Phoenix
Elite member
- Messages
- 1,040
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
சற்றே உப்பிய ஆப்பிள் கன்னங்களில் கண்ணீர் கோடுகள் தெரிய
ரோஜாப்பூ உதடுகள் துடிக்க, நெற்றிப்பொட்டை நீவி விட்டபடியே அவள்!
பூமாதேவியின் காதுகளுக்கு கூட எதுவும் கேட்கக் கூடாதென பூனை நடை நடந்தபடியே அவளருகில் செல்லும் நீ!
நடக்கும் நாடகத்தை ஓரக்கண்ணில் பார்த்தும் பாராததைப் போல புத்தகம் கொண்டு முகம் மறைத்தபடியே நான்!
"ரொம்ப வலிக்குதா?" கிசுகிசுப்பான உன் குரலுக்கு, தன் பட்டுச் சுருள்கள் நாலா திசைகளிலும் சிதற, ஆமோதிப்பான தலையசைவு அவளிடமிருந்து...
"திருப்பி அடிச்சிடுவோமா?" - மறுபடியும் உன் குரல்! கண்கள் பறக்கும் தட்டுக்களாய் விரிய முன்பை விட வேகமான தலையாட்டல்!
பூக்குவியலை முதன்முறை கையில் எடுப்பவனை போல மென்மையாக அவளை ஏந்திய படியே மெல்ல என்னை நோக்கி நடந்தாய் நீ...
"ம்ம்ஹும்!" வேகமாக வந்த உன் செறுமலுக்கு பதில் உயர்ந்த என் ஒற்றை புருவம் மட்டுமே!
அதில் என்ன கண்டாயோ, "அம்மாதான! பாவம்... மண்ணிச்சிடலாம் கண்ணா..." என்றபடியே நகர்ந்துவிட்டாய்!
ஒரு சன்னச் சிரிப்போடு நான் தலை சாய, நமட்டுச் சிரிப்போடு நம்மை பார்த்தபடியே சற்றே விவரம் புரிந்த நம் மகன்...
உன்னை உன் அன்னை வளர்த்தபடி அவனை நானும் பிசிரில்லாமல் வளர்க்கிறேன்...
இருவருமே மெளனங்களை மொழிபெயர்க்கத் தெரிந்தவர்கள் தாம்!