• Please use an working Email account to verify your memebership in the forum

லஞ்சம், ஊழல், பெண்ணுரிமை

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

மன்னராட்சியில் நாம் நிலம் இல்லா சமூகம். மன்னர், மன்னரிடமிருந்து அடுத்தகட்ட அதிகாரம் ஜமீன்தார்.. அவர்களிடம் மக்கள் பண்ணை ஆட்கள். உழைப்பு மட்டுமே மூலதனம். உற்பத்தியில் நம்முடைய முதலீடு உழைப்பு மட்டுமே. அந்த உழைப்பால் கிடைக்கும் மூலதனம் வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லாமல் வாழ்ந்தோம். அதாவது காலம் காலமாக நிலமற்ற கூலிகள். நிலமுடையை சமூகமாக மாறவே இல்லை. இன்று மக்களாட்சியில்? அதே நிலை தான் தொடர்கிறது. சமூகம் மாறிவிட்டது.. நிலவுடைமை சமூகத்தில் இருந்து பெருமுதலாளி சமூகமாக. ஆனால் மக்களின் நிலை அதே உழைப்பு மட்டுமே முதலீடு. பெருமுதலாளித்துவ லாப நோக்கிலும் இந்த அமைப்பு மாறக்கூடாது என்ற எண்ணத்திலும் பாட்டாளிகளை மேல் எழ விடாமல் வைத்துள்ளது. இதன் மூலம் நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற குறுகிய மனப்பான்மையிலேயே நம்மை வைத்துள்ளது. மேலும் மக்கள் பிழைக்க வாய்ப்பு தக்கான தப்பி பிழைத்தாலே என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. தகுதி உடையது மட்டுமே பிழைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி போனதால் குடும்பம் குழந்தை போற்றவற்றின் மேல் கொண்ட பாசத்தால் நம் குடும்பம் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொத்து உருவாகிறது. போதும் என்ற எண்ணம் எதுவுமின்றி பாசத்தால் சேர்த்து கொண்டே செல்கிறோம். தன் சந்ததிகள் உற்பத்தியில் பங்கு பெற்றாலும் பெறாவிட்டாலும் அவை தப்பி பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த தலைமுறைக்கு உழைக்கவும் சொத்து சேர்க்கவும் தொடங்குகின்றோம். இந்த என்ன ஓட்டத்தில் ஓடும் ஒருவன் அவனுக்கு தேவையான பொருளை விட அதிகமாக அடுத்த சந்ததிக்கு சேர்க்கும் போது அவன் அதற்காக உழைக்கும் வர்க்கத்தின் மேல் அதை புகுத்துகிறான். மிக எளிமையாக சொன்னால் என்னால் 5 இட்லி தான் சாப்பிட முடியும் என்றால் நான் அடுத்த வேலைக்கும் சேர்த்து 10 இட்லி சாப்பிடுவது. இன்னொருவன் ஒரு இட்லியும் இல்லாமல் போவது. தனிவுடைமை சமூகமாக மாறி போகிறோம். உழைக்கும் வர்க்கம் மேலேழும்பாமல் இருக்கும் வரையே இந்த சுகப்போக வாழ்க்கை நீடிக்கும் என்பதால் பெருமுதலாளி வர்க்கம் மக்களிடையே ஒரு போட்டி மனப்பான்மையை திணிக்கிறது. உற்பத்தியில் பங்கு பெறவே பலரை போட்டியிட வைக்கிறது. உதாரணமாக 100 பேர் இருக்கும் இடத்தில் 50 பேருக்கே வேலை உண்டு என்பது. உற்பத்தியில் பங்கு பெறவே போட்டியிடும் சமூகம் அதன் அடுத்த படிநிலையை சிந்திக்காமல் தப்பி பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அந்த போட்டிக்கு தயார்ப்படுத்திகொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தப்பி பிழைக்கலாம் என்ற நிலையால் அதற்கு சிலர் குறுக்கு வழியையும் தேடத் துவங்குகிறார்கள். போட்டியில் வென்று உற்பத்திக்கு செல்பவரும் இந்த படிநிலையை கடக்க வழியில்லை என்னும் எண்ணத்தில் தானும் சொத்துடமை சமூகமாகும் எண்ணத்தில் தன் சந்ததியின் வளமான வாழ்விற்கும் அல்லது இருக்கும் சொத்து பாதுகாக்கும் எண்ணத்தில் தன் சந்ததிக்கு போட்டியை எளிதாக்கும் எண்ணத்தில் அவர்களும் குறுக்கு வழியை தேடுகிறார்கள். எந்த படிநிலைக்கு சென்ற பின்பும் தப்பி பிழைக்கும் போட்டியில் எது செய்தாலும் தவறில்லை. தப்பி பிழைத்தாலே முதன்மை என்னும் எண்ணத்தில் அந்த குறுக்கு வழியை கைவிட மறுக்கிறார்கள். சமூக அவலம் மெல்ல மெல்ல சமூக குற்றமாக மாற்றப்படுகிறது. சமூக குற்றமும் தவறில்லை நம் பிழைக்க வேண்டும் என்ற எண்ணமும் சிலரிடம் உருவாகிறது. சரி இதை ஒழிக்க என்ன செய்யலாம்? எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால் எதற்கு சமூக அவலம் தொடரபோகிறது?

