• Please use an working Email account to verify your memebership in the forum

வேடந்தாங்கல்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்த பூமி செழிப்பாக இருக்க பூமியின் நிலப்பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.. ஆனால் நாம் ஏற்கனவே பூமியை, பூமியின் வளங்களை தேவைக்கும் அதிகமாக அழித்துவிட்டோம்.. காடுகளை சூரையாடிவிட்டோம்..

இந்த காடுகள் ஒன்றும் நம் முன்னோர்கள் உருவாக்கியதல்ல.. இயற்கையே தன்னை உருவாக்கி கொண்டது.. அதன் பரவலுக்கு பறவைகளில் எச்சங்கள் உதவின.. ஒரு காகம் தன் வாழ்நாளில் 40000 மரங்களை நடுகிறதாம்.. இப்படி ஒவ்வொரு பறவையும் தன் வாழ்நாளில் தன்னுடைய செரிமானமாகத எச்சதௌதை கொண்டு உருவாக்கியதே காடுகள்.. மற்ற அனைத்து உயிர்களும் இந்த காடுகளை உருவாக்குவதில் பாதுகாப்பதில் பங்களிக்கின்றன.. மனிதன் ஒருவனே அதை அழிப்பதில் முன்நிற்கிறான்..

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பரப்பளவை 5Km ல் இருந்து 3Km ஆக குறைக்க வேண்டும் எனும் கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது..

இந்த கோரிக்கை அனுப்பியது வேறு யாரும் அல்ல.. ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசும்.. எதிர்கட்சியாக இருக்கும் திமுகவுமே.. சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு பறவைகள் சரணாலயம் பரப்பளவை குறைக்க வேண்டும் என சன் ஃபார்மா கோரிக்கை வைத்துள்ளது.. தொலைநோக்கு திட்ட வளர்ச்சிகாக இதை செய்ய வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளதுView attachment
 
Top