• Please use an working Email account to verify your memebership in the forum

ராஜிவ் காந்தி மரணமும் மர்மமும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

1991ஆம் ஆண்டு மே மாதம் 21 நாள் தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரைகாக வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.. அவர் விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டதாகவும் அதற்கு உதவியதாகவும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயஸ், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரும் இன்றும் சிறையில் உள்ளனர்.. இந்த கொலையை எங்கள் இயக்கம் செய்யவில்லை என்று இறுதிவரை பிரபாகரன் பல இடங்களில் பதிவு செய்தார்.. விடுதலைபுலிகளே என்று தீர்ப்பும் வந்தது.. ஆனால் இந்த கொலையில் அவிழ்க்கபடாத பல மர்மங்கள் இன்றும் அப்படியே உள்ளன..

1. மனித வெடிகுண்டு.. தற்கொலைப்படை என சொல்லப்பட்டவர் தனு என்ற தேன்மொழி ராஜரத்தினம்.. ஆனால் தனுவின் உடல் சிதறவில்லை.. ஆனால் ராஜிவ்காந்தியின் உடல் சிதறியுள்ளது எப்படி?

2. கட்சியின் முக்கிய தேசிய தலைவர் ஒரு பிரச்சாரத்திற்கு வரும் பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர், மூப்பனார் யாரும் உடன் செல்லவில்லை ஏன்?

3. ராஜிவ் சென்னை வரவேண்டாம்.. ஆபத்து இருக்கிறது என்று வாழப்பாடி ராமமூர்த்தி முன்கூட்டியே தடுத்தது எப்படி?

4. தமிழக தலைவர் ராமமூர்த்தி தடுத்தும் மரகதம் சந்திரசேகர் ஏன் ராஜிவை அழைக்க வேண்டும்.. அவசியம் என்ன? அழைத்த மரகதம் ஏன் உடன் செல்லவில்லை?

5. பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத்தின் எச்சரிக்கை ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?

6. கொலை விசாரணை அதிகாரி ரகோத்தமன் என்னை இயக்குனர் எம்.கே நாராயணன் வீடியோ பதிவுகளை பார்வையிட அனுமதிக்கவில்லை என்று சொன்ன குற்றச்சாட்டு என்ன ஆனது?

7. வீடியோ பதிவில் சரியாக மாலையிடும் பாகம் ஏன் அழிந்தது.. அந்த பகுதி பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானது என்ற பதில் ஏற்புடையதா?

8. திருச்சி வேலுச்சாமி கொலைக்கு முன்பே சுப்ரமணியசாமி ராஜிவ் இறந்துவிட்டாரா என்று கேட்டார்.. அவரை விசாரிக்க வேண்டும் என்றாரே.. ஏன் விசாரிக்கவில்லை?

9. ஜெயின் கமிசன் மற்றும் வர்மா கமிசன் விசாரணை அறிக்கையில் முக்கிய கோப்புகள் காணாமல் போனது எப்படி? அதில் அப்படி என்ன இருந்தது? யாரை காப்பாற்ற ஆதாரத்தை அழித்தார்கள்?

10. வெடிகுண்டு உற்பத்தி பற்றி விசாரணை முழுமை பெறவில்லை என்று ரகோத்தமன் சொல்லியும் பேட்டரி கொடுத்தார் என்று பேரறிவாளன் தண்டிக்கபட காரணம் என்ன?

11. ராஜிவின் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகார் ஏன் சென்னை வரவில்லை?

12. சுப்ரமணியசாமி, சந்திராசாமி, சந்திரசேகர், கசோகி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிசன் அறிக்கை சொல்லியதே.. ஏன் விசாரிக்கவில்லை?

13. தான் கொலை செய்யப்படும் முன்பு பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது அமெரிக்கா தான் என்று சொன்னாரே ராஜிவ்காந்தி.. இதில் சி.ஐ.ஏ விற்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்கப்பட்டதா?

14. ராஜிவ்காந்தி கொலையில் பன்னாட்டு சதியும் பல அமைப்புகளின் தொடர்பும் உள்ளது என்று உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் சொன்னாரே..அதை பற்றி முழுமையாக விசாரிக்கப்பட்டதா?

15. என் கணவரின் கொலையில் என் கட்சிக்குள் இருக்கும் பலருக்கு தொடர்பு உள்ளது.. அதை கண்டறிந்து தண்டனை வாங்கி தராமல் விடமாட்டேன் என்று சபதம் எடுத்து கட்சிக்குள் வந்த சோனியா காந்தி கண்டறிந்துவிட்டாரா?

இப்படி இன்னும் அவிழ்க்க படாத முடிச்சுகள் ராஜிவ்காந்தியின் கொலையில் அதிகம்..
 

Spike

Member
Messages
13
Points
13

Reputation:

Op இதை பற்றி ராஜீவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்துல படிச்சிருக்கேன். நேரு குடும்பத்தின் மரணங்கள்ல சர்வதேச சதிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த ஜெயின் கமிஷன் தான் மிக மோசமாக நடந்த விசாரணை கமிஷன்னு புரியுது. சுப்ரமணியசாமியும் சந்திரசாமியும் எப்படி இந்த கமிஷனை கேலிக்கூத்தாக்கினாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான். அதே போல நாலு பேருக்கு தூக்கு தண்டனை மூன்று பேருக்கு ஆயுள் தண்டனைனு திருப்பு அளிக்கப்பட்டப்ப, நான்கு பேர் அளித்த கருணை மனுவை பத்தே நாள்ல நிராகரிக்க முடிஞ்சது ஆளுனரால. இப்போ வரைக்கும் ஏழு பேரும் விடுதலை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது
இதெல்லாம் பேசி பேசி தீர்க்க முடியாதது. இது பற்றி முடிஞ்சா தொடர் பதிவுகள் போடுங்க op. இன்னும் நிறைய தெரிஞ்சிக்கனும் இதைப்பத்தி.
 
Last edited:

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Op இதை பற்றி ராஜீவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்துல படிச்சிருக்கேன். நேரு குடும்பத்தின் மரணங்கள்ல சர்வதேச சாதிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த ஜெயின் கமிஷன் தான் மிக மோசமாக நடந்த விசாரணை கமிஷன்னு புரியுது. சுப்ரமணியசாமியும் சந்திரசாமியும் எப்படி இந்த கமிஷனை கேலிக்கூத்தாக்கினாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான். அதே போல நாலு பேருக்கு தூக்கு தண்டனை மூன்று பேருக்கு ஆயுள் தண்டனைனு திருப்பு அளிக்கப்பட்டப, நான்கு பேர் அளித்த கருணை மனுவை பத்தே நாள்ல நிராகரிக்க முடிஞ்சது ஆளுனரால. இப்போ வரைக்கும் ஏழு பேரும் விடுதலை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது
இதெல்லாம் பேசி பேசி தீர்க்க முடியாதது. இது பற்றி முடிஞ்சா தொடர் பதிவுகள் போடுங்க op. இன்னும் நிறைய தெரிஞ்சிக்கனும் இதைப்பத்தி.
எனக்கு தெரிந்த, என்னால் முடிந்த அளவு பதிவிடுகிறேன்..
 
Top