அடுத்து காலம் காலமாக பெண்களை உற்பத்தியில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளனர். உற்பத்தியில் ஒதுங்கி இருக்கும் பெண்கள் இந்த சமூகத்தில் தன்னுடைய பங்கை ஆண்களை விட குறைவாகவே கொடுப்பதால் இயற்கையாகவே பெண்கள் வலிமை குறைவானவறாக சமூகத்தால் கற்பிதம் செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் வாழ்வியல் சந்ததி உற்பத்தி, சந்ததி வளர்ப்பு என்று பிரிக்கப் படுகிறது. இந்த வேலை பெண்களுக்கு இந்த வேலை ஆண்களுக்கு என்ற அவலங்களும் உருவாக்கிறது. எளியோர் மேல் வலியோர்க்கு இந்த சமூக அவலத்தால் வரும் அதிகாரம் பெண்களின் மேல் ஆட்கொள்கிறது. பெண்களும் தாங்கள் உற்பத்தியில் பங்கு கொள்ளாததால் தாங்கள் எளியோர் என்ற எண்ணம் மேலோங்கி அவர்களும் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு சென்று விடுகிறார்கள். எளியோரை வலியோர் எளிதில் வெல்லலாம் என்ற சமூக கற்பித்ததாலும் இருவருமே மனிதர் என்ற பார்வை நீங்கி பெண்கள் எளியவர்கள் என்ற பார்வையாலும் பெண்கள் மேல் தாக்குதல் எளிதில் தொடர்கிறது. இந்த சமூகத்தில் போட்டி வாய்ப்புகளில் தனக்கான இடத்தை உறுதி செய்யவும், பெண்கள் மேலான அதிகாரம் நிலைக்கவும் பெண்களை உற்பத்தியில் இருந்து ஒதுக்கியே வைத்து அவர்கள் அவ்வளவு தான் அதற்கு மேல் அவர்களால் முடியாது என்ற கருத்தை பெண்களுக்கு புகுத்துகிறார்கள். பெண்களும் தொடர்ந்து வரும் இந்த சமூக மாற்றத்தால் மெல்ல மெல்ல மேலோங்கிய தாழ்வு மனப்பான்மையால் நாம் இவ்வளவு தான் நம்மால் இவ்வளவு தான் முடியும் என்ற நிலையில் நின்று விடுகிறார்கள். உதாரணமாக சாலையில் செல்லும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்தால் இழுக்கு பெண்ணுக்கு மட்டுமே, வன்முறையாக கையை பிடித்தாலும் பெண்ணால் ஒன்றும் செய்ய இயலாது, பெண்களை விட ஆண்கள் மேல், பெண்கள் காமப்பொருள் போன்ற சமூக அவல கற்பிதத்தால் அங்கே ஒரு ஆண் ஒரு பெண்ணின் மேல் வன்முறையை தொடர்கிறான். இங்கு எளியோரும் அல்ல வலியோரும் அல்ல என்ற நிலை வந்தால்?

(என்ன செய்ய வேண்டும்?.. முடிவு உங்கள் கையில் ??)
 
Top