Phoenix
Well-known member
- Messages
- 966
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வள்ளுவமும் காதலும் - 10
தன்னுயிர் பிரிவதை பார்த்ததுண்டோ?
இந்தப் பேரண்டத்தில் உயிர்த்திருக்கும் எந்த உயிரினமும் தன்னுடைய உயிர் பிரிவதை தானே கண்டதில்லை. ஆனால் தன் காதலை பிரிய நேரும் போது, மனிதன் மட்டும் அவ்வாறு உணர்வதுண்டு. மற்ற பொழுதுகளில் கண்களுக்கே தெரியாமல் கண்ணாமூச்சியாடும் உயிரின் உச்சியைப் பிடித்து உள்ளிருந்து பிரித்தெடுக்க இந்தக் காதலால் மட்டும் எப்படி முடிகிறது?
உடலை தீ வைத்து எரித்தாலும் கூட இந்த பிரிவின் வலிக்கு ஈடாகாதென்றே கவிஞர்கள் பலர் கருதுகிறார்கள். கவிஞர்களையே கண்ணீர்க் கடலில் தத்தளிக்க வைக்கும் பிரிவுத்துயர், தன் கைகளில் சிக்கிய அப்பாவிக் காதலர்களை சும்மா விட்டு விடுமா என்ன?
பொருள் நிமித்தமோ போரின் நிமித்தமோ காதலன் பிரிந்து செல்லப் போவதை முன்னறிவிக்கும் முரசுகளாக என் முன்கை வளையல்களே மாறிப் போகின்றன. பிரிந்த பிறகோ அவன் அணிவித்த வளையல்களே என் இடையணியாகின்றன. முன்பே நூலிடை என்பானே... அவன் திரும்பி வரும் பொழுது என் நிலை கண்டு ஏது சொல்வானோ?
அவனை முன்பு நேராகக் காணமுடியாமல் ஓரக்கண்ணால் கண்டு நாணிய என் கண்களோ இப்பொழுது அவனைக் காட்டு என்று வெட்கம் விட்டு என்னை நச்சரித்த வண்ணம் இருக்கின்றன. மை எழுதும் போதும் செஞ்சாந்திடும் போதும் அவனில்லாத நாட்களை சுவரில் குறிக்கிறேன். நாட்கள் செல்லச் செல்ல, அவற்றைத் தொட்டு எண்ணி எண்ணியே என் விரல்கள் தேய்ந்துவிட்ட கதை அவன் காதுகளுக்கு என்றேனும் போய்ச் சேருமா?
'ஊரில் எவரும் செய்யாத காதலைச் செய்கிறவளைப் பார்த்தாயா?' என்று என் முதுகின் பின்னே உலகத்தார் செய்யும் பரிகாசம் போதாதென்று இந்தப் பசலை வேறு என் மேனியெங்கும் படர்ந்து தொலைத்திருக்கிறது. அவன் தீண்டலின் தித்திப்பை உணர்ந்த தேகத்தை இன்று பசலையே ஆலிங்கனம் செய்திருக்கிறது! 'அவனுக்கு மட்டுமே சொந்தமான என்னுடலைத் தீண்டும் இத்துணிவு எங்கிருந்து வந்தது உனக்கு?' என்று கோபமாக நான் கேட்டால், 'உண்டாக்கியவன் அவன் என்ற திமிர்', என்கிறது!
அவன் என்னிடம் பேசிய வார்த்தைகளை மட்டுமே நான் அசைபோடுகிறேன். பிறரிடம் நான் பேசுவதும் அவனைப் பற்றித்தான். அவ்வளவு ஏன்? மனத்தினால் நான் நினைப்பது கூட அவனை மட்டும் தான். அப்படியிருக்க இந்தப் பசலை படர்ந்தது என்ன மாயமோ?
என்னுடன் பேசிக்கொண்டிருப்பதாக நான் எண்ணிக்கொண்டிருக்க, "அண்ணன் இருக்கும்போது சதா சண்டையிட்டுவிட்டு என்னிடம் அவரைப் பற்றி குறை கூறுவாய். இப்போது என்னவென்றால் இப்படி புலம்பித் தள்ளுகிறாயே?" என்று என் தோளை இடித்தபடியே தோழி கேட்கவும்தான் கனவுலகம் விட்டு நனவுலகம் திரும்பினேன் நான்!
"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
என்ன செய்ய? உன் அண்ணனின் நினைவில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் ஏழு நாள் போலல்லவா எனக்குத் தோன்றுகிறது!" என்று சிறுபிள்ளையைப் போல நான் சொல்ல, சிரித்தே விட்டாள் அவள்!
"அப்போது அவர் வந்ததும் பிணக்கின்றி இருப்பாய். அப்படித்தானே?" என்று தோழி கண் சிமிட்டிட, "அது எப்படி? ஊடலில்லா காதல் ருசிக்காதே!" என்று பதிலுக்கு நானும் இமை கொட்டிட, "அம்மாடியோவ்..! காதலென்றால் இத்துணை துயரா? இதற்கு பிரியம் வைக்காமலேயே இருக்கலாம்!" என்று பெரிதும் சலித்தாள் அவள்.
பிரிவொன்று நேரலாம். ஆனால் என் பிரியம் ஒருபோதும் குறையாது என்பதை பேதையவள் அறிந்திருக்கவில்லை!
ஏனெனில் காதலில் வலியும் கூட ஒரு சுகம் தான்!
(இன்னும் பேசுவோம்...)