• Please use an working Email account to verify your memebership in the forum

முள்ளிவாய்க்கால்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஈழ நண்பரின் கீச்சு

முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 4,20000 மக்கள் வசிப்பதாக 2008 கணப்பெடுப்பில் சொல்லப்பட்டது.. இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மையம் எடுத்த கணக்கெடுப்பு அது.. 2009ல் மே மாதம் இனப்படுகொலையின் பின் முகாமில் தஞ்மடைந்தோர் 2,70000 பேர் மட்டுமே.. முள்ளிவாய்க்காலில் மட்டும் 1,50000 என்ன ஆனார்கள் என்று இன்று வரை விடை இல்லை... இனப்படுகொலையில் இறப்பு 40000 பேர் என்கிறது சிங்கள அரசு.. ஆனால் முள்ளி வாய்க்காலிலேயே இறந்தோர் 150000 பேர் என்பதே மிகப்பெரும் வலி...

மே 17 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பெரும் திரளாக திரண்டனர்.. ஓர் ஊசியை கீழே போட்டாலும் அது நிலத்தில் விழாது.. அந்த அளவிற்கு மக்கள் அடர்த்தி மிகுந்தது.. காரணம் உயிர் ஓலம்.. மேலும் பாதுகாப்பு பகுதியெனும் மக்கள் எண்ணம்.. சிங்கள அரசு அந்த பகுதியை தாக்க மாட்டோம்... அது மக்களுக்கான இடம் என்ற அறிவிப்பு.. தமிழக அரசியல்வாதிகள் நாங்கள் இந்திய அரசிடம் பேசிவிட்டோம்.. போர் முடிந்துவிட்டது இனி தாக்குதல் நடக்காது என்று சுயநலத்திற்காக சொன்ன பொய்கள்.. இப்படி பல முரண்கள் அந்த மக்களை ஆசுவசமாக முள்ளிவாய்காலில் நிறுத்தியது..

ஆனால் சிறுது நேரத்தில் மழைபோல் பொழிந்த ஷைல் எனப்படும் தடைசெய்யப்பட்ட ரசாயன குண்டுகள் அங்குள்ள மக்களின் நம்பிக்கையை உடைத்தது.. மக்கள் பெருவாரியாக இருந்த நந்திக்கடல் பரப்பு எல்லையிலும் வீடுகளிலும் பொழிந்தன.. புல் பூண்டு கூடமுளைக்க தேவையில்லை என்ற எண்ணத்தின் பிரதிபழிப்பாய் குண்டுகள் தன்க டமை ஆற்றின.. நந்திக்கடல் தாய் ஆற்றிமை கொண்டு தன் நிறம் மாற்றினாலோ அல்லது மக்களின் குருதி குடித்தாலோ செவ்வண்ணம் தோய்த்து நின்றாள்..

துவாரகை, சார்லஸ் போன்றோர் மாலதி மடத்தில் கொல்லப்பட்டனர்.. ஏனைய புலிகளும் தன் கடமை ஆற்றி ஓய்வாய் மரணம் தழுவினர்.. ஆனால் மக்கள் நிலை?

தன் தாய் இறந்ததை அறியாமல் பால் சுரக்குமா என்று ஏங்கி கச்சைகளை சுவைத்து வராத ஏமாற்றத்தில் அழுத குழந்தை.. தன் குழந்தைக்கு பாலுட்டும் கச்சைகளை கயவர் அறுத்தெறிய வலியில் இறந்த பெண்டீர்.. தந்தை முன் நிர்வாணமாய் நின்ற மகள்.. மகள் மற்றும் ஊரார் முன் நிர்வாணமாய் நின்ற ஆண்கள்.. சகோதரன் முன் கற்பழிக்கபட்ட பெண்டீர்.. இப்படி சொல்லும் வேலையில் குருதி உறையும் குரூரங்கள் வரிசையாய் அரங்கேறின..

உலகிற்கு வேண்டுமானால் இது கடந்து செல்லும் நிகழ்வாய் இருக்கலாம்.. ஆனால் கச்சை இழந்த இசைபிரியா.. பச்சை பாலகன் பாலகுமாரன்.. சொறு இன்றி பட்டினியில் மாண்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கு இது வடுView attachment View attachment View attachment View attachment
 
Last edited:
Top