Phoenix
Well-known member
- Messages
- 976
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வருகை
கனவில் நிறங்கள் தெரியாதாம்
நீ தோன்றினாலே அங்கே
வண்ணங்களும் தோன்றுமென்று
அறியாது அறிவியல் தோற்றது!
சுழல்வதால்தான் உலகத்தை
ஞாலம் என்கிறோமாம்!
எனக்கென்னவோ நீ இருப்பதாலேதான்
அது சுழல்வதாகவே தோன்றுகிறது!
தன் முதுகைத் தன் முகம்
காணாததைப்போல
நான் உன்னை நினைப்பதை
என்றேனும் நீ அறியக்கூடுமோ?
என்னுள் நிறைந்தவனே...
நீ பரிசளித்த முத்தங்களை மட்டுமல்ல
என் கண்ணீர் முத்துக்களையும்
உனக்காய் சேமிக்கிறேன்!
என் விழிமொழி அறிந்து
விரைந்து வருவாயா?
கனவில் நிறங்கள் தெரியாதாம்
நீ தோன்றினாலே அங்கே
வண்ணங்களும் தோன்றுமென்று
அறியாது அறிவியல் தோற்றது!
சுழல்வதால்தான் உலகத்தை
ஞாலம் என்கிறோமாம்!
எனக்கென்னவோ நீ இருப்பதாலேதான்
அது சுழல்வதாகவே தோன்றுகிறது!
தன் முதுகைத் தன் முகம்
காணாததைப்போல
நான் உன்னை நினைப்பதை
என்றேனும் நீ அறியக்கூடுமோ?
என்னுள் நிறைந்தவனே...
நீ பரிசளித்த முத்தங்களை மட்டுமல்ல
என் கண்ணீர் முத்துக்களையும்
உனக்காய் சேமிக்கிறேன்!
என் விழிமொழி அறிந்து
விரைந்து வருவாயா?