• Please use an working Email account to verify your memebership in the forum

வெட்டுக்கிளி

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

கொராணா வைரஸ விட கொடிய தாக்குதல் நடத்தும் வெட்டுக்கிளிகள் விவசாயத்தை நாசம்பண்ணுகிறது அடுத்த அதிா்ச்சி

இடம்.ஜெய்ப்பூா் ராஜஸ்தான்

திரைப்பட கதைகளை விஞ்சி நடக்கும் 2020-ன் தொடர் பேரழிவுகள்!

"ஒரு சதுர கிலோ மீட்டர் அளிவல் உள்ள சுமார் 4கோடி வெட்டுக்கிளிகள் கிட்டதட்ட 35,000 மனிதனின் விவசாய உணவை அழித்துவிடும் என்றும், இந்த வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்கா, ஈரான், பாகிஸ்தான் வழியாக.. இந்தியாவிற்கு வந்தடையும்
என்றும், ஐநா'வின் உணவு மற்றும் விவசாய ஆணையம் சில நாட்களுக்கு முன்பு செய்தி அறிக்கை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக சில நாட்களாக ஈரான் நாடும், பின்பு பாகிஸ்தானும் கடும் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளான செய்திகள் வந்தது. இதை தொடர்ந்து நேற்று, வெட்டுக்கிளி கூட்டம் இந்திய எல்லை பகுதிகளில் நுழைந்து, இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் கோடி கணக்கில் ஊடுருவி, அங்குள்ள மரங்களை அழித்து சென்றுள்ளது. இது மேலும் அங்குள்ள 18 மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தற்போது பரவி மத்தியப்பிரதேச மாநிலத்திலும் ஊடுருவியுள்ளது, மேலும் இது பல வடமாநிலங்களில் சென்றடைந்து பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், மரங்களையும் அழிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. UN-FAO கடந்து 10 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை இவை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து எச்சரிக்கிறது. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளி தாக்குதலால் ஆரம்பத்திலேயே பாதிப்புக்கு உள்ளான கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் இதனால் ஏற்பட்ட அதீத இழப்பால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது! எல்லாவற்றிக்கும் மேலாக 1சதுர கிமீ'ல் 4கோடி எண்ணிக்கையில் இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள் பொதுவாக 1000சதுரகி.மீ அளவில், நாள் ஒன்றுக்கு 150கி.மீ வரை பறக்கக்கூடியது என்பது, பேரதிர்ச்சி அளிப்பதோடு,
இந்த பூச்சிகள், கொரோனா கிருமி, இவையெல்லாம் 2020ன் போர் ஆயுதங்களாகவே தென்படுகிறது.
 

Attachments

  • 0 bytes · Views: 2
  • 0 bytes · Views: 2
  • 0 bytes · Views: 2
  • 0 bytes · Views: 2
Top