• Please use an working Email account to verify your memebership in the forum

மௌனம் கலைத்த முந்திரிக்காடுகள்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நக்சல்லைட் என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ தீவிரவாதிகள் போலவும், வெறுமனே குண்டு வைப்பவர்கள் போலவும், மக்களுக்கு எதிரானவர்கள் போலவும் ஒரு தோற்றம் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது.. இந்திய ஒன்றியத்தின் விடிவெள்ளி நக்சல்பாரி இயக்கம். இவ்வியக்கம் சாதித்தது ஏராளம்.. மேற்குவங்காளம், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் வலுவாக இருந்த நக்சல்பாரி இயக்கம். தமிழகத்தில் அப்பு தொடங்கி, புலவர் கலியபெருமாள், தமிழரசன், தியாகு, திருவள்ளுவன், மாறன், சுந்தரம்,லெனின் என பலர் நக்சல்பாரி இயக்கத்தின் உறுப்பினர்களே. நக்சல்பாரி தோழர்கள் பற்றி நேர்மறை எழுத்துக்களை வடக்கில் அருந்ததிராய் அவர்கள் முன்னெடுத்தார்.. ஆனால் தெற்கு?

தோழர் வள்ளுவன் அவர்களின் மகள் ஊர்மிளா வள்ளுவன் அவர்கள் தொகுத்த இந்த நூல் 80 பக்க அணுகுண்டு.. தன் தந்தையின் வாழ்க்கையை குறிப்பிடும் இந்த நூலில் அவர் நக்சல்பாரி தோழர்கள் குறித்தும், அவர்கள் அனுபவித்த துன்பம் குறித்தும், யாருக்காக உயிரைக் கொடுத்தார்களோ அந்த மக்களால் உதாசினப் படுத்தப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் வருத்தம் இன்றி மக்களுக்கு அவர்கள் உழைத்த தன்னலமற்ற உழைப்பைபற்றியும், அவர்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் ஓரளவு இந்த நூல் குறிப்பிடுகிறது.. இந்த ஆரம்பம் இனிதே தொடர்ந்து பல நூல்கள் ஆகட்டும் ❤
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

இதில் தோழர் தியாகு அவர்களை பற்றி அறிந்திருக்கிறேன். தமிழரசன் அவர்களும் புலவர் கலியபெருமாள் அவர்களும் இறந்து விட்டாலும், அவர்கள் பெயர்கள் இப்போதும் சன்னமாக எங்கோ சிற்சில இடங்களில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
எல்லாம் சரிதான். ஆனால் ஆயுதம் ஏந்தித்தான் போராட வேண்டுமா அண்ணா? நேதாஜி வழி வெள்ளையனுக்கு எதிராக சரி.. ஆனால் நம்மவர்களுக்கு எதிராக என்றால்??
அங்கே தான் சற்றே முரண்படுகிறது நெஞ்சம்!
ஏனெனில் வெட்டுபவர்களும் வெட்டப்படுபவர்களும் நம்மவர்கள் தானே??
 
ஆனால் வெட்டியவன் வேறு வர்க்கம்.. வெட்டப்பட்டவன் வேறு வர்க்கம்.. அங்கே முரண்படுகிறதே.. கீழ்வெண்மணியில் 42பேரை எரித்துக் கொன்றவனுக்கு எதிராக எப்படி அகிம்சை உபயோக்கிக்க முடியும்? வெள்ளைக்காரன் நம்மை சுரண்டினான்.. இங்கே இருந்த பண்ணையார்களும் நம்மை சுரண்டினார்கள்.. என்ன வேறுபாடு? இதற்கு தோழர் வள்ளுவனின் வரிகள் பதிலாகக் கொடுத்தால் சரியாக இருக்கும்.. நாங்கள் வெறுமனே ஆயுதத்தை ஏந்திய வறட்டு சிந்தனைவாதிகள் அல்ல.. மக்களுக்கு எதிரான வன்முறைக்கு அவர்கள் கையில் ஆயுதம் இருக்கும் போது நாங்கள் வெறுமனே போராட முடியாது.

பிற்காலத்தில் அவர்கள் ஆயுதம் மட்டுமல்ல.. மக்கள் திரள் போராட்டம் பலவும் செய்தனர்..
 
purigirathu.. naan evvagai aayutham yentha vendumena en ethiraaliye mudivu seigiraan endru thalaivar Prabakaran solliyathu pola...
 
Top