• Please use an working Email account to verify your memebership in the forum

யானைகள் தினம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

யானை பற்றிய சிறப்பான தகவல்கள்.

யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும்.

யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.

அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.

சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும்.

ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும்.

சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.

யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும் யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது.

ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரம் வளர காரணமாகிறது.

அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக்கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த உயிரினத்தால்தான் உருவானது என்பதாக இருக்க வேண்டும்.

யானையை பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

தூய தமிழில் யானைக்கு 60 பெயர்கள் உள்ளது.

யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவில் இருக்காது.

யானையின் துதிக்கை 40,000 தசைகளால் ஆனது. இந்தியாவில் ஒரு லட்சம் யானைகள் இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் இப்போது இருப்பது 27312 யானைகள் மட்டுமே!!

யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

நோயுற்ற யானைகளுக்கு உணவையும், நீரையும் மற்ற யானைகள் ஊட்டும். நோயுற்ற யானைக்கு மற்ற யானைகள் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தும்.

யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை தன் நுகர்வுத்திறன் மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.

யானை தன் தும்பிக்கையால் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்கு தந்தம் கிடையாது.

ஆப்ரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு.

பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது.

கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை தான் இறப்பது உறுதி என்று தெரிந்தால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் முடிவை தானே தேடிக் கொள்ளும்.

ஞானிகள் உண்ணா நோன்பு இருந்து சமாதி நிலை அடைவது போல.

இப்போது நடந்த பாலக்காடு பெண் யானை சம்பவமும் அவ்வகையே.

இயற்கையை சமநிலை படுத்துவதில் யானையின் பங்கு மிகப் பெரியது.

அதை தெரிந்து தான் கேரள அரசு தனது அரசு முத்திரையில் இரண்டு யானைகளை வைத்துள்ளது.

கடந்த 8 மாதத்தில் தமிழகத்தில் 17 யானைகள் இறந்துள்ளன.. இதற்கு மனிதனே முதல் காரணி.. அடுத்த முறை நம்மில் யாரவது, ஊருக்குள் யானை வந்தால்,கல் கொண்டும், பீர்பாட்டில் கொண்டும் அதை தாக்க முற்படாமல் இயற்கையை சமநிலைபடுத்த இறைவனால் நமக்கு அனுப்பப்பட்ட ஒரு அருட்கொடையாக பாருங்கள்.




நன்றி
 
Top