• Please use an working Email account to verify your memebership in the forum

முதலாம் நரசிம்ம வர்மன் ( மாமல்லன்)

Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

  • Thread starter
  • Moderator
  • #1
பல்லவர்கள்

பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தற்போது உள்ள காஞ்சியை ( காஞ்சிபுரம் ) தலைநகரமாக கொண்டு தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.

முதலாம் நரசிம்ம வர்மன் ( மாம்மல்லன்)

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவராவார் . இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன்.

இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.
நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,' என்பன

மகேந்திரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது.இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினர். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.

அவரை பற்றி ஏதேனும் விரிவான தகவல்கள் இருந்தால் பகிருங்கள்

நன்றி !
 

Attachments

  • 0 bytes · Views: 1
Last edited:
Top