• Please use an working Email account to verify your memebership in the forum

வணிக_ரீதியில்_மரம்_வளர்ப்பு

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

#வணிக_ரீதியில்_மரம்_வளர்ப்பு
தமிழகத்தில் போதுமான மழை பெய்ய வில்லை. பல இடங்களில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. விவசாயத்திற்கு ஆட்கள் பல இடங்களில் கிடைக்கவில்லை. விளை பொருட்களுக்கு நல்ல விலை இல்லை. எனவே கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பழ மரங்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவு ஈடுபடுகின்றனர். விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செம்மரம், மா மரங்கள், சவுக்கு மரங்களை விளைவிக்கின்றனர்.
மரம் நடுவதை வனத்துறை ஊக்குவிக்கின்றது. பட்டா நிலங்களில் மரம் நட மானியம் வழங்குகிறது. தேக்கு, சந்தனம், செம்மரங்களை நட்டு வளர்க்கவும், விற்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மரங்களை நட்டாலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள், கீரைகள் என ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். அதன் மூலம் மரங்களும் நன்கு வளரும். வருவாயும் கிடைக்கும். ஆடு, மாடு, கோழிகளை மரங்களுக்கு இடையே வளர்ப்பதால் அதன் சாணம், எச்சம், கோமியம் மரங்களுக்கு நல்ல உரமாகும்.
இவற்றில் மண் புழு உரம் தயாரிக்கலாம். அவற்றை மரங்களுக்கும் இடலாம். விற்பனையும் செய்யலாம். ஓராண்டு காலம் மண்புழு உரம் தயாரித்தால் அந்த தோப்பு முழுவதும் மண் புழு வளரும். அதன் மூலம் மண் வளமாகி மரங்களும், ஊடு பயிர்களும் நன்கு வளரும். பல இடங்களில் மலை வேம்பு வளர்க்கின்றனர். காரணம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க தேவையில்லை. காகித ஆலைகள், பிளைவுட் தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்து மரங்களை வாங்கி செல்கின்றனர். 3 ஆண்டு வீதம் ஒரு மரம் விட்டு ஒரு மரத்தை வெட்டி விற்கலாம். 5ம் ஆண்டில் மீதி மரங்களை நல்ல விலைக்கு விற்கலாம்.
 
R

Ravanan

Guest
தேக்கு, சந்தனம், செம்மரம் ( Teakwood, Sandal, Rosewood ) Good Profit. But, Before Cultivate We have to get Certificate From Tahsildar Then only Govt Permit For Harvesting otherwise it considered as illegal Activity and chase over that woods and handover to the forest department tesserae, imprisonment, and fines will apply to the farmers. However, Teakwood, Sandal, and Rosewood Large Margin for farmers.
 
Top