi. He graduated with an M.A.(Economics) at Loyola College, Chennai and did his M.Phil at St. Joseph's College, Tiruchirapalli. He is married to Sasikala and has two children. He has been working in the shipping industry for more than two decades.

View attachment

Dialogues in the film are penned by Joe D' Cruz


ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் வாதை அய்யா,

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ ..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,

வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே..

நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டம் வரு ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
 
Top